Channel Avatar

ARR clickz @UCTLD4M7f7VLSkv0yThS55_Q@youtube.com

4.2K subscribers - no pronouns :c

Hello home makers....!!!!🏘️ Razul bibi is here!!!!!,🧕 Le


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

ARR clickz
Posted 2 weeks ago

1 - 0

ARR clickz
Posted 4 weeks ago

முயல், ஆமை கதையின் லேட்டஸ்ட் வெர்ஷன்.!

முயலும் ஆமையும் ஓட்டப் பந்தயம் வைக்கின்றன. முயல் வேகமாக ஓடினாலும், வழியில் தூங்கிவிட, ஆமை மெதுவாகச் சென்றாலும் தூங்கும் முயலைத் தாண்டிச் சென்று பந்தயத்தில் ஜெயித்துவிடுகிறது.

நீதி: தலைக்கனம் கூடாது. வேகத்தைவிட, நிதானம் முக்கியம் ஜெயிக்க!

வெயிட்... இனிதான் கதையே ஆரம்பம்!

தோல்வியை நினைத்து மனவேதனை அடைந்த முயல், ‘நாம ஓவர் கான்ஃபிடன்ட்டா இருந்ததாலதான் தோத்துட்டோம்’ என்பதைப் புரிந்துகொண்டு, மீண்டும் ஆமையைப் பந்தயத்திற்கு அழைக்கிறது. ஆமையும் ஒப்புக்கொள்ள, பந்தயம் ஆரம்பிக்கிறது. முயல், இடையில் எங்கேயும் தூங்காமல் ஓடிச் சென்று, ஜெயிக்கிறது.

நீதி2: நிதானம் முக்கியம் தான், ஆனால் வேகம் அதை விட சிறப்பானது!

கதை முடிந்துவிட்டது என்று நினைத்தால்... அதுதான் இல்லை!
காலங்காலமாக ஜெயித்து வந்த ஆமையால் இந்தத் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இம்முறை அது முயலை பந்தயத்துக்கு அழைக்கிறது. இங்குதான் ஒரு ட்விஸ்ட்! பந்தயம் வழக்கமான பாதையில் இல்லை என்று ஆமை சொல்ல, முயலும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது (!).

ஒன்... டூ... த்ரீ...

முயல் இடையில் எங்கேயும் இளைப்பாறாமல் ஓட, ஆமை மெதுவாகச் சென்றது. முயல் ஒரு இடத்தில் சடன் பிரேக் போட்டாற்போல நிற்கிறது. பார்த்தால் அங்கே ஒரு ஆறு!
அதைக் கடந்தால் தான் பந்தய இலக்கை அடைய முடியும். ஆற அமர வந்து சேர்ந்த ஆமை அசால்ட்டாக ஆற்றை நீந்தி கோட்டைத் தொட்டு பந்தயத்தில் ஜெயிக்கிறது!

நீதி3: நாம் போட்டியிடும் போது எதிரியின் பலம் அறிந்து, ஆடுகளத்தை நம் பலத்துக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

இன்னும் கதை முடியவில்லை மக்களே.!

ஒரு வழியாக ஆமையும் முயலும் நண்பர்கள் ஆகி, இருவரும் சேர்ந்து பேசி, ஒரு பந்தயம் வைக்க முடிவு செய்கிறார்கள். ஆமை டிவிஸ்ட் வைத்த அதே பாதையில்தான் இம்முறையும் பந்தயம். முயல் வேகமாக ஓட, ஆமை மெதுவாக நகர்கிறது... ஆற்றின் கரை வரை. அதற்குப் பின்..?

ஆமை ஆற்றில் நீந்துகிறது. அப்படியென்றால் முயல்? ஆமையின் முதுகில். கரை சேர்ந்ததும், மீதம் உள்ள தூரத்தை, ஆமையை தன் முதுகில் வைத்தவாறு முயல் ஓடிக் கடக்கிறது. இருவரும் ஒரே நேரத்தில் பந்தயக் கோட்டை அடைகிறார்கள்; இருவரும் வெல்கிறார்கள்!

