பலன் தரும் துதிகள் | PALAN THARUM THUDHIGAL

104 videos • 359 views • by VTV ⚙️ ஸ்ரீ சுதர்சன சதகம் ⚙️ ⚜️சுதர்சனசக்கரம் பகவான் விஷ்ணுவின் பிரதான ஆயுதங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. ⚜️இதை ஆயுதபுருஷன் என்று அழைப்பார்கள். பஞ்சாயுதங்களில் முதன்மை பெற்றது சுதர்சனம். ⚜️பஞ்சாயுதங்கள் உணர்வற்ற வெறும் ஆயுதங்கள் அல்ல.ஜீவன் உள்ளவை .இவை ஆயுதங்களாக இருந்து விஷ்ணு பெருமாளுக்குப் பணிபுரியும் வைகுண்டத்திலிருக்கும் நித்ய சூரிகள் என்னும் தேவதைகள். ⚜️ஆழ்வார்களில் திருமழிசை ஆழ்வார் சுதர்சன சக்கரத்தின் அம்சமாக புகழப்படுகிறார். இவர் பெருமாளின் வலது கரத்தில் உள்ளார். ⚜️எனினும் வியூக அவதாரங்களில் சுதர்சன சக்கரத்தின் இடம் மாறுகிறது.சுதர்சன சக்கரம் சக்கரத்தாழ்வான் திருவாழியாழ்வான் ஹேதிராஜன் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். "சக்ர ரூபஸ்ய சக்ரினே" ⚜️எம்பெருமானே சுதர்சன ரூபத்தில் உள்ளதாகவும் அவரே அந்த சக்கராயுதத்தை ஏந்துவதாகவும் ஸ்ரீ வேதாந்த தேசிகர் தன் ஷோடஷாயுத ஸ்தோத்திரத்தில் கூறியுள்ளார். ⚜️புராண இதிகாசங்களில் பல இடங்களில் சுதர்சனத்தின் பெருமைகள் பேசப்படுகிறது.அதில் முக்கியமான ஒன்று கஜேந்திர மோக்ஷம். ⚜️சக்கரத்தாழ்வானுக்கு பதினாறு ஆயுதங்கள் உள்ளன. ⚜️அவை, சக்கரம் மழு ஈட்டி தண்டு அங்குசம் அக்னி கத்தி ஆகியவை வலப்புற கையிலும் ⚜️வேல் சங்கம் வில் பாசம் கலப்பை வஜ்ரம் கதை உலக்கை சூலம் ஆகியவை இடது கையிலும் ஏந்தியுள்ளார். ⚜️சுதர்சனர் ஈட்டியால் குத்தி அசுரர்களை அழிக்கிறார்.தவறு செய்பவர்களை தண்டத்தால் திருத்துகிறார்.இவ்வாறு 16 ஆயுதங்கள் கொண்டு பக்தர்களின் குறைகளை தீர்த்தும் எதிரிகளை அழித்தும் செயல்படுகிறார். ⚜️இந்த சுதர்சனர், தீராப் பகையை அழித்து போக்க முடியாத பயத்தை போக்க வல்லவர் . ⚜️மனிதர்களின் பெரும்பாலான பாதிப்புகளுக்கு மூலகாரணம் ருணம் ,ரோகம், சத்ரு எனப்படும் கடன், வியாதி,எதிரி ஆகியவை தான்.அவற்றை அழித்து மன உளைச்சலை போக்கி சாந்தத்தை தருபவர் சுதர்சனர். ⚜️மந்த புத்தி உடைய மாணவர்களுக்கு நல்லறிவை ஏற்படுத்தி கல்வி தொடர்பான தடைகளை நீக்கி கல்வி மற்றும் யோக ஞானத்தை அருள்வார். ⚜️கெட்ட கனவுகள், பேய் ,பிசாசு, சித்த பிரம்மை ,பில்லி ,சூனியம் ,ஏவல் போன்ற மனம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்தும் விடுபடச்செய்கிறார். ⚜️ கூரத்தாழ்வாரால் பாடப்பட்டது இந்த சுதர்சன சதகம். ⚜️இதை பாராயணம் செய்து, சுதர்சனர் ஆலயத்தில் நெய் விளக்கேற்றியும் பல முறை வலம் வந்தும் சுதர்சனர் அருளை பெறலாம். ⚜️வீட்டில் இருந்தேயும் பகவான் விஷ்ணுவின் முன்போ அல்லது சக்கரத்தாழ்வார் படம் முன்போ பாராயணம் செய்யலாம்.இவரை எந்திரம் மூலமும் வழிபடலாம். "ரங்கேச விஜ்ஞப்தி கராமயஸ்ய சகார சக்ரேசநுதிம் நிவ்ருத்தயே சமாச்சரயேஹம் வரபூரணீம் ய: தம் கூரநாராயண நாமகம் முநிம்" ⚜️திருவரங்க பெருமாள் அரையரின் நோய் தீருவதற்காக எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றவல்ல திருவாழியாழ்வான் விஷயமாக ஸ்தோத்திரமாகிய ஸ்ரீசுதர்சன சதகத்தை அருளிச்செய்த ஸ்ரீ கூர நாராயணரை நான் வணங்குகிறேன். ⚜️அரையர் என்போர் வைணவக் கோயில்களில் திராவிட வேதம் எனப்படும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைப் பாடும் இறைத் தொண்டர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் ஆடவரே. இவர்கள் இப்பாடல்களை அபிநயத்துடன் தாள ஒலிக்கேற்ப ஆடிப் பாடும் நிகழ்ச்சி அரையர் சேவை என்று அழைக்கப்படுகிறது. ⚜️பகவான் விஷ்ணுவையும் சுதர்சனரையும் கூர நாராயணரையும் வணங்கி அடுத்த பதிவு முதல் சுதர்சன சதகத்தை பதிவிட உள்ளோம்.அனைவரும் சுதர்சனரின் அருளை பெற்று நோயின்றி குறைவற்ற செல்வத்தோடு வாழ அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். ஓம் நமோ நாராயணாய..