in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
11-12-2024 விநாயகர் வழிபாடு புதன் கிழமை:
விநாயகர் வழிபாடு விக்னங்களையும் தடைகளை தவிடுபொடியாக்கும். விநாயகரை வீட்டில் வழிபாடு செய்தால், மிகப்பெரிய தடைகளும், வெற்றி படிக்கல்லாய் மாறி சுபம் உண்டாகும்.
வாழ்வில் துக்கத்தையும், துயரத்தையும் மட்டுமே பார்த்தேன் என்று விரக்தியுடன் இருப்பவர்கள் கூட, விநாயகரை வீட்டில் வைத்து தொடர்ந்து வழிபாடு செய்தால் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்துவார் செல்வ கணபதி.
வெற்றிகளைக் குவிக்கும் விநாயகரின் துணையுடன் வாழ்வை வெற்றிக் கொள்ளலாம். வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்து பூஜை செய்வது விசேஷம். எருக்கஞ்செடி விநாயகருக்கு உரிய செடி, எருக்கன் மாலை விநாயகருக்கு உகந்தது. வெள்ளருக்கு செடியினால் உருவாக்கப்பட்ட விநாயகருக்கு, துளசி தீர்த்தம், சந்தனம்,பன்னீர் என அபிஷேகம் செய்த பிறகு பூஜை அறையில் வைத்து வழிபடத் தொடங்கலாம்.
விநாயகரை அப்படியே வைத்து வழிபாடு செய்வதைவிட, பித்தளைத் தாம்பாளத்தில் பச்சரிசி அல்லது நெல்லை விரவிவிட்டு, அதன்மேல் விநாயகரை வைத்து வழிபடலாம். விநாயகருக்கு பிரசாதத்தை நிவேதனம் செய்து தீபம் ஏற்றி வேண்டுதல்களை சொல்லி பூஜித்தால் போதும். வெள்ளெருக்கு விநாயகரை நோக்கியவாறு அகல் தீபத்தின் சுடர் எரியுமாறு விளக்கேற்றவேண்டும். இந்த எளிய வழிமுறையை பின்பற்றி விரதம் இருந்து விநாயகரை துதித்தால்,
தும்பிக்கை முகத்தோன், வினைகளை அறுத்து, வாழ்வில் வளம் சேர்ப்பார்.
விநாயகர் மூல மந்திரம் :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே வரவரத
ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா
மிகவும் சக்தி வாய்ந்த இந்த விநாயகர் மூல மந்திரத்தை வாரத்தின் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் துதித்து வழிபடலாம். மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று மாலை 5 லிருந்து 6 மணிக்குள்ளாக, வீட்டில் இருக்கும் கணபதி படத்திற்கு பூக்களை சாற்றி, தூபங்கள் கொளுத்தி, கொழுக்கட்டை அல்லது லட்டு இனிப்புகளை நிவேதனம் வைத்து, விநாயகருக்கு நேராக அமர்ந்து கொண்டு இம்மந்திரத்தை 108 அல்லது 1008 முறை கூறி வழிபட வேண்டும். இதன் பலனாக உங்கள் வாழ்வில் நீங்கள் விரும்பிய ஒவ்வொன்றும் உங்களுக்கு கிடைக்க தொடங்கும். ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையேயான ஒற்றுமை ஓங்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்றிணைவர். கண் திருஷ்டி நீங்கும். நோய்கள் அகலும். செல்வம் அதிகளவில் சேர துவங்கும்.
8 - 0
10-12-2024 முருகன் வழிபாடு :
தமிழ் கடவுளான முருகப் பெருமான் பலருக்கும் இஷ்ட தெய்வமாக விளங்கக் கூடியவர். "சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை...சுப்ரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை" என்பார்கள். அப்படி என்ன பிரச்சனை என்றாலும், என்ன வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்றாலும் கந்தனின் காலை பிடித்தால், வந்த வினையும், வருகின்ற வினையும் ஓடி விடும்.
