பாடல் என் பசி பாடும் ஆற்றல் மனித குலத்துக்கு மட்டும் இயற்கை அளித்த கொடை.
பிறப்பு முதல் சாவு வரை மனித வாழ்வோடு கலந்துள்ளது இசை.. வயிற்றுக்கு உணவில்லையாயினும் செவிக்கு நல்ல பாடல் இருந்தால் பசியை கூட தீர்த்து விடும்.
இசையோடு சேர்ந்து அழுது சிரித்து ஆனந்தித்து புளகாங்கித்து மெய்சிலிர்தது இறையுணர்ந்து, காதலாகிக் கசிந்திருக்கிறேன்.
வாலிபத்தில் இளைஞர்களை தாலாட்டிய பாடல்கள் மறந்துவிடுவதில்லை..
ஊரெல்லாம் அகதியாக அலைந்த போது நான் காவிச் சென்றது பெட்டி நிறைய ஒலிப்பேழைகளையே. அப்போது வானொலிப் பெட்டி வாங்க வேண்டும் என்ற வைராக்கியத்தில் எறிகணை வீச்சுக்கு மத்தியில் தெரியாத ஊரில் புரியாத வயதில் துவிச்சக்கரவண்டியில் சென்ற போது பாதை தவறி என் பெற்றோரை பிரிந்து பின் கண்டறிந்த கதையும் உண்டு.
சிறு வயதின் தீராத தேடல் தான் இவ்வாறு அரிதான பாடல், சுவையான தேனிசை கீதங்களை வலையொளியில்(YouTube) பதிவேற்றத் தூண்டியது.
தெவிட்டாத தேன்சுவை தரும் பாடல்கள் சரியாக வகை செய்து இங்கே தரப்படுகிறது. நேயநெஞ்சங்களின் ஊக்கப்படுத்தல்கள் என் பதிவேற்றலுக்கு உரமூட்டும்.
செவிப்புலன் ஊடுருவி இதயத்தை தாலாட்டி இன்பத்தை ஊட்டும்.