in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
வாழ்க்கையில் உங்களைச் சுற்றி எல்லாமும் சரியாக நடக்க வேண்டும் என நீங்கள் உறுதியுடன் இருப்பது என்பது மிகவும் மெச்சத்தக்கது. நல்ல விஷயங்கள் நடக்க வேண்டுமென நீங்கள் விட்டுத்தராமல் போடும் சண்டைகளும் பிரச்சனைகளும்கூட மிகவும் சரியானதுதான். 'வீட்ல நல்லது நடக்கணும்னு தானே இத்தனை கஷ்டப்படறேன்' என்று மனதார நினைக்கும் ஆளாக நீங்கள் இருக்கலாம். ஆனாலும்கூட, ஒருசில இடங்களில் பிரச்சனைகளை தவிர்ப்பது மிகவும் தேவைப்படுகிறது!.
காரணம், 'சரியான விஷயம்' நடப்பதை விடவும் மிக முக்கியமானது 'குடும்ப அமைதி'.
இந்த மாபெரும் ரகசியத்தைப் புரிந்து கொண்டவர்களின் குடும்பம் எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கிறது!!.
88 - 9
உனக்கென்ன வேண்டும் சொல்?’’ என்று அவளிடம் காதல் மயக்கத்தில் கேட்கிறான் அவன்.
‘’ ஜொலிக்கும் நட்சத்திரங்களா? பொங்கும் நிலவா? அதோ அந்த வானவில்லா?’ என்று அவன் காதலனுக்கே உரிய தெனாவெட்டில் கேட்க,
‘’உன் அம்மாவின் இதயம் வேண்டும்!’’ என்கிறா்ள் அவள்.
அவன் தயங்கவில்லை. தன் வீட்டுக்குப் போய்
’’என் எதிர்கால மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்காக உன் இதயத்தை நான் எடுத்துச் செல்ல அனுமதியேன் அம்மா!’’
என அம்மாவின் இதயத்தை கேட்டுப் பெற்று ரத்தம் வழிய வழிய காதலியிடம் வேகமாக எடுத்துச் செல்கிறான். வழியில் கல் தடுக்கி விழப்போக,
‘’ பார்..த்..து! பார்த்துப்போ மகனே!’’ என்று சொல்கிறது கையில் சுடச் சுட ரத்தம் சொட்ட துடித்துக் கொண்டிருந்த தாயின் இதயம்!..
பலரும் அறிந்த கதை இது என்றாலும், ஒரு பின்னிணைப்பு:
’உன் இதயம் வேண்டும் (இதயத்தில் இடம்)!’ என்று காதலி, தன் காதலனிடம் சொல்வது போலத்தான்,
‘உன் தாயின் இதயம் வேண்டும்!’’ என்றே அவள் சொல்லியிருக்கககூடும்.
தன் வருங்கால அத்தையின் மனதில் இடம் பிடிக்க ஒரு பெண் விரும்புவது சகஜமே அல்லவா? அதற்கு, தான் என்ன செய்ய வேண்டும் என தன் அம்மாவை நன்கறிந்த அவனிடம் ஆலோசனை கேட்பதும் சகஜமே அல்லவா?
ஆனால், காதலோடு, காமமும் பெருகெடுத்தோடிய ஒரு மயக்கத்தில் இருந்த அந்தக் காதலன், அவள் சொல்ல வந்ததன் உட்பொருளை அறியாமல், மேலோட்டமாக அர்த்தம் கொண்டு, தனது தாயின் இதயத்தையே அறுத்து எடுத்துக் கொண்டு வந்திருக்கிறான்!
50 - 9
நம்முடைய மிகப் பெரிய பிரச்னையே, நமக்குத் தெரிந்த நீள அகலங்களை மட்டுமே வைத்து மனிதர்களை அளக்கப் பார்ப்பதுதான்.
ஆனால், உலகம் நாம் சற்றும் எதிர்பார்க்காத பல கேரக்டர்களை, பல ஆச்சர்யங்களை தன்னுள் கொண்டது!
இப்படித்தான் இருக்கும் என்று எதையும் முடிவு கட்டிவிடாதீர்கள். பெயர் பார்க்காமல் ஒரு புதுப் புத்தகத்தைப் படிப்பதற்குத் தயாராகும் வாசகர் போல் ஒவ்வொருவரையும், ஒவ்வொருமுறையும் எதிர்கொள்ளுங்கள்... இதனால் வாழ்வில் நாம் பெறும் பல ஏமாற்றங்கள் தவிர்க்கப்படும். சில நல்ல விஷயங்களை நாம் இழக்கும் நஷ்டங்களும் தவிர்க்கப்படும்!
இந்த நாள் தங்களுக்கு அனைவருக்கும் இனிய நாளாகட்டும்
133 - 7
A Channel for Lifestyle.
இனிய சிநேகிதி, சிநேகிதர்களுக்கு, வணக்கம்.
நான் லோகநாயகி.. 'குமுதம் சிநேகிதி' பத்திரிக்கையின் ஆரம்ப காலம் முதல், அதன் ஆசிரியராக 20 வருடங்கள், சாவி, ஆனந்த விகடனில் 10 வருடங்கள், என பத்திரிக்கை அனுபவங்கள் கொண்டவள். என் எழுத்தின் மூலம் பல சிநேகிதிகள், சிநேகிதர்களை உலகம் முழுக்க பெற்ற பேறு கொண்டவள்.
"கொஞ்சம் உங்களோடு", "அர்த்தமுள்ள தாம்பத்தியம்", "பத்திரிகைகளுக்கு எழுதுவது எப்படி?',
திருமதி துர்கா ஸ்டாலின் வாழ்க்கையை சொல்லும் "தளபதியும் நானும்" (அவரும் நானும்) போன்றவற்றை குமுதம் சிநேகிதியிலும்,
"ரொமான்ஸ் ரகசியங்கள்" உட்பட ஆனந்த விகடன் குழுமத்திலும் எழுதியதன் மூலம் பல லட்சம் வாசகர்களை சென்றடைந்த வாய்ப்பு கொண்டவள்.
இந்த "நாயகி டிவி" பெண்களுக்கானது. ஆண்களுக்குமானது. மொத்தத்தில் நல்ல குடும்பங்களுக்கானது!!. இதில் குழந்தை வளர்ப்பு, குடும்ப உறவுகள், அழகு குறிப்புகள், மகிழ்ச்சியான வாழ்க்கை, ஆரோக்கியம், சமையல் குறிப்புகள், தாம்பத்தியம் சிறக்க ரொமான்ஸ் ரகசியங்கள் என அனைத்துமே இருக்கும். இணைந்திருப்போம். ஒவ்வொரு வீடியோவிலும் சந்திப்போம்..
அன்புடன், லோகநாயகி