முருகனுக்குரிய மந்திரங்களை தொடர்ந்து உச்சரித்து வந்தாலே வேண்டிய வரங்கள் மட்டுமல்ல முருகப் பெருமானையே நேரில் காணும் பெரும் பேறு கிடைக்கும். அதோடு முக்தியும் கிடைக்கும் என ஆன்மிக ஆன்றோர்கள் வாக்காக உள்ளது.
கந்தகுரு கவச்சத்தில் முருகனின் மூல மந்திரம் உள்ளது. இதை தொடர்ந்து உச்சரித்து வந்தால் அத்தனை விதமான துன்பங்களில் இருந்தும் விடுபடலாம். இந்த மந்திரத்தை எத்தனை முறை உச்சரிக்கிறோமோ அதற்கு ஏற்ற பலன் கிடைக்கும். ஒரு லட்சம் முறை உச்சரித்தால் நினைத்த காரியங்கள் அப்படியே நடக்கும். யம பயம் நீங்கும். கோடி முறை உச்சரித்தால் முக்தி கிடைக்கும். முருகப் பெருமானே நமக்கு நேரில் ஜோதி வடிவமாக நமக்கு காட்சி தருவார் என்பது ஆன்றோர்கள் வாக்கு.
முருகன் மூல மந்திரம் :
"ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
க்லெளம் ஸெளம் நமஹ"
இந்த மந்திரத்தை கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கு அமர்ந்த உச்சரிக்க வேண்டும். பிரம்ம முகூர்த்த நேரத்தில் உச்சரிப்பது பல மடங்கு சிறப்பான பலனை தரும். அப்படி முடியாதவர்கள் மாலை நேரத்தில் விளக்கேற்றி வைத்து இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். கிருத்திகை, சஷ்டி போன்ற நாட்களில் முருகனுக்கு விரதம் இருந்து இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்தால், வேண்டிய வரங்கள் கிடைக்கும்.
25 - 0
சிவபெருமானை வழிபடுவதற்கு திங்கட்கிழமை மிக உகந்த தினமாகும். சந்திரனுக்கு சோமன் என்ற பெயரும் உள்ளதால் திங்கட்கிழமையை வடமொழியில் சோமவாரம் என்று அழைக்கப்பது உண்டு. சோமவார விரதத்தை கடைபிடித்து தான், சிவ பெருமானின் தலையில் நிரந்தரமாக இருக்கும் பாக்கியத்தை பெற்றார் சந்திர பகவான். சோமவார விரதத்தை சந்திர பகவானே முதன் முதலில் அனுஷ்டித்ததாகவும், அதனாலேயே இதற்கு சோமவார விரதம் என பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
16 திங்கட்கிழமைகள் சிவனுக்கு விரதம் இருந்து அவரை வழிபடுவது சோமவார விரதம் எனப்படுகிறது. சிவபெருமானுக்குரிய விரதங்களில் சோமவார விரதம் மிக சிறப்புடையது. இவ்விரதத்தை பெரும்பாலானோர் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் மட்டுமே கடைபிடிக்கின்றனர். ஆனால் இவ்விரதத்தை எல்லா திங்கட்கிழமைகளிலும் கடைபிடிக்கலாம். திங்கட்கிழமையில் சிவபெருமானின் ஆயிரம் திருநாமங்களை சொல்லி, வில்க இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட்டால் அனைத்து விதமான நலன்களும் கிடைக்கும். வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சோமவார விரதத்தை கடைபிடிக்க நினைப்பவர்கள், திங்கட்கிழமைதோறும் அதிகாலையில் எழுந்து, வீட்டின் பூஜையறையில் விளக்கேற்றி, சிவன் படத்திற்கு பூக்கள் சூட்டி, உங்கள் நெற்றியில் திருநீறு பூசிக்கொள்ள வேண்டும்.
* சர்க்கரை பொங்கல், பாயசம் போன்ற உணவுகளை சிவனுக்கு நைவேத்தியமாக படைத்து, சிவ மந்திரங்கள், சிவ புராணம் போன்றவற்றை படித்தல் வேண்டும்.
