Channel Avatar

Rock Eternal Church @UC_MRztaLeHhPmUa-BqjrjRQ@youtube.com

19K subscribers - no pronouns :c

Visit our website - rocketernal.in/ ABOUT US We believe in


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Rock Eternal Church
Posted 6 hours ago

Rock Eternal Ministries:
GUARD YOUR HEART
“Guard your heart above all else, for it determines the course of your life.” Proverbs4:23. Words are like seeds. You hear about the economy, inflation, viruses, division. This can bring fear and worry. What’s going to happen? - if you dwell on them long enough, they’ll take root and become a reality. Don’t give the doubt from other people or your own negative thoughts permission to become a reality. The good news is that you can choose what gets planted in your soil. Keep your mind filled with positive, hopeful, faith-filled thoughts. For Prayer-9176844644

இருதயத்தைக் காத்துக்கொள்
“எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.” நீதிமொழிகள்4:23. வார்த்தைகள் விதைகள் போன்றவை. பொருளாதாரம், பணவீக்கம், வைரஸ்கள், பிரிவினை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது பயத்தையும், கவலையையும் கொண்டு வரக்கூடும். என்ன நடக்கப் போகிறது? - நீங்கள் அதைப்பற்றி நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தால், அவை வேரூன்றி நிஜமாகிவிடும். மற்றவர்களிடமிருந்தோ அல்லது உங்கள் சொந்த எதிர்மறை எண்ணங்களிடமிருந்தோ வரும் சந்தேகத்தை நிஜமாக மாற அனுமதிக்காதீர்கள். நற்செய்தி என்னவென்றால், உங்கள் மண்ணில் விதைக்கப்படுவதை நீங்களே தேர்வு செய்யலாம். உங்கள் மனதை நேர்மறை, நம்பிக்கை மற்றும் விசுவாசம் நிறைந்த எண்ணங்களால் நிரப்புங்கள்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.

106 - 4

Rock Eternal Church
Posted 1 day ago

Rock Eternal Ministries:
ABUNDANT BLESSING
“God is able to bless you abundantly, so that in all things at all times, having all that you need, you will abound in every good work.” 2Corinthians9:8. His provision is unlimited - When you trust in His faithfulness, you will abound in every good work He calls you to do. God’s blessings aren’t just for you; they overflow to those around you. Walk in His abundance, knowing He will always supply and sustain you. Your purpose is greater, and His provision is more than enough. For Prayer-9176844644

ஏராளமான ஆசீர்வாதம்
“நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச் செய்ய வல்லவராயிருக்கிறார்.” 2கொரிந்தியர்9:8. அவருடைய வழங்குதல் அளவில்லாதது - நீங்கள் அவருடைய உண்மைத்தன்மையை நம்பும்போது, அவர் உங்களை அழைக்கும் ஒவ்வொரு நற்செயலிலும் நீங்கள் பெருகியிருப்பீர்கள். கர்த்தருடைய ஆசீர்வாதங்கள் உங்களுக்கு மாத்திரமல்ல; உங்களை சுற்றியுள்ளவர்களிடமும் நிரம்பி வழியும். அவர் உங்களுக்கு எப்பொழுதும் கொடுத்து, ஆதரிப்பார் என்பதை அறிந்து, அவருடைய மிகுதியில் நடக்கவும். உங்களுடைய நோக்கம் மேலானது, அவருடைய வழங்குதல் போதுமானதைவிட அதிகமானது.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.

148 - 5

Rock Eternal Church
Posted 2 days ago

Rock Eternal Ministries:
ARISE AND SHINE
“Arise, shine, for your light has come, and the glory of the Lord is risen upon you.” Isaiah60:1. This is your moment—the glory of the Lord is rising upon you, and it’s time to step into your purpose. No more hiding or doubting, God’s favor is upon you in ways you’ve never imagined. His light will guide you through the darkness, and His glory will elevate you above every obstacle. It’s your time to shine with His strength and power. Embrace the light, and walk boldly into His greatness for you. For Prayer-9176844644

