Channel Avatar

Astro Ravichandran @UCHWRJDr7IR_6QkQCTsxJ8Mw@youtube.com

2.6K subscribers - no pronouns :c

Teacher & Astro Researcher M.Sc,MA ,BEd . "ASTROLOGY RELAT


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Astro Ravichandran
Posted 1 week ago

கோள்களின் கோளாட்டம்- (2)

செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் துணை!

கோள்கள் மனித வாழ்வை எம் முறையில் வழிநடத்தி செல்கிறது என்பதை தொடர் கட்டுரையாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். சென்ற பதிவில் சூரியனைப் பற்றி அதிகமாக தெரிந்து கொண்டோம் .இந்த பதிவில் மற்றொரு ஒளிக்கிரகமான சந்திர பகவான் பற்றி ஒரு சில அடிப்படை செய்திகளை மற்றும் ஆழமான செய்திகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.

கிரகங்களில் தாயாக விளங்குவது மற்றும் தாய்க்கு காரக கிரகமாக விளங்குவது சந்திர பகவான் ஆவார். சந்திர பகவானை மனநிலை காரகன் என்று அழைக்கப்படுகிறது.

சந்திர பகவானுடன் சனி அல்லது ராகு நெருக்கமாக இணையும்போது அல்லது சந்திரனை சனி பார்க்கப்படும் பொழுது அதிலும் குறிப்பாக தேய்பிறை சந்திரன் ஆக இருந்து சனி பகவான் தொடர்பு கொள்ளும் பொழுது மனதளவில் ஒரு உறுதியற்ற தன்மை பயம் கலந்த உணர்வு எப்பொழுது ஜாதகரிடம் இருந்து கொண்டிருக்கும்.

ஜாதக கட்டத்தில் சந்திரன் இருக்கும் இடத்தை ஜென்ம ராசி என்று அழைக்கிறோம்
சந்திரனை மையமாகக் கொண்டே கோச்சார பலன்கள் , நாள் ,வார ,மாத மற்றும் ஆண்டு பலன்கள் அறியப்படுகிறது. சனி ,குரு ,ராகு மற்றும் கேது பெயர்ச்சி போன்ற பெயர்ச்சி பலன்கள் ராசியை மையமாகக் கொண்டே கணக்கிடப்படுகிறது.

சந்திரன் இருக்கும் இடத்திற்கு 12-ஆம் இடத்தில் சனி வரக்கூடிய காலங்களில் ஒருவருக்கு ஏழரைச் சனி ஆரம்பிக்கிறது.. இது முதல் சுற்று #மங்குசனி என்றும் இரண்டாவது சுற்று ஏழரைச் சனியை #பொங்குசனி என்றும் மற்றும் மூன்றாவது சுற்று ஏழரைச் சனியை #மரணச்சனி என்று அழைக்கப்படுகிறது.

சந்திரன் இருக்கும் இடத்திற்கு பன்னிரெண்டாம் இடத்தில் சனி பகவான் இருக்கக்கூடிய இரண்டரை ஆண்டுகளும் #விரயச்சனி என்று அழைக்கப்படுகிறது ராசியில் சனி இருக்க கூடிய இரண்டரை ஆண்டுகளும் #ஜென்மசனி என்று அழைக்கப்படுகிறது . ராஜிக்கு இரண்டாம் இடத்தில் சனி பகவான் இருக்கக்கூடிய 2 1/2 ஆண்டுகளும் #பாதச்சனி என்று அழைக்கப்படுகிறது

சந்திர பகவான் உடன் குரு சேரும் பொழுது #குருசந்திரயோகம் ,
சந்திர பகவான் உடன் செவ்வாய் சேர்க்கை பெறும் போது #சசிமங்களயோகம் ,
சந்திர பகவானுக்கு ஆறு,ஏழு , எட்டாம் இடத்தில் குரு பகவான் இடம்பெறுவது #சகடையோகம் ,
சந்திர பகவான் இருக்கும் இடத்திற்கு நான்கு கேந்திரத்தில் இடம் பெறேவது #கஜகேசரியோகம் போன்ற யோகங்களை சந்திர பகவான் தரக்கூடிய யோகங்களாகும்.