* இந்த விரதம் மேற்கொள்பவர்கள் மூன்று வேளை ஏதும் உண்ணாமல் இருப்பது சிறப்பு என்றாலும், வேலை, தொழில் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் மூன்று வேளையும் உப்பு சேர்க்காத உணவை சாப்பிடலாம் அல்லது பால், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
32 - 0
08-12-2024 சூரிய பகவான் வழிபாடு:-
ஒரு மனிதனுடைய ஜாதகத்தில் சூரியன் சுப பலன்களை கொடுத்தால் போதும், அவர்கள் எத்தகையவரையும் தனக்கு கீழ் கொண்டு வந்து விடலாம். சூரியன் ஆளுமை திறனை வளர்க்கக் கூடிய அற்புத ஆற்றலை கொடுக்க வல்லது. அதிகாரத்தையும், தலைமைப் பண்பையும் விரும்புபவர்கள் சூரிய பகவானை நிச்சயம் வழிபட வேண்டும். எதிலும் உங்கள் கை ஓங்கி இருக்க, சூரிய வழிபாடு செய்வது சிறப்பு.
நம் அனுதின வாழ்க்கையில் பல எதிரிகளையும், துரோகிகளையும் கடந்து கொண்டு தான் இருக்கிறோம். நம்மை சுற்றி தெரிந்தும், தெரியாமலும் எவ்வளவோ எதிரிகளையும், பகைவர்களையும் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறோம். நம் கண்முன்னே இருக்கும் பகைவர்களும், நமக்குத் தெரியாமல் இருக்கும் துரோகிகளையும் சமாளிக்க தலைமை பண்பு அவசியம் தேவை. அடுத்தவர்களை அடக்கி ஆளும் அதிகாரமும், துணிச்சலும் நம்மிடம் வருவதற்கு சூரிய பகவான் அருள் தேவை.
பெயர், புகழ், செல்வாக்கு அதிகரிக்க தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வர வேண்டும். சூரிய நமஸ்காரம் செய்ய முடியாதவர்கள் காலையில் எழுந்ததும் குளித்து முடித்த பின்பு சூரியனுக்கு தண்ணீரை சமர்ப்பணம் செய்ய வேண்டும். நீங்கள் எழுந்ததும் முதலில் தண்ணீர் கூட பருகாமல் குளித்து முடித்து விட்டு வர வேண்டும். பின்னர் முதல் தண்ணீரை சூரியனுக்கு கிழக்கு நோக்கி நின்று சூரியனை பார்த்தபடி கையில் பித்தளை அல்லது செம்பு பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை கீழ்வரும் இந்த மந்திரத்தை உச்சரித்தபடி பூமியில் விட வேண்டும்.
சூரிய காயத்ரி மந்திரம்:
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே!!
பாச ஹஸ்தாய தீமஹி!!
தந்நோ சூரிய: ப்ரசோதயாத்!!!
இப்படி செய்வதால் தண்ணீரை சூரியனுக்கு சமர்ப்பணம் செய்வதாக அர்த்தம். அதன் பிறகு நீங்கள் தண்ணீர் பருகி இந்த பிரார்த்தனையை நிறைவு செய்து கொள்ளலாம். சக்தி வாய்ந்த இந்த எளிய பரிகாரத்தை அனுதினமும் செய்து வருபவர்களுக்கு நிச்சயம் எல்லா புகழும் வந்து சேரும். தினமும் முடியாதவர்கள் சூரியனுக்கு உகந்த ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமாவது செய்யலாம்.
32 - 0
07-12-2024 சனிக்கிழமை பெருமாள் வழிபாடு:-
சனிக்கிழமை என்பது பெருமாளுக்கு உகந்த நாள் என்றும் பெருமாளை வணங்கி வழிபடுவதற்கு உரிய நாள் என்றும் போற்றப்படுகிறது. அதனால்தான் மற்ற நாட்களை விட சனிக்கிழமைகளில், திருப்பதி முதலான பெருமாள் குடிகொண்டிருக்கும் க்ஷேத்திரங்களில், வழக்கத்தை விட மக்கள் குவிகிறார்கள்.
