Channel Avatar

Jenipa @UCT1OMvugd1nk4E4ulRby-zw@youtube.com

34 subscribers - no pronouns :c

Jenipa: Purely 90's Kid Mom 🗓️| Full Time Home Maker 🏡 |


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Jenipa
Posted 2 months ago

சுவாரசியங்கள்.....!!!!

கிச்சுகிச்சு மூட்டும் போது வரும் அடக்கமுடியாத சிரிப்பு...

கடைசி தீக்குச்சிக்கு காட்டும் பொறுப்பு...

சட்டைக்குள் போட்ட ஐஸ் கட்டி...

பெல்ட் போட்டு இறுக்கி கட்டிய வேட்டி...

மொட்டமாடி தூக்கம் ..

திருப்தியான ஏப்பம்...

கூட்டமான பஸ்ல , நா அடுத்த நிறுத்தத்தில் எறங்கிருவேன், நீங்க உக்காந்துக்கோங்க என்ற வார்த்தை...

நாம் செய்யும் மொக்க மேஜிக்கை வியந்து ரசிக்கும் குழந்தை..

7 கழுதை வயசானாலும் நமக்கு திருஷ்ட்டி சுத்தும் பாட்டி..

விமானத்தில் பல முறை பயணம் செய்து இருந்தாலும் விமானம் பறப்பதை பார்த்து ரசிப்பது.

பாட்டியிடம் பம்மும் தாத்தா ...

அதீத வெயிலுக்குப் பின் குடிக்கும் ஃப்ரிட்ஜ் வாட்டர்...

நோட்புக்கின் கடைசிப்பக்கம்...

கொளுத்தும் வெய்யிலிலும் முகமூடி அணியாத மேக்கப் இல்லா

அழகி ...

பல வருடம் ஆனாலும் நம் குறும்பை மறந்து , நம்மை மறக்காத ஆசிரியர் ...

தூங்க தோள் கொடுத்த சக பயணி ....

எரிந்து முடிந்த கம்ப்யூட்டர் சாம்பிராணி ..

பாய் வீட்டு பிரியாணி ..

பார்த்த நொடியில் உரிமை எடுத்துகொள்ளும் பால்ய நண்பன்..

இரவு 2 மணிக்கு கதவை திறந்துவிடும் அம்மா ...

கோபம் மறந்த அப்பா..

சட்டையை ஆட்டய போடும் தம்பி..

அக்கறை காட்டும் அண்ணன்..

அதட்டும் அக்கா ...

மாட்டி விடாத தங்கை ..

சமையல் பழகும் மனைவி ...

சேலைக்கு ப்ளீட்ஸ் எடுத்துவிடும் கணவன்..

இதுவரை பார்த்திராத பேப்பர் போடும் சிறுவன்..

ஹார்ன் அடித்து எழுப்பிவிடும் பால்காரர்...

வழிவிடும் ஆட்டோ காரர்...

ஹை பீம் போடாத லாரி டிரைவர் ...

ஊசி போடாத டாக்டர் ..

சில்லறை கேட்காத கண்டக்டர் ..

சிரிக்கும் போலீஸ் ...

உப்பு தொட்ட மாங்கா..

அரை மூடி தேங்கா..

12மணி குல்பி..

Atm a c ..

சண்டே சாலை ...

மரத்தடி அரட்டை...

தூங்க விடாத குறட்டை...

மழை நேர மண் வாசம்..

மார்கழி மாசம்..

ஜன்னல் இருக்கை..

தும்மும் குழந்தை..

கோவில் தெப்பகுளம்..

பொருட்காட்சி அப்பளம்..

முறைப்பெண்ணின் சீராட்டு ...

எதிரியின் பாராட்டு..

தோசைக்கல் சத்தம் ..

பிஞ்சு பாதம்..

இதை எழுதும் நான்..

படிக்கும் நீங்கள்..

இன்னும் நிறைய இருக்கு இந்த உலகத்துல ரசிக்க ..

வாழ்க்கைய வெறுக்க ஹை ஹீல்ஸ் அளவுக்கு பெருசா 10 காரணம் இருந்தாலும்

அதை ரசிக்க , மினி மீல்ஸ் மாதிரி வெரைட்டியான விஷயங்கள் நிறைய இருக்கு ..

அதையெல்லாம் வாட்டர் டேங்க் அளவுக்கு வாய திறந்து ரசிக்கணும்னு இல்ல ...

வாட்டர் பாக்கெட் அளவுக்கு மனச திறந்து ரசிச்சாலே போதும்....

கவலை காலி ஆயிரும்

வாழ்க்கை ஜாலி ஆயிரும்

முகம் ஃப்ரெஷ் ஆயிரும்

...அதனால...

