in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
விடியல் தேடி
இளைஞனே
இலட்சத் துளிகளை
நெஞ்சில் சுமப்பதால்
கார்மேகமாய் கருத்திருக்கிறாய்!
கோடி ஒளிகளை
விழியில் சுரப்பதால்
சூரியனாய் சுட்டெரிக்கிறாய்!
பின்பு ஏன்
வாழ்க்கை பாதையில்
ஏன் வழுக்கி விழுகிறாய்?
சிறகு முளைத்தும்
ஏன் காற்றை வெறுக்கிறாய்?
உனக்காகவே -
செதுக்குகிறேன் சில வரிகள்
சிந்தியுங்கள் பல முறைகள்..
அறிவை மேய்த்துப் பழகு
அன்பை விதைத்து ஒழுகு
அளவாய்ப் பேசி
வளமாய் யோசி
கறுப்பு வெள்ளை நிறங்களெல்லாம்
கண்களுக்கு மட்டுமே என தெரிந்து நேசி!
தமிழ் மொழியே ஆதி மொழி என
உன் தலைமுறைக்கு நினைவுபடுத்து
ஒழுக்கமே ஒருவனுக்கு ஒளி விளக்கு என
ஒவ்வொருவருக்கும் தெளிவுபடுத்து
உன் -
நரம்பில் எரிமலை
எப்பொழுதும் எரியட்டும்.
நெஞ்சில் பூகம்பம்
நொடிப்பொழுதும் வெடிக்கட்டும்..
உயரம் என்றதுமே
இமய மலையை எண்ணாதே
அதனினும் உயரம்
வானம் தொடு, வெற்றி நடு!
வெயிலில் நடந்தால்
நிழலை தேடு - நிரந்தரமாகாதே
கடலில் விழுந்தால்
கரையை தேடு - கரைந்துவிடாதே!
தெரிந்துகொள் -
மழையின் துளிகள்
மண்ணில் விழும் வரைதான்
கடலின் அலைகள்
கரை தொடும் வரைதான்
ஆதலால்,
விழித்துக்கொள்
வழி ஒன்றை வகுத்துக்கொள்!
5 - 0
Thanga Siragugal is Self help and Self improvement YouTube channel. Thanga Siragugal is a Tamil YouTube channel that posts videos on Career development strategies & Ideas for being successful in life, Workplace success formula, Job search strategy using LinkedIn, Resume writing and Interview tips for young graduates and experts as well.
Thanga Siragugal YouTube channel, also post videos on Tamil motivational videos, tamil motivation quotes and tamil motivational speeches to improve Mental health and stay positive.
Stay in Touch with me:
**************************
Instagram : www.instagram.com/thangasiragugal/
Facebook : www.facebook.com/Thangasiragugal123