கவிதை இலவசமாக எழுதி தருவேன்
நீங்கள் கேட்டால்
தமிழ் கவிதைகள்
கவலைகள் மாறும் காலம்
ஒரு நாள் உன்னைத் தேடும்
வசந்த காலமும் வரும்
உன்னை வான்புகழை
அடையச்செய்யும்
துன்பங்கள் மாறும்
துயரங்கள் மாறும்
இன்பங்கள் வரும்
இன்னிசை மழையை தரும்
சிரமங்கள் திரும்
சீக்கரம் விடியல் பிறக்கும்
உன் வேதனைகள் வற்றி போகும்
வலியும் தள்ளிப்போகும்
காயங்கள் ஆறும்
உன் கண்ணீர் காயும்
உன் தோல்விகள் தோற்றுப்போகும்
வரும் வெற்றிகள் உனக்கு வாழ்த்து கூறும்
கற்பனை காவியம் ஆகும்
வரும் சரித்திரம் உன்னை தேடும்
துயரங்களை எண்ணி துயராதே
உனக்கு திறமை இருக்கு அதை மறவாதே
✨👍✨🔥✨👏✨
நம்ம வலையொளி குழுவில் கவிதைக் காணொளிகள் தினந்தோறும் பதிவு செய்ய படுகிறது.
நமது வலையோளி அலைவரிசையை ஆதரிக்கும் அத்தனை இதய ❤️ உள்ளங்களுக்கும் என் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
வாழ்க வளத்துடன் என்றும் அன்புடன் ✨💝✨சதிஷ் குமார் நாராயணன்.