Channel Avatar

Indian Cosmic Science @UCh-VQW9WTjwhvejw-rw6veA@youtube.com

438K subscribers - no pronouns :c

His Holiness Brahma yogi Shri Sathyadev Roshan Master of Inn


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Indian Cosmic Science
Posted 1 month ago

71 - 5

Indian Cosmic Science
Posted 2 months ago

www.instagram.com/reel/DAl8oecMFcw/?igsh=dDJoZzltY…

Our Instagram Page Link

108 - 4

Indian Cosmic Science
Posted 2 months ago

143 - 3

Indian Cosmic Science
Posted 2 months ago

129 - 3

Indian Cosmic Science
Posted 2 months ago

164 - 8

Indian Cosmic Science
Posted 2 months ago

சுய விசாரணையை எவ்வாறு செய்வது - கோட்பாடு...
.
சீடர்: ஒருவன் எப்படி விசாரிப்பது: 'நான் யார்?'என்று...
.
ரமண மகரிஷி: 'போவது', 'வருவது' போன்ற செயல்கள் உடலுக்கு மட்டுமே சொந்தமானது. எனவே, "நான் சென்றேன், வந்தேன்" என்று ஒருவர் கூறும்போது, அது உடல் 'நான்' என்று கூறுவதாகும்.

ஆனால், உடல் பிறப்பதற்கு முன் இல்லாததாலும், ஐம்புலங்களால் ஆனதாலும், ஆழ்ந்த உறக்கத்தில் இல்லாததாலும், இறந்தவுடன் பிணமாகிவிட்டதாலும், உடலை 'நான்' என்ற உணர்வு என்று சொல்ல முடியுமா? ? மரக்கட்டை போல ஜடமாக இருக்கும் இந்த உடலை 'நான்-நான்' என்று பிரகாசிப்பதாகச் சொல்ல முடியுமா?
.
எனவே, உடலைப் பற்றி முதலில் எழும் 'நான்' உணர்வு சுய-அகங்காரம் (தர்போதம்), அகங்காரம் (அஹங்காரம்), அஞ்ஞானம் (அவித்யா), மாயா, அசுத்தம் (மாலா) மற்றும் தனிப்பட்ட ஆன்மா (ஜீவா) எனப் பலவாறு குறிப்பிடப்படுகிறது. ) .
.
இதை விசாரிக்காமல் இருக்க முடியுமா? 'ஆத்ம அகங்காரம்' அழிவதை விடுதலை (முக்தி) என்று எல்லா சாஸ்திரங்களும் பிரகடனப்படுத்துவது விசாரணையின் மூலம் நம் மீட்பிற்காக அல்லவா?
.
சீடர். நான் யார்?

ரமண மகரிஷி: ஏழு சுவைகள் (தாதுக்கள்) கொண்ட மொத்த உடல், நான் இல்லை;
.
ஐந்து புலனுணர்வு உறுப்புகள், அதாவது. கேட்டல், தொடுதல், பார்வை, சுவை மற்றும் வாசனை ஆகிய புலன்கள், அந்தந்த பொருட்களைப் பிடிக்கின்றன, அதாவது. ஒலி, தொடுதல், நிறம், சுவை மற்றும் வாசனை, நான் இல்லை;
.
ஐந்து அறிவாற்றல் உணர்வு உறுப்புகள், அதாவது. பேச்சு, இயக்கம், பிடிப்பு, வெளியேற்றம் மற்றும் இனப்பெருக்கம் ஆகிய உறுப்புகள், அந்தந்த செயல்பாடுகளாக பேசுதல், நகர்த்துதல், கிரகித்தல், வெளியேற்றுதல் மற்றும் அனுபவித்தல் ஆகிய உறுப்புகள், நான் இல்லை;
.
ஐந்து முக்கிய காற்றுகள், பிராணன், முதலியன, முறையே சுவாசம் முதலிய ஐந்து செயல்பாடுகளைச் செய்கின்றன, நான் அல்ல;
.
நான் இல்லை என்று நினைக்கும் மனமும் கூட; பொருள்களின் எஞ்சிய பதிவுகள் மட்டுமே உள்ள அறிவியலும், அதில் பொருள்கள் மற்றும் செயல்பாடுகள் எதுவும் இல்லை, நான் இல்லை.
.
சீடர். நான் இவர்களில் யாரும் இல்லை என்றால், நான் யார்?

ரமண மகரிஷி: 'இது இல்லை', 'இது இல்லை' என்று மேலே குறிப்பிட்ட அனைத்தையும் மறுத்த பிறகு, அந்த விழிப்புணர்வு மட்டுமே எஞ்சியிருக்கிறது - நான் என்று....

43 - 3

Indian Cosmic Science
Posted 2 months ago

⭕🔹🟠🟠🔹❤️🌸 கொடுப்பதா...???

பிடித்துக் கொள்வதா...???

ஞானம் பெற ஓஷோ கூறிய விளக்கம்

கேள்வி பதில்கள் :

கேள்வி : – ஓஷோ....