சந்திர பகவான் கடக வீட்டை ஆட்சி வீடாகவும், ரிஷபத்தை உச்ச வீடாகவும் விருச்சிகத்தை நீச வீடாகவும் கொண்டுள்ளது.

ரோகினி, அஸ்தம் ,திருவோணம் ஆகிய மூன்று நட்சத்திரங்களின் தசை நாதனாக சந்திர பகவான் வழங்குகிறார். சந்திர தசை 10 ஆண்டுகள் ஆகும்.

சந்திரன் ஒரு ராசியில் 2 1/4 நாட்கள் தங்குவார். சந்திர பகவான் சூரியனை 8 பாகைக்குள்ளாக நெருங்கும் பொழுது அமாவாசை யோகத்தை தருகிறது. சூரியனை விட்டு சந்திரன் ஏழாம் வீட்டிற்கு அதாவது 150 பாகை விலகிச் செல்லும் பொழுது பௌர்ணமி அமைப்பை தருகிறது.

தேய்பிறை பஞ்சமி திதியில் இருந்து வளர்பிறை பஞ்சமி திதி வரை வளர்பிறை காலமாகவும் ,
பௌர்ணமி பஞ்சமி திதியில் இருந்து தேய்பிறை பஞ்சமி திதி வரை தேய்பிறைக் காலமாகவும் கருதப்படுகிறது.

வளர்பிறை காலத்தை பூர்வபட்சம் அல்லது சுலபட்சம் என்று அழைக்கப்படுகிறது.தேய்பிறை காலத்தை அமரபட்சம் அல்லது கிருஷ்ண பட்சம் என்று அழைக்கப்படுகிறது

சந்திர பகவான் குரு அணியைச் சேர்ந்த கிரகமாகும் நட்பு கிரகங்களாக சூரியன், செவ்வாய் ,குரு விளங்குகிறார். சந்திரன் புதனை பகையாக கருதியது ஆனால் புதன் சந்திரனை பகையாக கருதுவதில்லை.

லக்னத்தில் தேய்பிறைச்சந்திரன், சனி செவ்வாய், ராகு போன்றவை தொடர்பு கொள்ளக்கூடிய அமைப்பில் பிறக்கக்கூடிய குழந்தை ஆட்டிசம் குழந்தையாக அதாவது மன வளர்ச்சி குறைந்த குழந்தையாக வளர்கிறது..

வளர்பிறை சந்திரன் சுபத்துவமான முறையில் ராசி மற்றும் லக்னத்திற்கு இரண்டு மற்றும் பத்தாம் இடங்களோடு தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில் குடிக்க இயலக்கூடிய திரவங்கள் பால், ஐஸ் கிரீம், கடல் வாழ் உயிர்கள் வளர்ப்பு போன்ற தொழிலில் ஈடுபட வைக்கும்.

வளர்பிறை சந்திரனுக்கு ஆறு , ஏழு மற்றும் எட்டாம் இடத்தில் இயற்கை சுப கிரகங்கள் ஆன குரு ,புதன் ,சுக்கிரன் நிற்கும் பொழுது. #சந்திராதியோகத்தை ஜாதகருக்கு கொடுக்கிறது.

சந்திரன் நிற்கும் இடத்திற்கு இரண்டு பனிரெண்டாவது இடங்களில் சுப கிரகங்கள் நிற்பது #சுனபாயோகம் மற்றும் #அனபாயோகம் என்று அழைக்கப்படுகிறது.

ராசிக்கு இரண்டு புறத்திலும் இயற்கை சுப. கிரகங்கள் நின்றால் #சுபகர்த்தாரியோகம் அழைக்கப்படுகிறது. அதே நேரத்தில் இரண்டு புறங்களில் பாவ கிரகங்கள் இருந்தால் #பாவகர்த்தாரியோகம் ஆகும்.