வாங்க ... வாங்க..

வாழ்க்கையை ரசிங்க .

0 - 0

Jenipa
Posted 2 months ago

*மனிதர்கள் எல்லோருமே ஞானிதான்..!*

பாலுக்குள்ளே நெய் இருப்பது போல மனிதனுக்குள்ளே ஞானம் இருக்கிறது.

புளித்த பால் தயிராகிறது.

அதை சுழற்றி அடித்துக் கடைந்தால் வெண்ணெய் வெளிப்படுகிறது.

அதை நெருப்பில் உருக்கினால் நெய் கிடைக்கிறது.

இது அனுபவத்தின் வெளிப்பாடு.

உலகாயப் பொருள்களின் மீதுள்ள பற்று மனிதனை நெய் என்கிற ஞானத்தை அடையும் படிக்கு பக்குவப்படுத்துகிறது.

இது இயல்பு நிலை. ஆனால், மற்றவர்களுடைய அனுபவங்களை உற்றுப் பார்த்து தன்னை நெறிப்படுத்திக் கொள்ளும் பேரறிவாளர்களும் இருக்கிறார்கள்.

அவர்கள் உலகாயத்தின் பற்றுகளின் விளைவுகளை உணர்ந்து அதிலிருந்து விலகும் போது புத்தி கூர்மையுள்ள அவர்களுக்கு கடையப்படுவதற்கு தயிர் சித்தமாக இருக்கிறது.

தெய்வீக வாழ்க்கை அவர்களுக்கு உண்மை என்கிற அமுதத்தைத் திரட்டித் தருகின்றது. முன்னது துன்பத்தில் உழன்றுப் பக்குவப்படுவது.

பின்னது பூரண இன்பத்தையும், துன்பங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும், நிரந்தர திருப்தியையும் பெற்றுத் தருகிறது.
உலகியல் எண்ணங்கள் மனதில் உள்ள வரை துன்பங்கள் தொடர்கதைதான்.

ஏனென்றால் அவர்களின் மனமானது சிதறிக் கிடக்கிறது. அதன் ஆற்றல்கள் பலவேறு திசைகளில் வீண்டிக்கப்படுகின்றன. ஆனால், தெய்வீக எண்ணங்கள் நிரம்பிய மனதிற்கு இன்பமென்றும், துன்பமென்றும் பேதமில்லை.

அது எல்லாவற்றையும் அனுபவமாக ஏற்றுக் கொண்டு, அந்த அனுபவங்களையே படிகளாக்கி மேலேறிப் போய்க் கொண்டேயிருக்கும்.

இரண்டுக்கும் உள்ள வேறுபாடு இதுதான். உருக்கப்பட்ட உலோகத்தை ஒரு பாத்திரத்தில் ஊற்றினால், அது எப்படி அந்தப் பாத்திரத்தின் வடிவத்தைப் பெறுகிறதோ, அதுபோல, மனம் எதில் நிறைந்திருக்கிறதோ அதன் வடிவத்தைப் பெற்று விளைவுகளை அடைகிறது.

மனிதனின் எண்ணம் செயலாகிறது. செயல் பழக்கமாகிறது. பழக்கம் இயல்பு அல்லது குணமாக ஆகிறது.

இயல்பு விளைவுகளைத் தருகிறது. இப்போது முடிவு உங்கள் கைகளில். உங்களுக்கு வேண்டியதைத் தேர்ந்தெடுக்க உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. அது உங்கள் சுதந்திரம்.

அதன் விளைவுகளும், அனுபவங்களும் உங்களுக்குரியதே.

இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒருவர் வந்தார்.

அவர் சுவாமிகளை நமஸ்கரித்து விட்டு, '' ஐயா நீங்கள் பெரிய மகாத்மா. எல்லாவற்றையும் துறந்த ஞானி. உங்களைப் போன்ற துறவிகள் தற்காலத்தில் யாரும் இல்லை.

எனவே என்னை ஆசிர்வதித்து அருள வேண்டும்'' என்று பணிந்து நின்றார்.

இராமகிருஷ்ணர் அவரைக் கூர்ந்து பார்த்து விட்டு, நான் துறவியல்ல. நீயே துறவி.

நான் எதையும் துறக்கவில்லை. நீதான் துறந்திருக்கிறாய் என்றார்.

அந்த மனிதர் அதிர்ச்சிக்கு உள்ளானார். ஸ்வாமி என்னை பரிகாசம் செய்கிறீர்கள். நான் மீளாத் துயரத்தில் வீழ்ந்து கிடக்கிறேன். எந்த ஆசையும் என்னை விட்டு நீங்கவில்லை.