நீதி4: டீம் வொர்க் வின்ஸ்!

டீம்_வொர்க்

‘‘கணிதத்தில் 1+1 = 2. ஆனால், வாழ்வில் 1+1 = 3. அதாவது, இருவரின் பலம் சேரும்போது, அது ஒரு புது பலத்தை உருவாக்கும். அதனால்தான் நிறுவனங்களில் பணியாட்களைத் தேர்வு செய்யும்போது, அவர்களின் டீம் வொர்க் திறனை முக்கியமாகச் சோதிக்கிறார்கள்.அலுவலக வேலைகளுக்கு மட்டும் இல்லை, வீடுகளிலும் டீம் லிவ்ங் இருந்தால்தான், ஒரு குடும்பம் சிறப்பாகச் செயல்படும். எல்லோரின் பங்களிப்பும் தேவை குடும்பத்தில். எனவே, டீம் வொர்க் வளர்ச்சிக்கு மட்டும் இல்ல, வாழ்வதற்கும் மிக முக்கியம்.

இந்த லேட்டஸ்ட் முயல், ஆமை கதையில் வரும் எல்லா கருத்துக்களுமே ஜெயிக்க முக்கியமானவை. நிதானம் முக்கியம், வேகம் முக்கியம், புதுப்புது வழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியம், இந்த கதை இறுதியாக உணர்த்தும் ‘யூ வின், ஐ வின்!’ அப்ரோச் முக்கியம். மொத்தத்தில், இதுபோல மல்டி ஸ்கில் முக்கியம். அதை கற்றுக் கொடுப்பதும் டீம் வொர்க்கே!
வாழ்க்கையில் முயலும் ஜெயிக்கும், ஆமையும் ஜெயிக்கும்.

முயற்சி மட்டுமே ஜெயிக்காது.
முயன்று தோற்றால் அனுபவம்.
முயலாமல் தோற்றால் அவமானம்.
வெற்றி நிலையல்ல,தோல்வி முடிவல்ல..
முயற்சியை பொறுத்து தான் வெற்றி, தோல்வி..!!

4 - 0

ARR clickz
Posted 1 month ago

1 - 0

ARR clickz
Posted 2 months ago

ARR CLICKZ நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம்,


யாரும் நம்பவில்லை என்பதற்காக
நீங்கள் வலிமை இழந்தவர்களாக
மாறிப்போய் இருக்கிறீர்கள்........

நிழலுக்கு தான் உருவம் வேண்டும்
நிஜத்திற்கு நீங்கள் மட்டுமே போதும்.....

உங்களின் விமர்சனங்களுக்குப் பின்னால் யாரெல்லாம் விடைபெற்றுக் கொண்டே இருக்கிறார்களோ ,
அவர்கள் கடந்து போகட்டும் என்று
தள்ளியே இருங்கள்....

நெருப்பு தொட்டால் சுடும் என்பது
அவர்களுக்குத் தெரிந்திருப்பதற்கு வாய்ப்பில்லை....

உங்கள் உண்மை யாருடைய
இதயங்களையெல்லாம் காயப்படுத்துகிறதோ...
அங்கே நீங்கள் மருந்திட
வேண்டிய அவசியமில்லை.
சில இடங்களில் தனிமை மட்டும் தான்
தன்மானத்தோடு வாழ வைக்கும்.....

உங்கள் முன்னேற்றத்தை கண்டு
யாரெல்லாம் பழிக்கிறார்களோ,
அவர்கள் அன்னார்ந்து பார்க்கும் இடத்தில்
நீங்கள் பறந்து கொண்டிருக்கிறீர்கள்
என்பது தான் உண்மை.....

