இந்த உலகில் உள்ள அமானுஷ்ய உண்மைகளை வெளிப்படுத்தும் அதி உன்னதமானதும் அவசியமானததும்தான் ஜோதிடம், ஏனென்றால் இது மெய்ஞானத்தோடும் விஞ்ஞானத்தோடும் தொடர்புடையது .விண்வெளியில் உள்ள அண்ட சராசரங்களையும் நிர்வகிக்கும் சர்வ வல்லமைகொண்டது இவ்வுலகில் நடக்கும் நடக்கவிருக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் உள்ளடக்கியதுதான் ஜோதிடம்.
மனிதனுக்கு ஏழு பிறவிகள் இருப்பதாக வேதங்கள் சொல்கிறது. அதில் நாம் எத்தனையாவது பிறவி, இதற்கு முந்தைய பிறவியில் நாம் என்னவாக இருந்தோம்? என்ற கேள்வி சுவாரஸ்யம் நிறைந்தது. நாளை என்ன நடக்கும் என்பது தெரியாவிட்டாலும், நாளை அது தெரிந்து விடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் நேற்று என்கிற முன்பிறவி என்னாவாக இருந்திருக்கும்? நாம் எங்கே இருந்திருப்போம்? யாராக வாழ்ந்திருப்போம். என்ற கேள்விக்கு விடை தேடும் ஆசை அனைவருக்குமே இருக்கிறது.