அகவெளி வாழ்வியல் நடுவம் என்பது இயற்கை வழி வேளாண்மை, மரபு மருத்துவம், சுவரில்லா கல்வி வாயிலாக இயற்கையோடு இயைந்து வாழும் சமூகத்தை உருவாக்க செயல்படுகின்ற அமைப்பு.
நோக்கம்:
1. பல்லுயிர்ச் சூழலுக்கு இசைவான இயற்கை வழி வேளாண் முறைகள் குறித்து பயிற்சி அளித்தல்.
2. மரபு மருத்துவ முறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
3. குழந்தைகளின் தனித்திறன் மற்றும் நற்பண்புகளை வெளிக்கொணரும் சரியான கல்வி முறையை
நடைமுறைப்படுத்துதல்.
4. இயற்கை வழியில் விளைந்த வேளாண்
விளைபொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல்.
5. பாரம்பரிய கால்நடை ரகங்களை பாதுகாத்தல்.
6. மரபுக் கலைகளை ஊக்குவித்தல்.
7. பாரம்பரிய உணவுகள், உணவு முறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
8. தற்சார்பு வாழ்வியல் முறைகளை ஊக்குவித்தல்.
தொடர்பு எண்: 7639494950
மின் அஞ்சல்: agaveliinnerspace@gmail.com