ஒருவரின் புறக்கணிப்பு .....
ஒருவருடைய ஏமாற்றம் .....
ஒருவருடைய தவறு ....
ஒருவரது நம்பிக்கை துரோகம் ....
என்று ஒவ்வொன்றாய் கடந்த பின்
கடைசியில் திரும்பிப் பார்க்கும் பொழுது
எல்லோரும் எங்கோ நின்று கொண்டிருப்பார்கள்......

கூட்டமாய் மேயும் ஆடுகளாய் வாழ்வதைவிட,
தனித்து வாழும் சிங்கமாய்
வாழ்ந்து விடுவது சிறப்பானது.....

நீங்கள் அழுவதாய் இருந்தால் அழுது விடுங்கள்.
கோபம் வந்தால் கோபப்பட்டு விடுங்கள்.
ஆத்திரம் தீரும் வரை வேண்டுமானால்
சப்தம் போட்டு விடுங்கள்....‌..
அமைதியாய் மட்டும் இருந்து விடாதீர்கள்......

அருவியின் அழகே அது ஆர்ப்பரித்துக்
கொட்டுவதில் தான் இருக்கிறது......

நம்பிக்கை நிறைந்த மனிதர்கள்
எவரிடத்திலும் மண்டியிடுவதும் இல்லை...
பிச்சை கேட்பதும் இல்லை.....
அது உணவாக இருந்தாலும் சரி ....
உண்மையான அன்பாக இருந்தாலும் சரி......
❣️❣️❣️❣️❣️💕❣️❣️❣️❣️❣️

1 - 2

ARR clickz
Posted 2 months ago

யாரும் பார்த்திடா வண்ணம்
கண்ணீரைத் துடைக்குமொரு நிலை

யாரும் பார்த்திடா வண்ணம்
அவமானங்களை
மறைக்க முயலுமொரு கலை

யாரும் கேட்கும் முன்னர்
விசும்பலை வேகமாய்
மறைக்குமொரு புன்னகை

யாரும் கண்டுகொள்ளும் முன்
சங்கடங்களை மறைத்திட
நகர்வதற்கான முயற்சி

யாரும் நக்கல் அடிக்கும் முன்
நகர்ந்து செல்லும் வேதனை

யாரும் உடைக்கும் முன்
அமைதியாய் உள்ளுக்குள்
உடைந்த படி நகரும் துணிவு

யாரும் கேட்கும் முன்
சட்டென முகபாவனையை
சீராக்கும் திறன்

யாருடையதேனும்
என்னாயிற்று எனும் வினவலில்
உள்ளுக்குள் ஆயிரம் அவஸ்தையை உள்ளடக்கிக் கொண்டு
ஒன்றுமில்லையெனச் சொல்லும்
உடைவு

இப்படி எத்தனை சங்கடங்களை
வேதனைகளை
சிரமங்களை
மறுப்புகளை
பிறரிடம் காட்டாது
உள்ளுக்குள் புதைத்து
உணர்வுகளைச் சிதைத்து
உண்மைகளை மறைத்து
உள்ளத்தை கட்டுப்படுத்தி
நகர்ந்தாயிற்று

இருந்தும் ஏன் இவற்றை
பிறரிடம் சொல்லத் துணிவதில்லையெனின்
தீர்த்து வைப்பார்களெனும் நம்பிக்கையில் மனிதர்களிடம் சொல்வதை விட
சில மணி நேர அழுகை
சுகமானது இதமானது
மொத்தக் கவலைகளையும்
சிரமங்களையும்
அடியோடு கழுவிச் செல்ல!

