in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
வணக்கம்,
நமது இந்த மாத சந்திப்பு/பயிலரங்க நிகழ்ச்சி 25.02.2024 அன்று நடக்கவிருக்கிறது. விருப்பமுள்ள அன்பர்கள் GPAY/BHIM/UPI வழி கட்டணம் ₹250 செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
இது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கலந்த HYBRID நிகழ்ச்சி. நேரடியாக வர முடியாதவர்கள் Onlineஇல் கலந்து கொள்ளலாம்.
நன்றி
அபரிமித அன்புடன்,
ஏ.வி.ஆர்.
11 - 0
அனைவருக்கும் வணக்கம்,
நாம் ஏற்கனவே அறிவித்திருந்த படி வரும் ஜனவரி 2025 க்குள் எழுத்து மற்றும் படைப்பார்வம் மிக்க 100 பேர்களின் புத்தகங்களை பிரசுரிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி இருக்கிறோம். உங்களுக்கு இல்லையென்றாலும் உங்கள் நட்பு மற்றும் உறவு வட்டத்தில் யாருக்காவது உதவும். அன்புடன் இந்த தகவலை பகிர்ந்து இந்த திட்டம் வெற்றியடைய உதவுங்கள். நன்றி. விவரங்களுக்கு என்னை தொடர்பு கொள்ளவும்.
நன்றி🙏🙏
அபரிமித அன்புடன்,
ஏ. வி. ஆர்.
7 - 0
வணக்கம்,
மனதில் பல நாட்களாக உறங்கிக் கிடந்த சில நல்ல திட்டங்களை செயல்படுத்த நேரம் வந்து விட்டதை உணர்கிறேன். அகம் அற்புதத்தின் நோக்கமாகிய ”நான் - குடும்பம் - சமூகம் - உலகம்” என்ற மாற்றத்திற்கு சில “ஒளி பொருந்தியவர்களோடு” இணைந்து செயல்பட உள்ளோம்.
அந்த வகையில் நல்ல எழுத்தும் படைப்பும் பலரின் வாழ்க்கையில் வேண்டும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. என்னையும் என் வாழ்வையும் மாற்றியது எழுத்துப் புத்தகங்களே.
நான் அறிந்தவையை எழுத்துக்களாக பகிர நினைத்த போது நான் சந்தித்த சவால்களை நான் கடந்த விதத்தையும் என் அனுபவங்களையும் இதே போல தன் எழுத்துக்களை/படைப்புக்களை புத்தகங்களாக பார்க்க விரும்பும் சகலருடனும் பகிர்ந்து அவர்கள் புத்தகக் கனவினை நிஜமாக கையில் புத்தகமாக நிலை நிறுத்தி அந்த புத்தகம் உலகம் முழுவதும் பரவிட செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வதற்கு உதவி செய்யவிருக்கிறேன்.
புத்தகம் எழுதினால் மட்டும் போதாது, அந்த புத்தகம் இருக்கிறது என்று உலகிற்கு சரியான ரீதியில் அறிவித்தால் தான் அந்த புத்தகம் விற்பனையாகும், எழுத்துக்கள் வாசக நெஞ்சங்களை சென்றடையும், சொல்ல வந்த விஷயங்கள் சரியானவருக்கு கொண்டு செல்லப்படும்.
இதை நிறைவேற்றவே இந்த “மிஷன் புத்தகங்கள் 100” திட்டம்
இந்த விஷயங்களை புத்தகம் படைக்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொருவருக்கும் கொண்டு சென்று, அடுத்த ஜனவரி 18.01.2025க்குள் நூறு பேரையாவது புத்தகங்கள் எழுத வைக்க வேண்டும், அந்த புத்தகங்களை பிரசூரித்து அதை பிரபலப்படுத்த வேண்டும் என்பதே திட்டம்.
இந்த திட்டத்தில் புத்தகக் கனவுடைய ஒருவர் இணைந்து பயிற்சி பெற்று, தனது புத்தகக் கனவை /எழுத்தாளர்/ படைப்பாளி கனவை நிறைவேற்றிக் கொள்ளலாம். புத்தகத்தை சரியாக எழுதும் வழிகளைக் கற்றுக் கொடுத்து, அதனை டிசைன் செய்து பிரிண்ட் செய்து தருவதுடன் சந்தையில் பலருக்கும் எடுத்து செல்லும் மார்க்கெட்டிங் உத்திகளையும் பகிர்ந்து கொள்ள உள்ளோம்.