என்னிடம் ஆயிரக்கணக்கான ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன. அதனால்தான் நான் உங்களையே நாடி வந்திருக்கிறேன்.

இப்படியிருக்க நான் எப்படித் துறவியாவேன் ? என்று கேட்டார்.

பரமஹம்சர் சிரித்தபடி நான் சொல்வது உண்மைதான். எனக்கு முன்பும் இரண்டு சாத்தியங்கள் இருக்கின்றது. உனக்கு முன்பும் இரண்டு சாத்தியங்கள் இருக்கிறது. அவை என்னவென்றால், கடவுளும், உலகமுமே.

நான் கடவுளைத் தேர்வு செய்தேன். நீயோ, உலகத்தைத் தேர்வு செய்தாய். கடவுளை அடைவதே மனிதப் பிறப்பின் நோக்கம், அதுவே இயல்பு. எனவே நான் அதன்படி நடக்கின்றேன்.

நான் எதையும் விரும்பவும் இல்லை, துறக்கவும் இல்லை. ஆனால், நீயோ அழகான, கவர்ச்சிமிக்க, பல கோடி மக்கள் விரும்பும் உலகத்தைத் தேர்ந்தெடுத்தாய். உண்மையில் அது அர்த்தமற்றது.

எனவே நீதான் அர்த்தமுள்ள, நம் இயல்பான விஷயத்தைத் துறந்து அர்த்தமற்ற, துன்பத்திற்குக் காரணமான உலகத்தைத் தேர்வு செய்திருக்கிறாய்.

எனவே நீதான் துறவி என்றார்.

மேலும், ஒரு வைரமும், கல்லும் பக்கம் பக்கம் இருக்க, நீயோ கல்லைத் தேர்ந்தெடுத்தாய். நானோ வைரத்தை தேர்ந்தெடுத்துள்ளேன். எனவே வைரத்தையே துறந்த நீதான் துறவி. நானல்ல, ஏனென்றால் நான் மதிப்பு மிக்க வைரத்தையல்லவா தேர்ந்தெடுத்துள்ளேன்.

ஆசை என்கிற விஷயத்தைப் பொருத்த வரை நாம் இருவரும் ஒரே நிலையில்தான் இருக்கிறோம். ஆனால், இலக்குதான் வேறு என்பதைப் புரிந்து கொள் என்றார்.

அந்த மனிதர் வாய் பேச முடியாமல் மௌனமாக நின்றார்.

அப்போது பரமஹம்சர் உன்னைக் குற்றப்படுத்துவதற்காகச் சொல்லவில்லை, உன்னை மேன்மைப்படுத்தவே சொன்னேன் என்றார்.

மகான்களின் பார்வையின் கோணமே, பரிமாணமே வித்தியாசமாகத்தான் இருக்கும். அதனால்தான் அவர்கள் ஞானிகள்.

எனவே உலக வாழ்க்கை என்பது சிற்றின்பங்களும் அதன் விளவுகளாகத் துன்பங்களும் நிறைந்தது.

ஆன்மிக வாழ்வு என்பதோ ஒரு ஆனந்தமான அனுபவம்.

உண்மையில் கரைந்து போகத் துடிக்கும் நம் ஆன்மாவின் இயல்பு.

இராம் மனோகர்.

*"ஆன்ம ஞானத்தை அடைய ஞானிகள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"*

0 - 0

Jenipa
Posted 2 months ago

மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டப்பட்ட ஆண்டுகள்:

1168 – 75 -> சுவாமி கோபுரம்
1216 – 38 -> ராஜ கோபுரம்
1627 – 28 -> அம்மன் சந்நிதி கோபுரம்
1315 – 47 -> மேற்கு ராஜா கோபுரம்
1372 -> சுவாமி சந்நிதி கோபுரம்
1374 -> சுவாமி சந்நிதி வெஸ்ட் கோபுரம்

1452 -> ஆறு கால் மண்டபம்
1526 -> 100 கால் மண்டபம்
1559 -> சௌத் ராஜா கோபுரம்
-> முக்குரிணி விநாயகர் கோபுரம்
1560 -> சுவாமி சந்நிதி நார்த் கோபுரம்
1562 -> தேரடி மண்டபம்
1563 -> பழைய ஊஞ்சல் மண்டபம்
-> வன்னியடி நட்ராஜர் மண்டபம்

