இந்த SIVATSA சேனல் மூலம் , நமது தாய்த்திரு நாடாம் புண்ணிய பாரதத்தில் வாழ்ந்த ஞானிகள், ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் ஆகியோரைப் பற்றியும் :
அவர்கள் அறிவியலோடும் , ஆன்மீகத்தோடும் அன்றாட வாழ்வியல் முறைகளை இணைத்து எப்படி நமக்கு வழிகாட்டிச் சென்றுள்ளனர் என்பதைப் பற்றியும்..
நமது நாட்டு நலனுக்காக உழைத்த மாமனிதர்கள் பற்றியும்..
இடையிடையே வெளிநாட்டு அறிஞர்களின் நல்ல கருத்துக்கள் குறித்தும் : நம் நாட்டில் அல்லது உலகில் நடக்கும் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று இந்த 74 வயதுப் பாட்டி நினைக்கும் நல்ல விஷயங்களையும் பகிர நினைக்கிறேன் அருமைப் பிள்ளைகளா !
இளம் பெற்றோர்களே ! நீங்கள் உங்கள் பிள்ளைகளை மட்டுமே வளர்க்கவில்லை : நமது பாரத நாட்டின் எதிர்கால சமுதாயத்தையும் வளர்க்கிறீர்கள் : இதை மனதில் கொண்டு இந்தச் சேனலைப் பார்த்துப் பயன் பெறுங்கள் என்று உங்கள் அனைவரிடமும் மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வாழிய பாரத மணித்திரு நாடு !
ஜெய்ஹிந்த் !