சனிக்கிழமைகளில், அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி மாலை சார்த்தி வேண்டிக்கொள்வதும் துளசி தீர்த்தம் பருகுவதும் ரொம்பவே மகத்துவம் வாய்ந்தது. அதேபோல், குடும்பத்தில் ஏதேனும் வேண்டுதல் செய்பவர்கள், அதாவது குடும்பத்தில் நல்லது நடக்கவேண்டும் என்று எந்த விஷயத்துக்காகவேனும் பிரார்த்தனை செய்து, மஞ்சள் துணியில் ஒருரூபாய் அல்லது பதினொரு ரூபாய் முடிந்து வைப்பார்கள். பெருமாளை மனதில் நினைத்து, சனிக்கிழமைகளில் வேண்டிக்கொண்டு, மஞ்சள் துணியில் காசு முடிந்து வைத்து பிரார்த்திக்கிற பக்தர்களும் இருக்கிறார்கள்.
அதேபோல ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வரும். அதாவது வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி என்று வரும். இந்த இரண்டு ஏகாதசிகளுமே, பெருமாள் வழிபாட்டுக்கு உரிய திதிகளாகப் போற்றப்படுகின்றன. ஏகாதசியில் விரதம் தொடங்கி மறுநாளான துவாதசியில் விரதத்தை பூர்த்தி செய்கிற பெருமாள் பக்தர்களும் இருக்கிறார்கள்.
இன்று காலையில் பெருமாளுக்கு விளக்கேற்றி வேண்டிக்கொண்டு, காலை அல்லது மாலை வேளையில், அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, துளசி மாலையும் தாயாருக்கு வெண்மை நிற மலர்களும் சார்த்தி கண்ணாரத் தரிசித்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டியதையெல்லாம் தந்தருளுவார் வேங்கடவன். மங்கல காரியங்களில் இருந்த தடைகளையெல்லாம் நீக்கித் தந்தருளுவார் மகாலட்சுமி தாயார்!
முடிந்தால் இந்த நன்னாளில், பெருமாளுக்கு புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, பிரார்த்திப்பதும் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து பூஜிப்பதும் இழந்த செல்வங்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்!
நாராயணாய வித்மஹே வாஸு தேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்
இந்த மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. சனிக்கிழமைகளில் மட்டும் மனசுத்தத்துடன் மந்திரத்தை சொன்னால் பெருமாளின் பூரண அருள் கிடை
27 - 0
06-12-2023 வெள்ளிக்கிழமை துர்கை வழிபாடு :
உலக அனைத்துக்கும் ஆதார சக்தியாக திகழ்பவள் ஆதிபராசக்தி. ஆதிபராசக்தியிடமிருந்துதான் மும்மூர்த்திகளும் தோன்றினர். அன்னை ஆதிபராசக்தி உலக மக்களுக்கு அருள்புரிவதற்காகவே பல வடிவங்களும், பல பெயர்கள் கொண்டு கோயில் கொண்டிருக்கிறார். புண்ணிய பூமியான நம் நாட்டில் எண்ணற்ற அம்மன் திருத்தலங்கள் அமைந்திருக்கின்றன
தேவியின் பல அவதாரங்களில், உக்கிரமும் கருணையும் கொண்டதாகத் திகழ்வது துர்கை ரூபம் என்கிறது புராணம். அதனால்தான் சிவாலயங்களிலும் பெருமாள் கோயில்களிலும் துர்கைக்கு சந்நிதிகள் அமைக்கப்பட்டு, அங்கே சாந்நித்தியமும் சக்தியும் உருவாக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. சிவாலயத்தில் உள்ள துர்கைக்கு சிவ துர்கை என்றும் பெருமாள் கோயிலில் உள்ள துர்கைக்கு விஷ்ணு துர்கை என்றும் பெயர் அமைத்து வழிபடப்படுகிறது.
துர்கை என்றாலே துக்கத்தையெல்லாம் அழிப்பவள் என்று அர்த்தம். நம்முடைய வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டங்களை தீர்க்கக்கூடியவள் துர்காதேவி என்று சக்தி வழிபாடு செய்பவர்கள் தெரிவிக்கின்ரனர்.