1564 – 72 -> வடக்கு ராஜா கோபுரம்
1564-72 -> வெள்ளி அம்பல மண்டபம்
-> கொலு மண்டபம்
1569 -> சித்ர கோபுரம்
-> ஆயிராங்கால் மண்டபம்
-> 63 நாயன்மார்கள் மண்டபம்
1570 -> அம்மன் சந்நிதி மேற்கு கோபுரம்

1611 -> வீர வசந்தராயர் மண்டபம்
1613 -> இருட்டு மண்டபம்
1623 -> கிளிக்கூட்டு மண்டபம்
-> புது ஊஞ்சல் மண்டபம்
1623 – 59 -> ராயர் கோபுரம்
-> அஷ்டஷக்தி மண்டபம்

1626 -45 -> புது மண்டபம்
1635 -> நகரா மண்டபம்
1645 -> முக்குருணி விநாயகர்
1659 -> பேச்சியக்காள் மண்டபம்
1708 -> மீனாக்ஷி நாயக்கர் மண்டபம்
1975 -> சேர்வைக்காரர் மண்டபம்

மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டியவர்களும், அந்த கால கட்டத்தில் ஆட்சி புரிந்தவர்களும்:

குலசேகர பாண்டியன் -> 1168 – 75.
மாறவர்மன் சுந்தரபாண்டியன் -> 1216 – 38.
பாராக்ரம பாண்டியன் -> 1315 – 47.
விஸ்வநாத நாயக்கர் -> 1529 – 64.

கிருஷ்ணப்பா நாயக்கர் -> 1564 – 72.
வீரப்ப நாயக்கர் -> 1572 – 94.
கிருஷ்ணப்பா நாயக்கர் -> 1595 – 1601.
முத்துகிருஷ்ணப்பா நாயக்கர் -> 1601 – 09.

முத்து நாயக்கர் -> 1609 – 23.
திருமலை நாயக்கர் -> 1623 – 1659.
ரௌதிரபதி அம்மாள் மற்றும்
தோளிமம்மை -> 1623 – 59. (Wives of ThirumalaiNaicker )
முத்து வீரப்ப நாயக்கர் -> 1659

சொக்கநாத நாயக்கர் -> 1659 – 82.
முத்து வீரப்ப நாயக்கர் -> 1682 – 89.
விஜயரங்க சோகநாத நாயக்கர் -> 1706 – 32.
மீனாட்சி அரசி -> 1732 – 36

மதுரையிலேயே பஞ்சபூதத் தலங்கள் உள்ளதை நம்மில் பலபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை🌹.
அவை:

1) மதுரை செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோயில் 'நீர் ஸ்தலம்',

2) சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில் 'ஆகாய ஸ்தலம்',

3) இம்மையில் நன்மை தருவார் கோயில் 'நில ஸ்தலம்',

4) தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில் 'நெருப்பு ஸ்தலம்',

5) தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் 'காற்று ஸ்தலம்' ஆகியவை மதுரையின் பஞ்சபூத ஸ்தலங்கள்

அதனால் தான் பஞ்சபூதங்களை உள்ளடக்கி வெள்ளை, ஊதா, பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்கள் கலந்த பஞ்சவர்ண கிளியை அன்னை மீனாட்சி கையில் பிடித்துள்ளாள் .

அப்பன் சிவனும் 64 திருவிளையாடல்களையும் கடம்பவனமாம் மதுரையிலேயே நிகழ்த்தி உள்ளார்.

திருவாரூரில் பிறந்தால் புண்ணியம்,
காஞ்சியில் வாழ்ந்தால் புண்ணியம்,
காசியில் இறந்தால் புண்ணியம்,
சிதம்பரத்தில் வழிபட்டால் புண்ணியம்,
திருவண்ணாமலையை நினைத்தாலே புண்ணியம் .

மதுரையில் பிறந்தாலும்
மதுரையில் வாழ்ந்தாலும்
மதுரையில் இறந்தாலும்
மதுரையில் வழிபட்டாலும்
மதுரையை நினைத்தாலும் புண்ணியம்.
சீறா நாகம், கறவா பசு, பிளிறா யானை, முட்டா காளை, ஓடா மான், வாடா மலை,காயா பாறை, பாடா குயில்
இவை அனைத்தும் மதுரை நகரின் அந்தக்காலத்து எட்டு திசைகளைக் குறிக்கும் எல்கை ஊர்கள்.👇👇👇

சீறா நாகம் - நாகமலை
கறவா பசு - பசுமலை
பிளிறா யானை - யானைமலை
முட்டா காளை - திருப்பாலை
ஓடா மான் - சிலைமான்
வாடா மலை - அழகர்மலை
காயா பாறை - வாடிப்பட்டி
பாடா குயில் - குயில்குடி

#madurai #மதுரை

2 - 0