எழும்பிப் பிரகாசி
“எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.” ஏசாயா60:1. இது உங்கள் தருணம்—கர்த்தருடைய மகிமை உங்கள்மீது எழுகிறது, உங்கள் நோக்கத்தில் அடியெடுத்து வைக்க வேண்டிய நேரமிது. இனி ஒளிந்து கொள்ளவோ, சந்தேகிக்கவோ வேண்டாம், கற்பனை செய்துகூட பார்க்க முடியாத வழிகளில் கர்த்தருடைய தயவு உங்கள்மேல் இருக்கிறது. அவருடைய ஒளி இருளின் வழியாக உங்களை வழிநடத்தும், மேலும் அவருடைய மகிமை உங்களை எல்லா தடைகளுக்கும் மேலாக உயர்த்தும். அவருடைய பலத்தாலும் வல்லமையாலும் பிரகாசிக்க வேண்டிய நேரமிது. ஒளியை ஏற்றுக்கொண்டு, உங்களுக்கான அவருடைய மகத்துவத்தில் தைரியமாக நடந்து செல்லுங்கள்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.

288 - 12

Rock Eternal Church
Posted 3 days ago

Rock Eternal Ministries:
BLESSINGS OF WORSHIP
“Worship the Lord your God, and His blessing will be on your food and water. I will take away sickness from among you.” Exodus23:25. When you worship the Lord your God, He promises to bless every area of your life. His blessing will cover your food, your water, and your health—nothing will be lacking. God is faithful to remove sickness and restore your well-being. Your worship invites His divine favor and protection into your life. Honor God with your praise, and He will take care of the rest. For Prayer-9176844644

ஆராதனையின் ஆசீர்வாதங்கள்
“உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.” யாத்திராகமம்23:25. உங்கள் தேவனாகிய கர்த்தரை நீங்கள் ஆராதிக்கும்போது, அவர் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் ஆசீர்வதிப்பதாக வாக்களிக்கிறார். அவருடைய ஆசீர்வாதம் உங்கள் உணவு, தண்ணீர் மற்றும் ஆரோக்கியத்தை உள்ளடக்கும்—எதுவும் குறைவுபடாது. கர்த்தர் சுகவீனத்தை நீக்கி, உங்கள் நல்வாழ்வை மீட்டெடுக்க உண்மையுள்ளவராய் இருக்கிறார். உங்கள் ஆராதனை அவருடைய தெய்வீக கிருபையும், பாதுகாப்பையும் உங்கள் வாழ்க்கைக்குள் கொண்டு வருகிறது. கர்த்தரை உங்கள் துதியினால் கனப்படுத்துங்கள், அவர் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வார்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.

234 - 8

Rock Eternal Church
Posted 4 days ago

Rock Eternal Ministries:
THE POWER OF CONNECTION
“As iron sharpens iron, so one person sharpens another.” Proverbs27:17. Just as iron sharpens iron, God places people in your life to help refine you. Relationships are more than companionship; they are tools for spiritual and personal growth. Surround yourself with those who challenge you to rise higher and encourage you to walk purposefully. The right connections will sharpen your character and strengthen your faith. Be intentional about who you allow to speak into your life. Your growth depends on the people you walk with. For Prayer-9176844644

தொடர்பின் வல்லமை
“இரும்பை இரும்பு கருக்கிடும்; அப்படியே மனுஷனும் தன் சிநேகிதனுடைய முகத்தைக் கருக்கிடுகிறான்.” நீதிமொழிகள்27:17. இரும்பை இரும்பு கூர்மையாக்குவதுபோல, உங்களை செம்மைப்படுத்த உதவும்படி கர்த்தர் ஆட்களை உங்கள் வாழ்க்கையில் வைக்கிறார். உறவுகள் தோழமையைவிட மேலானது; அவை ஆவிக்குரிய மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கான கருவிகள். உங்களை மேலே உயர சவால் விடுபவர்களுடனும், நோக்கத்துடன் நடக்க உங்களை உற்சாகப்படுத்துகிறவர்களுடனும் உங்களைச் சூழ்ந்து கொள்ளுங்கள். சரியான தொடர்புகள் உங்கள் குணத்தை கூர்மையாக்கி, உங்கள் விசுவாசத்தை வலுப்படுத்தும். உங்கள் வாழ்க்கையில் யாரை பேச அனுமதிக்கிறீர்கள் என்பதில் கவனமாய் இருங்கள். உங்கள் வளர்ச்சி நீங்கள் யாருடன் நடக்கிறீர்கள் என்பதை பொறுத்தது.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.