போட்டி, பொறாமை, ஏமாற்றம், சிக்கல் இவை அனைத்தும் சூழ்ந்தது தான் இந்த உலகம். ராகுவின் பிடியில் இருந்து தப்பிக்க துர்கை அம்மன் வழிபாடு மிகச் சிறந்த வழிபாடு என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இதனால்தான் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்ற வேண்டும் என்ற வழிபாட்டையே கொண்டு வந்தார்கள் நமது முன்னோர்கள்.
செவ்வாயன்றும், வெள்ளியன்றும் பெண்கள் துர்கா தேவியை வழிபடுவது வழக்கமாக உள்ளது. அதிலும் செவ்வாய்க்கிழமை ராகுகால துர்க்கை வழிபாடு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. ராகுவிற்கும் துர்க்கை வழிபாட்டிற்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது. ராகு கிரகத்தின் அதிதேவதை துர்க்கை, அதனால்தான் ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு நடக்கிறது.
துர்கா தேவி சர்வ பாத முக்தி மந்திரம்
" சர்வ பாத வினிர்முக்தோ தான் தான்யா சுதந்தவிதஹ்
மனுஷியோ மத்ப்ரஸதீன் பவிஷ்யதி நா சன்ஷாய்ஹ் "
நம் வாழ்க்கையில் நல்லது நடக்க பொதுவாக தாமதமாகும். இது துரதிர்ஷ்டம் எனப்படும். இது போன்ற சூழ்நிலைகளில் துர்கா தேவி சர்வ பாத முக்தி மந்திரம் உங்களை காப்பாற்றும். இது துன்பங்களில் இருந்து உங்களை பாதுகாக்கும். குறிப்பாக குழந்தை வரம் இல்லாதவர்கள் இந்த மந்திரத்தை கூறுவது அவர்களுக்கு விரைவில் நல்ல பலனை தரும்.
45 - 0
குருவருள் இருந்தால்தான் திருவருள் கிடைக்கும் என்பார்கள். குருவை எல்லாத் தருணங்களிலும் வழிபடவேண்டும் என்கிறது சாஸ்திரம். நாம் குருநாதராக எவரை வரித்துக் கொண்டிருக்கிறோமோ அவரை, அனுதினமும் வழிபட்டு நம்முடைய பிரார்த்தனைகளைச் சொல்லவேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
தென்னாடுடைய சிவபெருமானே தட்சிணாமூர்த்தி அம்சமாக இருந்து அருள்பாலிக்கிறார். கல்லால மரத்தடியில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்து அருளுகிறார் என்கிறது புராணம்.
‘குரு பிரம்மா குரு விஷ்ணு’ என்று படைத்தவனையே முதல் குருவாகக் கொண்டு வணங்கச் சொல்கிறது இந்த ஸ்லோகம்.
மனித உலகில், கண்ணுக்கு முன்னே வாழ்ந்த குருமார்களை மகான்கள் என்று போற்றுகிறோம். வணங்குகிறோம். சதாசர்வ காலமும் அவர்களிடம் பிரார்த்தனை செய்கிறோம். அப்படி கண்கண்ட தெய்வமாக வணங்கப்படுகிறவர்தான் ஷீர்டி சாயிபாபா.
ஷீர்டி சாயிபாபா, மிக உன்னதமான குருநாதர் என்று கொண்டாடுகிறார்கள் பக்தர்கள். எவருடைய வீட்டில் சாயிபாபாவின் திருநாமம் சொல்லப்படுகிறதோ அந்த வீட்டுக்கு பாபாவின் அருள் கிடைக்கும் என்பது சாயி பக்தர்களின் நம்பிக்கை.
குருவுக்கு உகந்த நாள் என்று வியாழக்கிழமையைச் சொல்வார்கள். ஆனாலும் தினமும் குருவை வந்தனம் செய்வது மகோன்னதமானது என்கிறார்கள் சாயி பக்தர்கள். தினமும் சாயிபாபாவை ஒரு பத்துநிமிடம் வணங்கிவிட்டு, அன்றாடப் பணிகளைச் செய்யும் போது, அவர்களின் எல்லா காரியங்களிலும் பாபா உடனிருந்து நிறைவேற்றித் தந்தருள்கிறார் என்பது ஐதீகம்.