சந்திர பகவான் நான்காம் இடத்திற்கு காரக கிரகமாகும் . நான்காம் இடம் மாதுர் ஸ்தானம் என்றும் ,அதன் அதிபதி மாதுர் ஸ்தானாதிபதி என்று அழைக்கப்படுகிறது.

நான்காம் இடம் அதனுடைய அதிபதி மற்றும் காரக கிரகமான சந்திரன் வலிமை பெற்று சுபர் பார்வை மற்றும் சேர்க்கை பெற்ற நிலையில் நல்ல புகழ் அடைவார் .தாய் வழியில் நல்ல ஆதரவு கிடைக்கும்.
நன்றி.
ஃபோர் online appointment

செல் & வாட்ஸ் அப் & கூகுள் பே

097151 89647

மற்றொரு செல் : 7402570899

(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்

0 - 0

Astro Ravichandran
Posted 1 month ago

"சிறு பொம்மை கேட்டு அழுது!
சிங்காரமாய் பிறகு நடந்து !
கனவுகளுடன் படித்து!
காதல் உணர்வோடு வளர்ந்து!
மாற நினைத்தது ஒன்றாகி !
மாறியிருப்பது வேறாகி! காலம் நகர்கிறது கனவுகளுடனே!
கரையை தொட முயன்று
திரும்பும் கடல் அலை போல!"

---கவிநேசன் சோ.ப

2 - 0

Astro Ravichandran
Posted 1 month ago

ஒன்று உயர!
மற்றொன்று தாழ!
தாழ்வானதை உயரமாக்க!
உயரமானது
தாழ்வாகிறது!
சமன் செய்யும்
முயற்சியிலேயே
அகவை பல
கடக்கிறது!.

ஏற்றம் என எண்ணி
வாழ்க்கை படகு விட
இறக்கத்தில்
விழுகிறது!
இறங்கித் தான்
விட்டோம் என
எண்ணியே படகை
நகர்த்தினால்
ஏற்றத்தில் மகிழ்கிறது!

சோ.ப.ரவிச்சந்திரன்

1 - 0

Astro Ravichandran
Posted 3 months ago

#செவ்வாய்பகவான் பார்வை மற்றும் சேர்க்கை தரும் பலன்கள்

செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

நவகிரகங்களில் செவ்வாய் பகவான் இயற்கை பாவ கிரகமாக கருதப்படுகிறது. செவ்வாய் பகவான் ஒரு முக்கால் பாவர் என்று அழைக்கப்படுகிறது.

இவை இயற்கை பாவ கிரகம் என்ற போதிலும் இதனுடைய சேர்க்கை மற்றும் பார்வை சனி பகவானை போல் எல்லா கிரகங்களையும் பாதித்து விடுவதில்லை.

செவ்வாய் பகவான் தனது நட்பு கிரகமான குரு, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்களுடன் பார்வை மற்றும் சேர்க்கை செய்யும்பொழுது பாவராக செயல்படுவதில்லை மாறாக நல்ல பலனை தருகிறது.

செவ்வாய் பகவான் சனி மற்றும் ராகு உடன் இணையும் பொழுது முழுமையான பாவ தன்மையை அடைகிறார்.

செவ்வாய் பகவான் நிழல் கிரகமான செம்பாம்பு என்று அழைக்கப்படும் கேது பகவானுடன் இணையும் பொழுது சூட்சும வலுவை பெறுகிறது. கேதுவுடன் இணைந்த செவ்வாய் பகவான் பார்வை ஆனது பாவ தன்மையை ஜாதகருக்கு கொடுப்பதில்லை.

செவ்வாய் பகவான் கேதுவுடன் இணைந்து முழு பாவ கிரகமான சனி பகவானின் இணைவு அல்லது பார்வையை பெறும் போது செவ்வாய் பகவான் தனது மறைமுக வலிமையை இழப்பார்.

செவ்வாய் பகவான் குருடன் இணையும் பொழுது #குருமங்களயோகம் ஜாதகருக்கு வழங்குவார்.

செவ்வாய் பகவான் சந்திரனுடன் இணைவானது #சசிமங்களயோகம் தருவார்.

