in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
தும்பிக்கையான் #தம்பி துணையாய் இருக்கவே
#நம்பிக்கை வேண்டும் நாளும் நமக்கே.
@arasiyaluruttu @ArangarTV- @annadhanam @arangarkudil @ArangarAnimation @Arangar
25 - 0
Sri Om Aranga 🙏
Sri Agathiar Sanmarka Sangam today distributing drinks, leaflets, books and snacks at London Murugan Temple Chariot.
35 - 0
#யோகம் செய்வதற்கு ஞானிகளின் #தயவு இருக்க வேண்டும்.
#அகத்தியர் #முருகர் #முருகன் #Arangar
#ஆன்மீகம் #ஆன்மீக #தகவல்கள்
25 - 0
🙏 *ஓம்_முருகா*🙏
🙏 *ஓம்_ஆறுமுக_அரங்கமகா_தேசிகாய_நம*🙏
✨ *ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்,ஓங்காரக்குடில், துறையூர்,திருச்சி*.
✨ *அரங்கர் அன்னதானம் *🙏கிளை : *திருநெல்வேலி சார்பாக 🙏#கலியுக_ஞானி பசிப்பிணி மருத்துவர் குருநாதர்_தவத்திரு_ஆறுமுக_அரங்கமகா_தேசிக_சுவாமிகள்* அவர்களின் கருணை மிகுந்த ஆசியால்
17.6.2024 திங்கட்கிழமை இரவு 7.00
மணிக்கு ஞானிகளை பூஜை செய்த அருட்பிரசாத_உணவு வழங்கப்பட்டது.
1. *இட்லி,சாம்பார், தேங்காய் சட்னி, கார சட்னி,காப்பி.*
இடம் :*1. BLIND SCHOOL,ULAVAR CHANDAI, MAHARAJA NAGAR , TIRUNELVELI*.*
*சுமார்_150_நபர்களுக்கு_குருநாதர்_ஆசியால்_அன்னதானம்_சிறப்பாக_வழங்கப்பட்டது. இன்றைய உபயம்: 1..
*திரு. சி சுப்பிரமணியன், பாரதி நகர், திருநெல்வேலி. (அவர்கள் பிறந்த நாள் முன்னிட்டு அன்னதானம் கொடுக்கப்பட்டது).*
இந்த புண்ணிய தர்மத்திற்கு பொருள் உதவி செய்தவர்களும்,தொண்டு செய்தவர்களும் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நீடூழி வாழ அவர்களுக்கு எல்லா நலமும் வளமும் கிடைக்க நவகோடி சித்தர்கள் திருவடி பணிந்தும் *ஓங்காரக்குடிலாசான்_திருவடி_பணிந்து_வேண்டிக்கொள்கின்றோம். அவர்கள் மேற்கொள்கின்ற தொழில் போன்ற அனைத்தும் வெற்றி பெற குருநாதர் திருவடி பணிந்து வேண்டிக்கொள்கின்றோம்*.
🙏 *எல்லா_உயிர்களும்_இன்புற்று_வாழ_அருள்_செய்யுங்கள்_தாயே* 🙏🙇
🙏 *ஓம் சரவணஜோதியே நமோ நம*
*ஓம் அகத்தீசாய நம*
*ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிகாய நம*🙏🙏💐🌹.இது போன்ற ஞானிகள் செய்யகூடிய தர்மத்தில் பங்குபெறும் விரும்புபவர்கள் தொடர்புக்கு: *K.SUBRAMANIAN:9345366472, GOOGLE PAY NO: 8903560684*
38 - 1
💐மகான் அரங்கா் துனை💐
🙏ஓம் சரவணபவ, ஓம் ஆறுமுக அரங்கமகாய தேசிகாய நம 🙏
ஶ்ரீ அகத்தியா் சன்மாா்க்க சங்கம், செங்கல்பட்டு
கிளை சங்கத்தின் சார்பில் ஞானியர்களை பூஜித்த பிரசாதம் (கிச்சடி, மற்றும் லட்டு)
*குருநாதர் ஆறுமுக* *அரங்கமகா தேசிக* *சுவாமிகள்* *கருணையால்* இன்று 02/06/2024* அரசு மருத்துவமணை, ரயில் மற்றும் பேருந்து நிலையத்தில்
சுமார் 140 நபர்களுக்கு அன்னதானம்
வழங்கப்படடது.
இன்றைய உபயதாரர்!
திரு.S.மனோகரன்.(M.E),செயற்பொறியாளர் -
(TNEB) ,காஞ்சிபுரம் அவர்கள் மற்றும் குடும்பத்தினர்
!ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா!
தர்மம் செய்த குடும்பத்தாரும் தொண்டு செய்தவர்களும் நோயில்லா வாழ்வு நீடிய ஆயுள் குறைவில்லா செல்வம் பெற்று வாழவும் அவர்கள் செயல்பாடுகளுக்கு அருள் துணையாக இருங்கள். அவருடைய குழந்தைகளுக்கு கல்விக்கு துணையாக இருங்கள் தாயே!! ஞான வாழ்வுக்கு துணையாக இருங்கள் தாயே!!.
