காலம் காலமாக கதை கேட்டும், கதை சொல்லியும் வந்த சமூகம் நம் சமூகம்.ஒவ்வோர் வீட்டிலும் தாத்தா பாட்டி என்ற தலைசிறந்த கதை சொல்லிகள் இருந்தார்கள். அவர்கள் மாலை நேரத்தில் சொல்வதற்கென்றே தனி ரக கதைகளை வைத்திருந்தார்கள். குழந்தைகளும் ஆர்வமுடன் அந்த கதைகளை கேட்டார்கள். வாழ்வியல் நெறிகள் அனைத்துமே அந்த கதைகளுக்குள் ஏராளம் அவர்களுக்கு புதைந்து கிடந்தது. பள்ளிகளிலும் இதற்கென்று பாட வேளைகள் ஒதுக்கப்பட்டன. மொத்தத்தில் குழந்தைகள் கதை கேட்டு மகிழ்ந்த காலம் இருந்தது.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் கூட்டுக் குடும்பங்கள் குறைந்து வருவது, நகர்புற வாழ்வு , பொருளாதார தேடல்கள், மதிப்பெண்கள் நோக்கி நகரும் கல்வி, தெலைக்காட்சி, அலைபேசி என்று பற்பல காரணிகளால் இன்று குடும்பங்களில் கதை சொல்லல் குறைந்து கொண்டு வருவது வருத்ததுக்குரியது.
இப்பொழுது சிறிது வாசிப்பு அதிகரித்து வரும் சூழலில், சிறார் கதைகளோடு, பெரியவர்களுக்கான சிறுகதைகள், நாட்டுப்புற கதைகள் எல்லாவற்றையும் இந்த சேனலில் நீங்கள் கேட்டு மகிழலாம்.
#children_stories
#storyteller
#shortstories
#poonkodi_storyteller
#folk_stories