எந்தவிதமான ஒளிவு மறைவுமில்லை. மேற்கண்ட விஷயங்களுக்கு ஒரு சிறிய கட்டணம் உண்டு. ஆனால் அது வெளியாரைக் காட்டிலும் 10ல் ஒரு மடங்கு கட்டணம் மட்டுமே.
அடுத்த ஜனவரி 18, 2025க்குள் 100 புத்தகங்கள். இதுவே முக்கிய லட்சியம். இணைய விருப்பமுள்ளவர்கள் மேலும் விவரங்களுக்கு என்னைத் தொடர்பு கொள்ளலாம்.
வாட்சாப் - +919894265400
அபரிமித அன்புடன்,
ஏ.வி.ஆர்.
16 - 0
ஆல்ஃபா அட் ஒமேகா ஃபௌண்டேஷன் 12 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் (18.01.2012) மனிதத்திற்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் சிறிய வலைதளமாக தொடங்கப்பட்டது. பல பேரின் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் இன்றளவும் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் இதை தாயன்புடன் வழிநடத்தி வரும் எல்லாம் வல்ல இறை பேராற்றலுக்கும், அன்புள்ளம் கொண்ட தங்களனைவ்ருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.🙏🙏🙏 @VinothRajesh
19 - 3
அன்பர்களனைவருக்கும் வணக்கம்,
புதிய வருடத்தில் எல்லாம் வல்ல இறைபேராற்றலின் அன்பு வழிநடத்துதலோடு உத்வேகத்துடன் பல செயல்களும் நடந்தேறி வருகின்றன. ஆல்ஃபா அட் ஒமேகா - அகம் அற்புதத்தின் நோக்கங்கள் ஈடேற “அகம் அற்புதம்” குடும்பத்தை வளர்த்தெடுக்க வேண்டும். அதற்கு நேரடி சந்திப்புகள் மட்டுமே வழிவகுக்கும் என்ற காரணத்தினால் மீண்டும் சந்திப்பு நிகழ்ச்சிகளை ஒரு புதிய வடிவில் நடத்துவதென்று தீர்மானித்துள்ளோம். இதற்கான பல கருத்துக் கேட்புக்கள் நம் குழுவிலும், பிற இடங்களிலும் கடந்த வருடம் நடத்தினோம். இதன்படி வரும் 21.01.2024 ஞாயிற்றுக் கிழமை அன்று நமது ஆல்ஃபா அட் ஒமேகாவின் 12வது ஆண்டுவிழாவையும், 13ம் ஆண்டு தொடக்கத்தினையும் கொண்டாடும் விதமாக இந்த வருடத்தின் முதல் சந்திப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம்.
ஈர்ப்பு விதி உட்பட்ட பிரபஞ்ச விதிகளை நம் வாழ்க்கையில் வளம் பெற எப்படி புரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படை கருத்தின் மையத்தில் இந்த மாதாந்திர சந்திப்பு நிகழ்ச்சிகள் இருக்கும். உரையாடல், சுய-ஆய்வு, செயல்முறை பயிற்சி என்ற விதத்தில் இப்பயிற்சி நிகழ்ச்சிகள் அமைக்கப்படுகின்றன. அனுமதிக் கட்டணம் மிகக் குறைந்த அளவில் ₹250 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி ஒரே சமயத்தில் நேரடியாகவும் நேரலையாகவும் (Online and Offline Hybrid) நடக்கும்படி அமைக்கப்படுகின்றது. நேரில் வந்து கொள்ள இயலும் அன்பர்கள் நேரிலும், இயலாதவர்கள் ஜூம் வழியும் கலந்து கொள்ளலாம்.
இதுவரை ஈர்ப்பு விதி உட்பட்ட பிரபஞ்ச விதிகள் பயன்படுத்தியோ, ஆழ்மனப் பயிற்சிகள் செய்தோ பலன்கள் காணாதவர்க்கு இந்நிகழ்ச்சி சரியான பாதையை வகுத்துத் தரும்.
