அருள்மிகு பொன்னேஸ்வரிஅம்மன் திருக்கோயில், பொன்மலை, திருச்சி.
temple.dinamalar.com/new.php?id=2101
Ponmalai Ponneswari Amman temple
#PonmalaiPonneswariAmman#Ponneswari
கோயிலின் உள்ளே சென்று மலையை நோக்கி படிகளில் ஏறிச் சென்றால், மலைமீதுள்ள முத்துக்குமாரசுவாமி கோயிலை அடையலாம். மைந்தனையும் தன்னருகே இருத்திக்கொள்ள விரும்பிய அன்னை, மலைமீது தன் புதல்வனுக்கு ஓர் அழகிய கோயிலை அமைத்துக் கொடுத்திருக்கிறாள். பின்புறம் நெடிதுயர்ந்த பொன்மலை காட்சி தர, ரம்மியமான சூழலில் அருள்கிறார் முருகப்பெருமான்.
கோயில் கருவறையில் அன்னையின் இரண்டு வடிவங்கள் காட்சி தருகின்றன. பழைய திருவுருவம் பின்புறமும், புதிய திருவுருவம் முன்புறமுமாக இரு அம்மன்களும் ஒரே சன்னதியில் அருள் பாலிக்கின்றன.