சாயி மூல மந்திரம் :-
ஓம் ஸாயி ஸாயி ஜெயஜெய ஸாயி.
இந்த ஒற்றை வரி கொண்ட மூல மந்திரத்தை, கண்கள் மூடி ஜபியுங்கள். தினமும் 108 முறை சொல்லுங்கள். முடிந்ததும் தீபாராதனை காட்டி வழிபடுங்கள். தினமும் சர்க்கரைப் பொங்கல், பாயசம், கேசரி என்று நைவேத்தியம் செய்ய வேண்டும் என்கிற அவசியமெல்லாமில்லை.
20 - 0
04-12-2024 புதன்கிழமை விநாயகர் வழிபாடு :-
விநாயகப் பெருமான் சிறந்த அதிர்ஷ்டங்களையும் இறைநிலையையும் வழங்கக்கூடியவர். இவர் பெரும் அறிவு, செல்வம், உடல் நலம், மகிழ்ச்சி, குழந்தை வரம் ஆகியவற்றைத் தரக்கூடியவர்.
விநாயகப் பெருமான் பிரச்னைகளையும் உங்களுக்கு இருக்கின்ற காரியத் தடைகளையும் அகற்றுவார். ஒருவரிடம் இருக்கின்ற கெட்ட குணங்களை நீக்கி, மன அமைதியையும் நல்ல குணநலன்களையும் மனதுக்குள் தியானம் மற்றும் ஆன்மீகத் தன்மையையும் அதிகப்படுத்துவார் விநாயகர்.
இந்து சமயத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருமே எந்தவொரு காரியத்தைத் தொடங்குவதற்கு முன்பாகவும் விநாயகப் பெருமானை வழிபட்டு ஆரம்பிப்பதையே வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். ஏனெனில் செய்யும் வேலையில் வெற்றியில் முடிய வேண்டும் என்பது தான் அந்த காரணம். எந்த காரியமாக இருந்தாலும் விநாயகரை வழிபட்டு தொடங்கினால், அந்த காரியத்தின் மீது என்ன மாதிரியான தடைகள் வந்தாலும் அதை நீக்கி, வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்.
விநாயகர் ஸ்லோகம்:
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
எந்த ஒரு சுப காரியத்தை தொடங்குவதற்கு முன் விநாயகர் வழிபாடு செய்வது அவசியம். அதே போல எந்த ஒரு விஷயத்தை தொடங்குவதற்கு முன் ‘சுக்லாம்பரதரம்’ என்ற மந்திரத்தை உச்சரிப்பதால், நம் செயலுக்கு எல்லாமுமாக அந்த விநாயகரே இருப்பார் என்பது அதன் பொருளாகும்.
45 - 0
02-12-2024 திங்கட்கிழமை என்பது, சிவனுக்கு மிகவும் உகந்த தினமாகும். சிவனை நினைத்து, அவருக்காக விரதமிருந்து வழிபட்டு பால், அரிசி, சர்க்கரையையும், பழங்களையும் நைவேத்தியமாக சமர்ப்பணம் செய்திடலாம்.
சோமவாரம் என்பது திங்கள் கிழமையை குறிக்கிறது. 16 திங்கள் கிழமைகள் சிவபார்வதியை நினைந்து விரதமிருந்து பிரார்த்தனை செய்தால் எவ்வளவு மன கஷ்டங்களும் உங்களிடம் இருந்து சுலபமாக நீங்கி விடும்.
சாபத்தினால் ஒளியிழந்த சோமனான சந்திரன் சோமாவார விரதம் இருந்தபோது எம்பெருமான் காட்சியளித்ததோடு தேய்ந்து கீழே விழும் சந்திரனை தன்னுடைய இருகாரங்களாலும் காப்பாற்றி பிறைச்சந்திரனாக தலையில் சூடிக்கொண்டார் எம்பெருமான். பிறகு, சந்திரன் வளரும் நிலையையும் பெற்றான். அதுவே, தற்போது பௌர்ணமி, அமாவாசை என்றழைக்கப்டுகிறது.
