குழந்தைகள் நலச் செய்திகளை அழகிய தமிழில் சொல்ல உருவாக்கப்பட்ட காணொளிகளின் பக்கம்.
வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு டாக்டர் ஆர்.செல்வன் அவர்களின் காணொளிகள் பதிவேற்றப்படும். வெள்ளிக்கிழமை மாலை 4. மணிக்கு பல்வேறு சிறப்பு மருத்துவர்களுடன் கலந்துரையாடல் காணொளி வெளியிடப்படும்
நான் மருத்துவர் இர. செல்வன்.MBBS,DCH,DNB(PED)MRCPCH(UK).ஈரோடு நகரில் 28 ஆண்டுகளாக குழந்தை நல மருத்துவராக உள்ளேன் . தேசிய மற்றும் மாநில குழந்தை நல மருத்துவர் கருத்தரங்குகளில் இதுவரை 15க்கும் மேற்பட்ட மருத்துவஅறிவியல்ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளேன்.
தமிழக குழந்தைகள் மருத்துவர் சங்கத்தின் வெளியீடான ஸ்மார்ட் புக்கின் தொகுப்பாசிரியராகவும் தாய்ப்பாலூட்டல்- மருத்துவரின் வழிகாட்டி நூலின் ஆசிரியராகவும் 2 புத்தகங்களை பதிப்பித்துள்ளேன். மக்களுக்கு உதவும் நலச் செய்திகளை www.childhealthtoday.com வலைத்தளத்தில் எழுதிவருகிறேன். ஒலிக்கோவைகளை சைல்டுஹெல்த் டுடே என்ற பெயரில் ITunes, மற்றும் Google podcasts தளங்களில் வெளியிடுகிறேன்.