ஒருவன் மிகுந்த ஒழுக்கம் உள்ளவனாகவும்

பூஜை, விரதம் என்று கடவுள் வழிபாட்டில் இருக்கிறான்

ஏன் பெரும்பாலான பிராமணர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்

இவர்களால் ஞானநிலையை அடைய முடியுமா...???
.
பதில் : –

”இதைப்பற்றி பல இடங்களில் நான் பேசியிருக்கிறேன்

இவர்கள் உடல் அளவில், மன அளவில் மிகுந்த ஆரோக்கியம் உள்ளவர்வர்களாக இருக்கலாம்

அவர்களுடைய எதிர்பார்பு மிகக் குறைவாகக்கூட இருக்கலாம்

சிறந்த அறிவாளியாக இருக்கலாம்

என்ன பிரயோஜனம்....???

இவர்களுடைய மனம் வலிமையாகவே இருக்கும்

எந்த மனம், இந்த உலக வாழ்க்கைக்குத் தேவையோ

அதே மனம் ஞானத்தை அடைய பெருந்தடங்களாகவே இருக்கிறது

என்ன செய்வது....???

பிராமணர்களில் ஞானம் அடைந்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்

பெரும்பாலோர் கடவுளைத் தன் மனதால் நெருங்கவே ஆசைப்படுகிறார்கள்

இது நடக்கக்கூடிய காரியம் இல்லை

ஒருவன் ஒழுக்கத்தில் மிகவும் மட்டமானவனாக இருக்கலாம்

கடவுளைக்கூட திட்டலாம்

ஆனால்

அவனுக்குத் தன் மனதை ஒதுக்கும் கலை தெரிந்திருந்தால்

அவனால் நிச்சயம் ஞானம் அடைய முடியும்

ஆக

ஒழுக்கத்திற்கும் ஆச்சாரம் பூஜை புனஸ்காரம், கொள்கை, கோட்பாடுகளுக்கும்,

கடவுள் தன்மையை அடைவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை

ஆனால் அவர்கள் கடவுள்களை – உதாரணமாக ராமன், கிருஷ்ணன், காளி, முருகன், அனுமன், ஜீசஸ், அல்லா ……

இப்படி பல உருவங்களை அடையலாம்

இது அவர்களது மனம் செய்யும் மாயை

கேள்வி : – ஓஷோ ...

நீங்கள் ஏன் தியானத்தை ஒரு "இறக்கும் கலை ” என்று அழைக்கிறீர்கள்

அதை ஏன் "வாழும் கலை" என்று சொல்லக்கூடாது...???
.
பதில் : –

”நான் அப்படி அதை "வாழும்கலை" என்று சொன்னால்

உங்கள் அகங்கார மனம் திருப்தியடையும் என்று கருதித்தான்

அப்படி இறக்கும்கலை என்று குறிப்பிட்டேன்

ஒரு நிகழ்ச்சி …

ஒரு பெரிய தலைப்பாகை அணிந்த ஒரு யூதப்பாதிரியார் ஒரு கிணற்றில் தவறுதலாக விழுந்து

‘உதவி, உதவி' என்று கத்தினார்

மக்கள் மேலே கூடி நின்று வேடிக்கை பார்த்தார்கள்

அப்பொழுது ஒருவர் தன் கையை உள்ளே நீட்டி

‘உங்கள் கையைக் கொடுங்கள்' என்று கேட்டார்

ஆனால் அவர் அதைக் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை

மீண்டும் மீண்டும் ‘உதவி, உதவி' என்று கத்திக்கொண்டு இருந்தார்

கடைசியில் முல்லா நசுருதீன் அங்கு வந்து எட்டிப்பார்த்து

'என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்'என்றார்

உடனே அந்தப் பாதிரியார் அவர் கையை ‘கப்' பென்று பிடித்துக்கொண்டார்

பிறகு அவரை மெல்ல இழுத்துக் காப்பாற்றினார்கள்

அப்பொழுது ஒருவர் முல்லாவிடம்

'நீங்கள் மட்டும் எப்படி அவரைக் காப்பாற்றினீர்கள்..???' என்று கேட்டார்

அதற்கு முல்லா

‘அது வேறு ஒன்றுமில்லை‘

'கொடுங்கள் ‘ என்ற வார்த்தையைக் கேட்டால்

கஞ்சன்கள் எதையுமே கொடுக்க மாட்டார்கள்

நான் என் கையை நீட்டி ‘ல் 'பிடித்துக்கொள்ளுங்கள்' என்று கூறினேன்

அதுதான் காரணம்' என்றார்

நான் தியானத்தை வாழும் கலை என்று சொன்னால்

உங்கள் மனம் 'ஆமாம், நாம் செய்வது சரிதான்

நான் வளர்ந்து மிக நல்ல நிலைக்கு வருவேன்' என்று கூறும்

ஆனால் தியானம் செய்வது உண்மையில் உங்கள் மனம் இறக்கும் வேலைதான்

மனம் என்றாலே அகங்காரம்தான், பொய்தான்

அதை அழிப்பதுதான் தியானத்தின் குறிக்கோள்

உங்கள் அகங்காரம்

உங்கள் தன்முனைப்பு

உங்கள் அவலட்சணங்கள் வளர்ந்தால்

அது உங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் கழுத்தை இறுக்கிவிடும்

உங்களைச் சுற்றி ஒரு சிறையை உண்டாக்கிவிடும்

எது உங்களுக்கு முதலில் இன்பமாக இருந்ததோ

அதுவே பிறகு உங்களுக்கு நரகமாகி விடும்

ஆகவே

தியானம் என்பது உங்கள் அகங்காரத்தின் மரணம்தான்' 🌸🟠🟠🟠
ஓஷோ

49 - 4