வரும் ஜனவரி 21ம் தேதிக்கான தகவல்களை பகிர்ந்துள்ளோம். விருப்பமுள்ள அன்பர்கள் பதிவு செய்து கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நிகழ்ச்சிக்கான இருக்கை முன்பதிவு அவசியம். பதிவினை கீழ்காணும் லின்கிலோ அல்லது GPAY/PHONEPE/UPI வழி கட்டணம் செலுத்தியோ முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இணையத்தில் பதிவு செய்ய : www.agamarputham.in/selfreflectionworkshop
GPAY/PHONEPE/UPI வழி கட்டணம் செலுத்தி பதிவு செய்ய : +91 9894265400
விவரங்களுக்கு வாட்ஸாப் வழி +91 98942 65400 என்ற எண்ணில் அணுகவும்
வாழ்க வளமுடன்,
அபரிமித அன்புடன்,
ஏ.விஆர்.
10 - 0
அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
அகம் அற்புதம் ஒரு சிறிய பேஸ்புக் குழுவாக 2016ல் தொடங்கியது இந்த நாளில் தான். அப்படி இப்படி என்று 6 வருடங்கள் ஓடி விட்டது. ஆல்பா அட் ஒமேகா பௌண்டேஷனின் நோக்கங்களை பூர்த்தி செய்ய தமிழ் பேசும் நல்லுலகத்திற்கு சோஷியல் மீடியா உட்பட அனைத்து ஊடகங்கள் வழியே செயல் புரிய ஆரம்பிக்கப்பட்டதுதான் அகம் அற்புதம்.
ஆறு ஆண்டுகள் பூர்த்தி செய்து விட்டோம் என்று பெருமையாக சொல்வதற்கு பதில் இந்த ஆறு ஆண்டுகளில் என்ன செய்திருக்கிறோம் என்று பார்க்கும் போது இறை பேராற்றலை நோக்கி "இன்னும் பயிற்சி வேண்டுமோ?" என்று கேட்கதான் தோன்றுகிறது.
"Big Billion Days"இல் இத்தனை கோடி வருமானம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றன இந்த நிறுவனங்கள் என்ற விளம்பரங்கள் பார்க்கும் போது Impulsive Consumerism எந்த மோசமான உச்சத்தை தொடுகிறது என்பதை பார்க்கமுடிகிறது. ஆனால் வாழ்வில் நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ள முயற்சி எடுக்கிறோம் மாதம் ரூ.600 மட்டும் தான் செலவு என்றால் மௌனம் தான் பதில். "பலரும் இலவசமாக சொல்லித் தருகின்றனரே சார். தினசரி ஒரு மணி நேரம் நீங்கள் வகுப்பு வையுங்கள். வருகிறோம்" என்ற கமெண்ட் தான் பதில். உண்மையானவற்றை பகுத்தறிய தெரியவில்லையே இவர்களுக்கு என்ற ஆதங்கமும் வேதனையும் மட்டுமே நான் சம்பாதித்தது.
இந்த ஒரு வருடத்தில் அகம் அற்புதம் எதுவும் செய்ய முடியாமல் தேங்கி போனதைக் காணும் போது, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மௌனத்தில் ஆழ்ந்து போன தினங்கள் தான் எத்தனை? சரி சொல்ல வரும் விஷயங்களை ஒரு புத்தகம் வழி சொல்வோம் என்றால் மொத்தம் விற்பனை 17 காப்பிகள். ஒரு புதிய சானல் தொடங்கியிருக்கிறேன் சப்ஸ்க்ரைப் செய்து ஆதரவளியுங்கள் என்றால் - வேண்டாம் அதை சொல்லி என்ன பயன்? பெரும் நேரமும் Art of Appreciation எனும் இன்னும் யாருக்கும் சரி வர புரியவில்லையோ என்று தோன்றும். ஒருசில நல்ல முயற்சிகளை "நன்று" என்று சொல்லக்கூட முடியாத மனித மனங்களை என்னவென்று சொல்வது? வாழ்க வளமுடன்!
"நீங்கள் வெள்ளை உடை அணியவில்லை. தாடி வைக்கவில்லை. பின்னால் ஒளிவட்டம் வைத்து வீடியோ போடவில்லை. வசீகரமாக எதுகை மோனை வைத்து பேசவில்லை" என்று எத்தனை தேவையில்லாத விமர்சனங்கள். இப்படியெல்லாம் இருந்தால் தான் ஆன்மீகத்தை, வாழ்வியலை பேச முடியுமா என்ன? அதனால் தான் அதையெல்லாம் நான் செய்யவில்லை. மனிதர்கள் அழிந்து கொண்டிருப்பது இது போன்ற அபிப்ராயங்களால் தான்.
