.நான் பாரம்பரியமிக்க ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவன். S.எட்வர்ட் எபிநேசராக இருந்த நான் இஸ்லாமை ஏற்றுக் கொண்டு S. தாரிக் இஸ்மாயிலாக மாறினேன் காரணம், நான் பைபிளை ஆய்வு செய்த போது..பல உண்மைகள் எனக்கு தெரிய வந்தது. அதில் இயேசு ஒரு தூதர் என்றும், அவர் பவுல் என்பவரால் கடவுளாக்கப்பட்டிருக்கிறார் என்ற உண்மையும் தெரியவந்தது. மேலும் இயேசுவின் அனைத்து போதனைகளும் இஸ்லாமை குறித்தே இருக்கிறதை கண்டேன்.இயேசு இஸ்லாமை நோக்கியே மக்களுக்கு அழைப்பு கொடுத்திருக்கிறார் என்பதை பைபிள் தெளிவாக விளக்குகிறது.மேலும் பைபிளில் நான் அறிந்த செய்திகள் என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.அதில் இஸ்லாமைப் பற்றியும் இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களைப் பற்றியும் உள்ள செய்திகள் என்னை வியப்புக்குள்ளாக்கியது.நான் அறிந்த உண்மைகளை இந்த உலகமும் அறிய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த யூடியூப் சேனல் வழியாக தெரியப்படுத்துகிறேன்.கடவுள் இருக்கிறாரா என்று சந்தேகிப்பவர்கள் கூட இந்த வீடியோக்களை பார்த்தால் கடவுள் நம்பிக்கை கொள்வார்கள். விசுவாசத்தில் (ஈமானில்) பெலவீனமானவர்கள் ஈமானில் பெலனடைவார்கள்.எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.