175 - 4

Rock Eternal Church
Posted 5 days ago

Rock Eternal Ministries:
HUMILITY
“The reward for humility and fear of the Lord is riches and honor and life.” Proverbs22:4. Humility opens the door to blessings beyond measure. When you honor the Lord with humility and reverence, He promises to reward you with riches, honor, and life. It’s not about seeking greatness for yourself, but about placing God first and trusting in His timing. True wealth comes from a heart that humbles itself before God. Keep your heart humble and trust that God’s rewards are greater than anything you could ever achieve. For Prayer-9176844644

மனத்தாழ்மை
“தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும், மகிமையும், ஜீவனுமாம்.” நீதிமொழிகள்22:4. மனத்தாழ்மை அளவற்ற ஆசீர்வாதங்களுக்கான கதவை திறக்கிறது. கர்த்தரை நீங்கள் மனத்தாழ்மையுடனும், பயபக்தியுடனும் கனப்படுத்தும்போது, அவர் உங்களுக்கு ஐஸ்வர்யம் மகிமை மற்றும் ஜீவனை பரிசாக அளிப்பதாக உறுதியளிக்கிறார். இது உங்களுக்கான மகத்துவத்தை தேடுவது பற்றியது அல்ல, மாறாக கர்த்தரை முதலில் வைத்து, அவருடைய நேரத்தை நம்புவது பற்றியதாகும். உண்மையான செல்வம் கர்த்தருக்கு முன்பாக தன்னை தாழ்த்துகிற இருதயத்திலிருந்து வருகிறது. உங்கள் இருதயத்தை தாழ்மையுடன் வைத்து, கர்த்தருடைய வெகுமதிகள் நாம் அடையக்கூடிய எதையும்விட பெரியவை என்று நம்புங்கள்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.

223 - 10

Rock Eternal Church
Posted 6 days ago

Rock Eternal Ministries:
MASTERPIECE
“I praise You because I am fearfully and wonderfully made.” Psalm139:14. You are not here by accident—God designed you with purpose and intention. He created you fearfully and wonderfully, and everything about you reflects His divine handiwork. When you feel less than, remember that God doesn't make mistakes. His plan for your life is greater than you can imagine. Praise Him today for the masterpiece that you are—fearfully and wonderfully made. For Prayer-9176844644

தலைசிறந்த படைப்பு
“நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்.” சங்கீதம்139:14. நீங்கள் தற்செயலாக இங்கு வரவில்லை—கர்த்தர் உங்களை நோக்கத்துடனும், திட்டத்துடனும் வடிவமைத்தார். அவர் உங்களை பிரமிக்கத்தக்க அதிசயமாய் படைத்தார், மேலும் உங்களைப் பற்றிய அனைத்தும் அவருடைய தெய்வீக கைவேலையை பிரதிபலிக்கின்றது. நீங்கள் குறைவானவர்களாக உணரும்போது, கர்த்தர் தவறு செய்வதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கைக்கான அவருடைய திட்டம் நீங்கள் கற்பனை செய்ய முடிந்ததைவிட பெரியது. இன்றைக்கு, நீங்கள் ஒரு தலைசிறந்த படைப்பாய்—பிரமிக்கத்தக்க அதிசயமாய் இருப்பதற்காக அவரைத் துதியுங்கள்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.

286 - 10

Rock Eternal Church
Posted 1 week ago

Rock Eternal Ministries:
MERCY FOREVER
“His mercy extends to those who fear Him, from generation to generation.” Luke1:50. God’s mercy is not just for today; it extends from generation to generation. He has mercy for your family, your children, and their children—His favor never runs out. When you honor God, His mercy flows through your bloodline, breaking generational curses and bringing blessings. You may not see it all right now, but His grace sets the foundation for future generations. Trust that God's mercy will cover you and those you love. For Prayer-9176844644

