ஆச்சார்ய பிரசாந்த் அவர்களைப் பற்றி ஆன்மீக நோக்கில் சொல்வதென்றால் அவர் ஒரு வேதாந்த மறைஞானி ஆவார். அவர் பகவத்கீதை, உபநிடதங்கள் மற்றும் மெய்ஞ்ஞானிகளின் போதனைகளுக்கு புத்துயிர் அளித்திருக்கிறார். அவரின் சொல்வன்மை விண்ணை முட்டுவதாக இருக்கிறது.
மேலும், சாமானிய மனிதனின் பார்வையில் ஆச்சார்ய பிரசாந்த் அவர்கள் சுற்றுப்புற சூழல் மற்றும் உயிரினங்களின் பாதுகாவலர். இளைஞர்களின் வாழ்வில் ஒளியும் எழுச்சியும் ஊட்டுபவர். மேலும், அவர் உயிர்கள் ஒவ்வொன்றின் புற விடுதலைக்காகவும், ஆன்ம விடுதலைக்காகவும் அயராது போராடும் ஒரு போராளி .
ஆகாயம் பூமியின் சங்கமம்.