"மனிதம் வளர்ப்பது ஒரு புறம் இருக்கட்டும், கையில் காசு வேண்டுமே. அதற்கு நீ வேறேதாவது செய்துதான் ஆக வேண்டும்" என்று இருக்கும் ஒரு சில நண்பர்களில் சிலர் வாழ்வியல் குறித்து தம் அபிப்ராயங்களோடு புத்திமதி சொல்ல நண்பர்களோடு பேசுவதே இல்லை.
ஆனால் இத்தனையும் தாண்டி, "இல்லை உன்னை வழிநடத்த நானிருக்கிறேன்" என்று இறைபேராற்றல் சொல்ல, ஒரு சில நல்ல மனிதர்களை அடையாளம் காணவும் முடிந்தது. பணம் பிரதானம் இல்லை மனமும் உன்னத நோக்கமுமே பிரதானம் என்று சொல்லி என்னை நெகிழ வைத்த சில மனிதர்களைக் காண முடிந்தது. மேல் சொன்ன அத்தனையையும் மறந்து "கடமையை செய் பலனை எதிர்பாராதே" என்று என்னை முன்னோக்கி நகர்த்தும் உந்துசக்தி. நல்ல விஷயங்கள் செய்வது என்ற கண்டிப்பாக நல்கனி தரும் மரமாக விளையும் என்று நம்பிக்கை தரும் மனதின் வேதனைகளை சாந்தப்படுத்தி மருந்து போடும் உணர்வு.
ஒவ்வொருவனும் போதிக்கிறான். யாரை பார்த்தாலும் போதிக்கிறான். போதனையின் போதையில் எல்லோரும் சிக்குண்டு தவிக்கின்றனர். மதிக்கப்படும் ஒருவன் நான்கு குலமுண்டு அதில் ஒரு குறிப்பிட்ட குலத்தவருக்கு மட்டுமே இந்த போதனைகள் பலன் தரும் என்று போதிக்கிறான். அதையும் நம்புகின்றனர். குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் நல்ல அப்பா அம்மாவாக எப்படி இருக்க வேண்டும் என்று கூட போதிக்கின்றனர். அகம் அற்புதம் போதனைக்காக உருவாக்கப்படவில்லை. இன்னொரு குரு இன்னொரு செய்தி என்பதல்ல இதன் நோக்கம். நல்ல போதனைகள் செயலாக மாற வேண்டும். நல்ல மனிதர் ஒவ்வொருவரின் அகம் நுழைந்து விதைக்கப்பட வேண்டும். ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும். அகம் அற்புதம் வாயிலாக தூவிய விதைகள் வளர்ந்து கனிதரும் வரை பொறுமை காக்க வேண்டும்.
6வது ஆண்டு நிறைவில் உங்கள் அனைவரின் அபிப்ராயங்களை உடைத்து எறிய வைப்பதே என் முதல் நோக்கமாக இருக்கும். "வார்த்தைகளை விட செயல் உதாரணங்களே வலிமையானவை. அதையே மக்கள் பின் தொடர்வர்" என்றார் ஒரு பெரியவர். இனி அகம் அற்புதத்தில் எனது பயணம் அப்படிப்பட்ட "செயல்வழி" உதாரணமாக மட்டுமே இருக்கும். எனக்களிக்கப்பட்ட தனித்திறமைகளை பயன்படுத்தி, பிரபஞ்ச விதிகளின் துணை கொண்டு, எல்லாம் வல்ல இறை பேராற்றலின் வழிநடத்துதலில், பெருமகான்கள் ஆசியோடு நல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், உயர்புகழ், மெய்ஞானம் ஆகியவற்றுடன் நல்வாழ்வு வாழ்ந்து காட்டி, சேர்க்கும் பொருளை "மனிதநேயம்" வளர்க்கும் நல்ல விஷயங்களுக்கே செலவு செய்து சகமனிதர்களுக்கு உதாரணமாகுவதே நோக்கம். இனி எமது பயணமுமே அப்படியே இருக்கும்.