ஷப்ரா இல்முத்தீன் 🖤

1 - 2

ARR clickz
Posted 2 months ago

அன்பார்ந்த ARR CLICKZ நண்பர்களுக்கு
இனிய காலை வணக்கம்,


எது சரி எது தவறு, மனிதனால் நிர்ணயிக்க முடியாத ஒன்று, வாழ்க்கையில், வியாபாரத்தில், திருமணம், சொத்து வாங்குதல், சம்பந்தம் வைத்தல், காதல், கடன் வாங்குதல், உடல்நலம், ஆரோக்கியம், இவை அனைத்தும் ஒருவர்க்கு நடந்தது போல் மற்றொருவர்க்கு நடப்பதில்லை, சரி நடைமுறை யதார்த்தத்தை பின்பற்றுவோர் என எண்ணினால் அதுவும் சில நேரங்களில் சஞ்சலங்கள், எது எப்படி இருந்தாலும் இறைவன் நமக்கு இட்டது நடக்கும். நாம் நமது மனதுக்கு நம்மை ஆதரிப்பவர்கள் ஊக்குவிக்கும் மக்கள் என அவர்களுக்கு பொறுநதுமாறு சிந்தித்து முடிவுகளை எடுத்து வாழுவோம், ஏனெனில் சந்தோஷம் துக்கம் பகிர சிலர் நமக்கு தேவை வாழ்க்கை சுவாரசியப்பட.


மேலுள்ள பதிவுக்கு விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.


நன்றி🙏💕



ARR CLICKZ

1 - 0

ARR clickz
Posted 2 months ago

அன்பிறகினிய ARR CLICKZ நண்ரகளே,



நாம் எவ்வளவு தான் நடைமுறை செயல்பாடுகள், சாத்தியக்கூறுகள், மற்றும் இது சரி இது தவறு இது நாகரிகம் நியாயம் நேர்மை தன்னம்பிக்கை என பல தீர்மானங்களை நேர் திருத்தி வாழ்ந்தாலும், நம்முடன் பயணிப்பவர்கள் அவ்வாறு இருப்பார்கள் என நாம் எதிர்பார்க் கூடாது.

ஏமாற்றமே மிஞ்சும்.


ARR CLICKZ.

1 - 2

ARR clickz
Posted 2 months ago

இனிய காலை வணக்கம் ARR CLICKZ நண்பர்களே,


Get away from negativity people


1.யோசித்து ஆரம்பித்தவுடன் சிலர் ஏன் இதெல்லாம் செய்றீஙக உன்னால் எப்படி முடியும் என்று கூறுவார்கள்.


2.ரொம்ப முக்கியமானது இந்த மாதிரி ஆன எதிர்மறை எண்ணங்கள் உள்ள மனிதர்களை உடன் வைத்து கொண்டால் நேர்மறையான நிகழ்வுகள் நடப்பது ரொம்ப கடினம், ஆகையால் நேர்மறையான எண்ணங்கள் உள்ளவர்கள் நோக்கி நகருங்கள்.


3.உங்கள் எண்ணங்களுக்கு நேர்மறையான மனிதர்களோடு உங்களுடைய நிகழ்கால செயல்பாடுகளை வைத்து கொள்ளுங்கள்.


ARR CLICKZ

2 - 4

ARR clickz
Posted 2 months ago

1 - 0

ARR clickz
Posted 2 months ago

Begin with can do

முடியும் என்ற எண்ணத்தோடு எந்த ஒரு செயலையும் ஆரம்பிக்க வேண்டும். ஒரு செயலை செய்யரதுக்கு முன்னாடி நம்ம மனசுக்குள் நிறைய எண்ணங்கள் ஓடும், இது நம்மால் முடியுமா, நம்முடைய திறமையால இத செய்ய முடியுமா? நம்மை விட திறமையான வங்க நிறைய பேர் இருக்காங்க அவங்களுக்கு நடுவுல நம்மால எப்படி சாதிக்க முடியும், போன்ற எண்ணங்களுக்கு நீங்கள் சொல்ல வேண்டியது அதைப் பற்றி கவலை இல்லை, என்னால இது முடியும் என நினைத்து ஆரம்பிக்கிறேன், என்னுடைய வேலை பற்றி மட்டுமே யோசிக்கிறேன், இத என்னால கண்டிப்பாக முடிக்க முடியும் என நினைத்து ஆரம்பியுங்கள்.


வாழ்த்துக்கள்.


ARR CLICKZ

2 - 0