என்றென்றைக்கும் உள்ள இரக்கம்
“அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது.” லூக்கா1:50. கர்த்தருடைய இரக்கம் இன்றைக்கானது மட்டுமல்ல; அது தலைமுறை தலைமுறையாக நீடிக்கிறது. அவர் உங்கள் குடும்பத்திற்கு, உங்கள் பிள்ளைகள் மற்றும் அவர்களின் பிள்ளைகள்மீது இரக்கம் பாராட்டுகிறார்—அவருடைய தயவு ஒருபோதும் தீர்ந்து போவதில்லை. நீங்கள் கர்த்தரை கனப்படுத்தும்போது, அவருடைய இரக்கம் உங்கள் சந்ததியின் வழியாக பாய்ந்து, தலைமுறை சாபங்களை உடைத்து ஆசீர்வாதங்களைக் கொண்டு வருகிறது. நீங்கள் இப்பொழுது எல்லாவற்றையும் முழுமையாக புரிந்து கொள்ளவோ காணமுடியாமலோ இருக்கலாம், ஆனால் அவருடைய கிருபை எதிர்கால சந்ததியினருக்கு அடித்தளமிடுகிறது. கர்த்தருடைய இரக்கம் உங்களையும், நீங்கள் நேசிப்பவர்களையும் சூழ்ந்துக் கொண்டு பாதுகாக்கும் என்று நம்புங்கள்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.

199 - 7

Rock Eternal Church
Posted 1 week ago

Rock Eternal Ministries:
PRAY
“Pray in the Spirit at all times and on every occasion.” Ephesians6:18. Prayer is your weapon, your connection to divine strength and guidance. Don’t wait for the perfect moment—pray at all times with persistence and faith. When you pray in the Spirit, you tap into a supernatural power that moves mountains and changes situations. Keep your heart aligned with God, and trust that your prayers are always heard. The more you pray, the more you align with His perfect will for your life. For Prayer-9176844644

ஜெபியுங்கள்
“எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணுங்கள்.” எபேசியர்6:18. ஜெபம் உங்கள் ஆயுதம், தெய்வீக வலிமை மற்றும் வழிகாட்டுதலுக்கான உங்கள் தொடர்பு. சரியான தருணத்திற்காக காத்திருக்காதீர்கள்—எல்லா நேரங்களிலும் விடாமுயற்சியுடனும், விசுவாசத்துடனும் ஜெபியுங்கள். நீங்கள் ஆவியில் ஜெபிக்கும்போது, மலைகளை நகர்த்தி சூழ்நிலைகளை மாற்றும் ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமையை பயன்படுத்துகிறீர்கள். உங்கள் இருதயத்தை கர்த்தருடன் ஒருங்கிணைத்து, உங்கள் ஜெபங்கள் எப்பொழுதும் கேட்கப்படுகிறது என்பதை நம்புங்கள். நீங்கள் எவ்வளவு அதிகமாக ஜெபிக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் வாழ்க்கைக்கான அவருடைய பரிபூரண சித்தத்தோடு ஒருங்கிணைவீர்கள்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.

255 - 9

Rock Eternal Church
Posted 1 week ago

Rock Eternal Ministries:
UNSTOPPABLE GOODNESS
“I will never stop doing good to them.” Jeremiah32:40. God has made a covenant with you, a promise He will always keep. His goodness toward you will never end, no matter your challenges. When the road gets tough, His blessings and protection remain constant. You are His beloved, and His favor is in your life. No obstacle or setback can stop His goodness from reaching you. Trust that He is working behind the scenes, turning things around for your good. For Prayer-9176844644

தடுக்கமுடியாத நன்மை
“அவர்களுக்கு நன்மை செய்யும்படி, நான் அவர்களை விட்டுப் பின்வாங்குவதில்லை.” எரேமியா32:40. கர்த்தர் உங்களுடன் ஒரு உடன்படிக்கை செய்துள்ளார், அந்த வாக்குறுதியை அவர் எப்போதும் காப்பாற்றுவார். உங்கள் சவால்கள் எதுவாக இருந்தாலும், அவர் உங்களிடம் காட்டும் நன்மை ஒருபோதும் முடிவடையாது. நாம் போகும் பாதை கடினமாகும்போதும், அவருடைய ஆசீர்வாதங்களும் பாதுகாப்பும் நிலைத்திருக்கும். நீங்கள் அவருக்கு பிரியமானவர்கள், அவருடைய தயவு உங்கள் வாழ்க்கையில் இருக்கிறது. எந்தத் தடையும் அல்லது பின்னடைவும் அவருடைய நன்மை உங்களிடம் வந்து சேருவதை தடுக்கமுடியாது. அவர் உங்களுக்கு பின்பாக கிரியை செய்து, உங்கள் நன்மைக்காக எல்லாவற்றையும் மாற்றுகிறார் என்று விசுவாசியுங்கள்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.

290 - 7