நான் ஈர்ப்பு விதி பயிற்சியாளன் அல்ல. எந்த லேபிளும் எனக்கு தேவையில்லை. பிரபஞ்ச விதிகளை உணர்ந்து செயல்பட்டு வாழும் ஒரு நல்ல "மனிதன்" என்று வாழ்ந்தாலே போதும். எனக்கு தெரிந்தவற்றை, பிரபஞ்சம் உணர்த்தியவற்றை நான் என்னுடைய பாணியில் தொடர்ந்து பகிர்ந்து கொண்டே இருப்பேன். எழுத்துக்களாக, குழந்தைகளுக்கான கதைகளாக, வீடியோக்களாக, ஆவணப்படங்களாக, குறும்படங்களாக, திரைப்படங்களாக. இறைவழிநடத்துதலில் என்னுடைய ஒவ்வொரு படைப்பும் நான் இதுவரை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொண்ட அதே விஷயங்கள், அதே கருத்துக்கள் இருக்கும். கண்டுணர்ந்து புரிந்து தெளிந்து நடப்பவர்களை இந்த படைப்புகள் உலகம் உள்ள வரையும் தேடி அலையும்.
இதுநாள் வரை எனக்கும் நான் பதிவு செய்த வீடியோக்களுக்கும் ஆதரவளித்த அத்தனை உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பிரபஞ்சம் உணர்த்திய இந்த நல்ல விஷயங்களை எனது வாழ்க்கை மூலமாகவே உணர்த்தும் எனது இந்த செயல்வழி பயணத்தை அவ்வப்போது தொடர்ந்து ஆவணப்படுத்த உள்ளேன். வாழ்க்கையின் மேடு பள்ளங்களை தாண்டி இறை இட்ட பணியை மேற்கொள்ளும் ஒரு மனிதனின் கதை. விருப்பமுள்ளவர்கள் பின் தொடரலாம்.
எல்லாம் வல்ல இறைபேராற்றல் தங்களையும் தங்கள் அன்பு குடும்பத்தையும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும், எல்லா செயல்களிலும் உறுதுணையாகவும் பாதுகப்பாகவும் வழிநடத்தட்டும். வாழ்க வளமுடன். வாழ்க வையகம்.
மனிதம் மீது என்றும் நம்பிக்கையுடன் அபரிமித அன்புடன்,
மனித நேயத் தொண்டன்,
ஏ.வி.ஆர்.
54 - 5
அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமது “ஆதியில் விதிகள் உண்டாயிற்று” புத்தகத்தை ஆர்டர் செய்ய வேண்டிய லின்க் பகிர்ந்துள்ளேன். புத்தகம் வேண்டும் என்று சொன்ன அனைவரும் மேல்காணும் லின்கில் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.🙏🙏🙏
www.agamarputham.in/aathiyilvithigalbook
மேற்காணும் லின்க் அல்லாது எங்களுக்கு GPAY வழியாகவும் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
நேரில் நிகழ்ச்சிக்கு வந்து பெற்றுக் கொள்ள முடியாதவர்கள் அன்புடன் கொரியர் கட்டணத்தையும் இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
15 - 2
"ஆதியில் விதிகள் உண்டாயிற்று" புத்தகம் அக்டோபர் 8, 2023 நேரடி நிகழ்ச்சியில் வெளியிடுவதற்காக தயார் செய்து கொண்டிருக்கிறோம். புத்தகம் விலை ₹349. முதலில் புத்தகம் வாங்கும் 50 பேர்களுக்கு நிகழ்ச்சிக்கு இலவச அனுமதி சீட்டு வழங்கப்படும். விருப்பமுள்ள அன்பர்கள் வாட்ஸ்அப் (+91 9894265400) வழி என்னைத் தொடர்பு கொண்டு GPAY வழி பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
21 - 0
”வாழ்வின் நோக்கமே அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வதுதான்”. வாழ்வின் பல நிலைகள் எனக்கு சொல்லித்தந்தது இதுதான். தோல்விகள் பல வந்தாலும் துவண்டு கதி தெரியாது நின்ற போதிலும், உடலிலும் மனதிலும் சக்தி குறைந்த போதிலும் நானிருக்கிறேன் என்று என்னை எடுத்து பல விஷயங்கள் புகட்டிய இந்த எல்லையில்லா பிரபஞ்ச பேரியக்க பேராற்றல் வழிநடத்துதலின் பேரில் கோடானு கோடி நன்றியுடன், மனிதம் தழைக்க, ஒவ்வொரு தனிமனிதனின் சந்தோஷமும், சமாதானமும், சௌபாக்கியமும் தேவை என்பதை உணர்த்தும் வீடியோக்களை அளிக்க இந்த சேனல் வழி முனைந்துள்ளேன். ஆதரவு தாரீர்.
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
Whatsapp Number : 9894265400