இது புத்தக அறிமுக சேனல். சமகாலத்தில் இருக்கும் எழுத்தாளர்களின் சிறுகதைகள், நாவல்கள், தாண்டி fiction, nonfiction என்று அனைத்துவிதமான புத்தகங்களும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும். உலக இலக்கியங்களிலிருந்து, உள்ளூர் இலக்கியம் வரை இங்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும். உலகமே கொண்டாடும் ரஷ்ய இலக்கியம் முதல் இங்கு மக்களை அரசியல்படுத்த தேவையான மார்க்சிய. பெரியாரிய., அம்பேத்கரிய நூல்கள் அதனைக்குறித்த உரையாடல் அதிகமிருக்கும். முற்போக்கு நூல்களுக்கான முகவரி என்று இந்தச் சேனலை சொல்ல்லாம்.
பெண்கள் தினமென்றால் பெண்கள் தினத்தை ஒட்டிய உரையாடல் சார்ந்த பெண்ணிய நூல்களும், மே தினமென்றால் அதை ஒட்டிய நூல்களும் என்று காலத்திற்கு ஏற்றவாறு நூல்கள் அறிமுக செய்யப்படுகின்றன. சமகால பிரச்சனைகளுடன் எப்படி வாசிப்பை இணைப்பது என்பதே சேனல் லட்சியம். இப்போது சமகாலத்தில் அரசியல் களத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை வருகிறதென்றால் அதை ஒட்டி நூல்களை அறிமுகம் செய்யும்போது மக்களை வாசிப்பை நோக்கி கொண்டு வரமுடியுமென்று நினைக்கிறேன்.