*
*!அன்னதானமே ஞான வாழ்வு!!*
27 - 1
ஆன்ம #லாபம் பெற பிற உயிர்களிடத்து #அன்பு செலுத்த வேண்டும்.
#india #instagram #love #photography #instagood #mumbai #kerala #bhfyp #follow #nature #indian #travel #likeforlikes #delhi #like #fashion #photooftheday #memes #trending #followforfollowback #bollywood #instadaily #maharashtra #insta #likes #viral #art #style #model #music
68 - 0
குரு உபதேசம் – 4055
29 May 2024
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால், பால பருவம், வாலிப பருவம், முதுமைப் பருவம் ஆகிய மூன்று நிலைகளும் உண்டாகி இறுதியில் அனைத்தும் அழிந்து போவதும் இயற்கையால் வந்தது என்றும், இயற்கையால் விதிக்கப்பட்ட இந்த பருவங்களை கடந்து மாற்றி, என்றும் மாறாத அழிவில்லாத இளமைப் பருவத்தை அடையலாம் என்பதையும் அதுவே மரணமிலாப் பெருவாழ்வாகிய பெருநிலை என்பதையும், அதை தவ முயற்சியால், தயவின் துணையால் அடையலாம் என்பதையும் முதன் முதலில் முருகப்பெருமான் தான், இத்தவத்தை கண்டு பிடித்தார் என்பதையும் அறியலாம்.
முருகன் அருளை முழுமையாக பெற்றிட்டால் முருகப்பெருமானை வணங்கி வணங்கி அருள் பெற்றவரும், மரணமிலாப் பெருவாழ்வை பெறலாம் என்பதையும் அறியலாம். முருகனது அருளும், நாம் பிற உயிர்களுக்கு இரங்கி இதம் புரிந்து செய்கின்ற ஜீவதயவின் வல்லமையும் கூட கூட, இத்தவத்தின் நுட்பங்களெல்லாம் முருகப்பெருமானே நம்மை சார்ந்து நம்மை வழி நடத்தி, நம்மை அருளாளனாகவும் தயவுடையோராகவும் மாற்றி நம்மை நரகத்தில் வீழ்த்தி மரணத்தை தருகின்ற வினைகளை, மும்மலங்களை ஒழித்து நமது ஜென்மத்தைக் கடைத்தேற்றி, என்றும் அழிவில்லாததும், என்றும் இளமையானதுமான ஒளி பொருந்திய ஒளி தேகத்தை நமக்கு அருளி மரணமிலாப் பெருவாழ்வையும் தந்து நம்மையும் முருகனைப் போலவே ஆக்கிக் கொள்வான் என்பதையும் அறியலாம்.
38 - 0
🌷#ஓங்காரக்குடிலாசான் #குருநாதர் #ஆறுமுக_அரங்க_மகா_தேசிக_சுவாமிகளின்
🌷#ஜீவசமாதி -16.05.2024 -வியாழன்
🌷1936 ல் பிறந்து நம்முடன் வாழ்ந்து முருகப்பெருமானை நோக்கி தவம் செய்து
🌷1976 ம் ஆண்டு சிவபெருமான் சூட்சும சுவடி உபதேசம் படி தவம் ஆரம்பித்து ,
🌷1979 ம் ஆண்டு முருகப்பெருமானின் தரிசனம் கண்டு
முருகப்பெருமானை தம்முடைய அகத்தில் வாசியோடு வாசியாக கலந்திருந்தது இதுநாள் வரை முருகப்பெருமானின் உபதேசத்தால் தவம் செய்தும்
🌷ஆதிஞானத்தலைவன் மகான் #முருகப்பெருமான் , மகான் #அகத்தியர் , மகன் #நந்தீசர் , மகான் #திருமூலர் , மகான் #திருவள்ளுவர் , மகான் #ஒளவையார் , மகான் #கருவூரார் , மகான் #அருணகிரிநாதர் #நால்வர்_பெருமான்கள் , சென்ற நூற்றாண்டில் சித்தி பெற்ற #வள்ளலார் வரையிலும் உள்ள எல்லா #ஞானிகளின்_பெருமைகளை_பறைசாற்றியும் அவர்கள் எழுதிய ஞான நூல்களுக்கு விளக்க உபதேசம் அளித்தும்
🌷ஆன்மீகம் என்றால் வெறும் பக்தி பூஜை மட்டும்மல்ல ,
#ஜீவகாருண்யமே_ஞானவீட்டின்_திறவுகோல் என்ற #வள்ளலார்_வழியில்
🌷1988 ல் தம்முடைய #ஸ்ரீ_அகத்தியர்_சன்மார்க்க_சங்கம் #ஓங்காரக்குடிலில் #அன்னதானம் ஆரம்பித்து
முதலில் 10 நபர்களுக்கு, பிறகு 100 நபர்களுக்கு பிறகு 200 நபர்களுக்கு , பிறகு 500 நபர்களுக்கு பிறகு 1000 நபர்களுக்கு என்று வளர்ந்த அன்னதானம் இன்று #தலைமையகம்_ஓங்காரக்குடிலில் தினமும் 7000 முதல் 9000 நபர்கள் வரையிலும் ,
