#ஜீவசமாது அடைந்த #சித்தர் ஸ்ரீ சேவுகப்பெருமாள் அவர்களின் ஆலயம். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அமைந்திருக்கும் பழமையான ஆலயம். அரு. கந்தசாமி மகன் சேவுகப்பெருமாள் 100 ஆண்டு காலங்களுக்கு முன்பு ஏட்டு பாடம் எடுக்கும் வாத்தியாராக இருந்துள்ளார்,சிவ பக்தரான இவர் ஜீவசமாது அடைய வேண்டி சொந்தமாக இடத்தை இதற்கென வாங்கி அங்கு முன்பே ஜீவசமாது அடைவதற்கான பணிகளை மேற்கொண்டிருந்தார்.கோவில் குரு பூஜைகள் செய்யப்பட்டு வந்தது காலப்போக்கில் கோவில் வழி பாடின்றி சிதலம் அடைந்து காணப்பட்டது பின்பு சித்தர் கோவில் புன்னரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்து பலாலாய பூஜை ஏப்ரல் -2020 துவங்கி வைத்தோடு கோவில் புனரமைத்து ஆகஸ்ட் -24 -2020(ஆவணி -8) கோவில் கும்பாபிஷேகம் விழா மிக சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகம் விழாவின் போது 9 கருடன் காட்சியாளித்தது அங்கு கூடியிருந்த 1000 கணக்கான மக்களுக்கு சித்தர் அருள் கிடைத்த நிகழ்வாக அமைந்தது.வருகிறது.மேலும் மன அமைதி,குழந்தை வரம், தொழிலில் விருத்தி, நோய் நொடியற்ற செல்வ செழிப்பனா வாழ்வை அள்ளி தரும் வள்ளலாக அமைத்துள்ளார் என்பதே இவரின் தனிசிறப்பு.#SIDDAR SEVUGA PERUMAL #TRUST.