சோமவார விரதத்தை மேற்கொள்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் எந்த திங்கட் கிழமையிலும் துவங்கலாம். திங்கட்கிழமை அன்று அதிகாலையில் நீராடி மாலை வரை விரதம் இருந்து சிவபார்வதி பூஜைகள் மேற்கொள்ள வேண்டும். இதனால் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் சூழ்நிலைகளை இந்த விரதம் மேற்கொள்பவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.
வழிபாடு செய்யும் முறை :-
திங்கட்கிழமையில் சிவபெருமான் பார்வதி தேவியுடன் இணைந்த படத்திற்கு வில்வ அர்ச்சனை செய்து லிங்காஷ்டகம் படிக்கலாம். அல்லது சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்கு உரிய மந்திரங்களை ஜபிக்கலாம். முழுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள் நீர் ஆகாரத்தை உணவாக எடுத்துக் கொள்ளலாம். பழச்சாறுகள், பால், பழம் போன்றவற்றை உட்கொண்டு விரதம் மேற்கொள்ளலாம்.
30 - 0
02-12-2024 செவ்வாய் கிழமை முருகப்பெருமான் வழிபாடு !!
செவ்வாய் கிழமை விரதம் இருந்து முருகனை வழிபாடு செய்ய உகந்த நாள் என்று முன்னோர்கள் சொல்லுவார்கள். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம். வருவாய் அதிகரிக்க வேண்டுமானால் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் சொல்வார்கள்.
பொருளாதார நிறைவை வழங்குவது அங்காரகன்தான். அந்த அங்காரகனுக்குரிய தெய்வமாக விளங்குவது முருகப்பெருமான். முருகப்பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்கிழமையில் முருகனை வணங்கினால் கவலைகள் அகலும்.
கார்த்திகை நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அமைந்த செவ்வாய்க்கிழமை விரதத்திற்கு பலன் அதிகம் உண்டு.
வீட்டில் வேல் வழிபாடும் செய்யலாம். வீட்டு பூஜையறையின் நடுவில் வேல் வைத்து இருபுறமும் இரு விளக்குகள் வைத்து ஒரு விளக்கில் மூன்று திரிகளும், மற்றொரு விளக்கில் மூன்று திரிகளும் ஆக ஆறு தீபமிட்டு ஆறுமுக வழி செய்து வந்தால், சீரும் சிறப்பும் வந்து சேரும்.
இந்த விரதத்தை மேற்கொள்ளும் போது, முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் உள்ள படம் வழிபட வேண்டும். முன்னதாக விநாயகர் படத்தையும் வைத்து வழிபட வேண்டும். அன்னதான பிரியர் முருகன் என்பதால், செவ்வாய்கிழமை அன்னதானம் வழங்கினால் முருகனின் முழு அருளுக்கு பாத்திரமாகலாம்.
செவ்வாய்கிழமை அன்று ஒரு பொழுது விரதம் இருந்து வந்தால் ஒன்பது வாரத்தில் உங்களுக்கு நல்லது நடக்கும். வியாபாரம் செய்பவர்கள் கண்டிப்பாக செவ்வாய் வழிபாட்டை செய்து வந்தால் வியாபாரம் பெரிய அளவில் விருத்தி செய்யலாம். நல்ல தைரியத்தை கொடுத்து நாம் எடுத்து வைக்கும் எல்லா வியாபாரமும் வெற்றியை தரும்.
ஸ்ரீ முருகன் காயத்ரி மந்திரம்
ஓம் தத் புருசாய வித்மஹே
மகேஷ்வர புத்ராய தீமஹி
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.
இந்த மந்திரத்தை தினமும் துதிப்பதன் மூலம் முருகனின் அருள் சிறப்பாகக் கிடைப்பதும் மட்டுமில்லாமல் ஸ்ரீ குருபகவானின் அருளும் கிடைக்கும்.
35 - 0
Vtv is a infotainment, devotional, Music, daily horoscope, astrology channel we are creating new content. very soon we come with useful content to all genre of audience in telugu.