🌷 சென்னை , திருச்சி திருவண்ணாமலை , திருநெல்வேலி , மதுரை, விருதுநகர், கோவை , சேலம் , இன்னும் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலும் உள்ள கிளைசங்கங்கள் மூலம் தினமும் 40000 நபர்களுக்கும்
🌷ஆக மொத்தம் சுமார் 50000 முதல் 60000 நபர்களுக்கும் மேலாக தினம்தோறும் அன்னதானம்
சுமார் 30 கோடி மக்களுக்கும் மேலாக இதுவரை அன்னதானம் செய்தும்
தமிழ்நாடு , அண்டை மாநிலங்கள் , மலேசியா , சிங்கப்பூர் , ஆஸ்திரேலியா இங்கிலாந்து இன்னும் பிற நாடுகளிலும் ஞானிகளின் பெயரில் தொடர்ந்து அன்னதானம் செய்தும்
🌷தம்முடைய 89 ம் வயதிலும் நமக்கு ஞானிகளின் பெருமைகளை பேசியும் உபதேசித்தும் வந்த நமது குருநாதர் ஓங்காரக்குடிலாசான் தவத்திரு #ஆறுமுக_அரங்கமகா_தேசிக_சுவாமிகள்
🌷தம்முடைய குருநாதர் முருகப்பெருமான் உத்தரவுப்படியும் , ஆசான் அகத்தீசரின் கருனைக்கிணங்க
14.05.2024 செவ்வாய்கிழமை மாலை 6 மணியளவில் முருகப்பெருமானின் திருவடியில் இணைந்து முக்தி அடைந்தார்கள்
🌷இன்று 16.05.2024 வியாழக்கிழமை துறையூர் #ஸ்ரீ_அகத்தியர்_சன்மார்க்க_சங்கம் #ஓங்காரக்குடில்
மகான் #புஜண்டமகரிஷி #மண்டபத்தில் #ஜீவசமாதி அமைக்கப்பட்டது.
🌷இந்த #புஜண்டமகரிஷி மண்டபத்தில் தான் தினமும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானமும் ,
🌷சித்ராபௌர்ணமி தோறும் இலவசதிருமணம் செய்து , மொத்தம் இதுவரை 2714 மக்களுக்கு இலவச திருமணமும் ,
🌷ஒவ்வொரு பௌர்ணமியிலும் பெண்களுக்கு #திருவிளக்குபூஜை மற்றும் உபதேசமும்
🌷ஒவ்வொரு வியாழன் மற்றும் விசேஷ தினங்களில் ஞானிகளின் பாடல்களுக்கு அருள் உபதேசமும் வழங்கினார்கள்
🌷இதுவரை தூலதேகத்தில் அருள்செய்த நமது #குருநாதர்_ஆறுமுகஅரங்கர்
இனி #சூட்சும_தேகத்தில் இருந்து அரூபமாக நமக்கு அருள் பாலிக்க உள்ளார்கள் .
🌷அன்பர்கள் அனைவரும் இனி வரும் காலம் #ஞானசித்தர்காலம் என்பதால்
குருநாதர் கூறிய எளிய 3 உபதேசங்களாக
🌷1) முருகப்பெருமான் , அகத்தியர்_பெருமான் முதல் நவகோடி சித்தர்களை ஞானிகளை பூஜை செய்து அருள்பலம் பெற்றுக்கொள்ளவும்
🌷2) ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து அன்னதானம் செய்து புண்ணியத்தை பெருக்கியும்
🌷3) அசைவ உணவு மறுத்தும் , உயிர்க்கொலை தவிர்த்தும் , எண்ணம் சொல் செயலால் பிறர் மனம் புண்படும்படி நடக்காமலும் , பாவம் செய்யாமலும் வாழ்ந்து
🌷மேற்கண்ட 3 உபதேசங்களை கடைபிடித்து எல்லாம் வல்ல ஞானிகளின் ஆசியும் குருநாதர் ஆசியும் பெற்று
வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற வேண்டுகிறோம்
🌷 #நலமும்_வளமும்_தரும்_நாமஜெபங்கள்
🌷 #ஓம்_முருகா
🌷 #ஓம்_சரவணபவ
🌷 #ஓம்_சரவணஜோதியே_நமோ_நம
🌷 #ஓம்_சுப்ரமணியர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_அகத்தியர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_திருமூலர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_கருவூரார்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_அருணகிரிநாதர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_வள்ளலார்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_ஆறுமுக_அரங்கர்_திருவடிகள்_போற்றி
108 - 17