நமது மண்... நமது வாழ்வியல்... நமது அதிகாரம்... இவைதான் உள்ளாட்சி டிவி யின் உள்ளடக்கங்கள்... சாமானியனும் அதிகாரத்திற்கு வர முடியும் என்கிற நமது அரசியலமைப்புச் சட்டம் எழுச்சி பெற வேண்டும்... அரசியலை தீர்மானிக்கும் சக்திகளாக இளைஞர்கள் மாற வேண்டும்... இவற்றை சாத்தியப் படுத்தும் துணிவோடும் கிராமப்புற பொருளாதார மேம்பாடு, விவசாயம், உள்ளிட்ட தொழில்களின் வளர்ச்சி, ஊழல் லஞ்சமற்ற நிர்வாகம் போன்றவற்றிற்காகவும் ஊடகம் என்கிற அமைப்பின் வழியாக உறவாட் முனைகிறோம்..... ஒவ்வொரு ஊருக்கும் சமூகப் பற்றுள்ள ஒரு ஹீரோவை அடையாளம் காட்டுவதும் அடிப்படை நோக்கங்களில் ஒன்று... நாம் பிறந்த ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் யார் வேண்டுமானாலும் இந்தப் பணியில் இணைந்து கொள்ளலாம்... இணைவோம்... வெல்வோம்... இதுவே தாரக மந்திரம்...