செவ்வாய் பகவான் சுக்கிரன் உடன் இணையும் பொழுது #பிருகுமங்களயோகம் தருவார்.

செவ்வாய் பகவான் ஒளி கிரகமான சூரியனுடன் சேர்க்கை அடையும் பொழுது அதிலும் குறிப்பாக 10-ஆம் இடத்தில் திக்பலம் பெற்று நிற்கும்போது ராணுவம், போலீஸ் ,மருத்துவம் போன்ற துறைகளில் பதலிகளில் அமர‌ வைப்பார்.

செவ்வாய் பகவான் பாவ கிரகமான சனி அல்லது ராகு உடன் இணைய கூடாது. அவ்வாறு செவ்வாய் பகவான் பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் கடுமையான பாவ தன்மையை அடைந்து அதன் சேர்க்கை அல்லது பார்வை கடுமையான பாதிப்பை தருகிறது.

செவ்வாய் பகவான் ராகு உடன் நெருக்கமாக இணைந்து சனியின் பார்வை பெற்ற நிலையில் கடுமையான பாவத்தன்மை அடைந்து விடுகிறது இவ்வாறு பாவத்தன்மை அடைந்த செவ்வாய் பகவான் உடைய பார்வை பெரும் இடங்கள் கடுமையான பாவத்தன்மை அடைகிறது.

பொதுவாக செவ்வாய் பகவான் சனியின் வீடுகளான மகர மற்றும் கும்ப வீடுகளில் ராகுவுடன் இணைந்து சனியின் பார்வை பெற்ற நிலையில் அதன் தசை நடப்பு உள்ள காலங்களில் கடுமையான இன்னல்களுக்கு ஜாதகர் உட்படுவார்.

செவ்வாய் பகவான் இருக்கும் இடத்திற்கு நான்காம் இடத்தில் சனி அமர்ந்திருக்கும் பொழுது செவ்வாய் பகவான் தனது நான்காம் பார்வையால் சனியின் மீது விழ செய்வார், அவ்வாறு செவ்வாயின் பார்வையில் பெற்ற சனி பகவான் தனது பத்தாம் பார்வையால் செவ்வாய் பகவானை பார்த்து கூடுதல் பாவத்தன்மை அடைய வைப்பார்.இதன் பிறகு சனி மற்றும் செவ்வாய் ஆகிய இருவரின் பார்வயை அல்லது சேர்க்கையை பெறக்கூடிய ஸ்தானங்கள் மற்றும் கிரகங்கள் கடுமையான பாவத்தன்மை அடைந்து அதன் தசை காலங்களில் கடுமையான கெடுபலன்களை கொடுக்கிறது.

செவ்வாய் பகவான் அதிக சுபத்தன்மை அடைந்து அதாவது முதன்மை சுபத்துவம் பெற்று தொழிற் ஸ்தானமான 10-ஆம் இடத்துடன் தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில் சுபத்துவ வலிமைக்கு ஏற்றவாறு எம்பி.பி.எஸ் படிப்பார். இதனை அடுத்த சுபத்துவ படி நிலைக்கு ஏற்ப சித்தா ,காது மூக்கு தொண்டை நிபுணர் போன்ற வகையில் படிப்பார்.

செவ்வாய் பகவான் அதிக சுபத்துவ ராணுவம் போலீஸ் சிவில் இன்ஜினியர் அக்ரி போன்ற துறைகளில் படிப்பில் ஈடுபட வைப்பார் .

அதே நேரத்தில் செவ்வாய் பகவான் பாவத்தன்மை அடைந்து தொழிற் ஸ்தானத்தோடு தொடர்பு கொள்ள முடியவில்லை ரவுடி தீவிராத அமைப்புகளில் ஈடுபட கூடியவராக இருப்பார்.

செவ்வாய் பகவான் அதிக சுபத்துவமான நிலையில் பிறரை சுட்டு வீழ்த்தி அதாவது தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தி பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்ற விருதுகளை பெறக்கூடியவராக இருப்பார். பாவத்துவமான நிலையில் அப்பாவி மக்களை பொது இடங்களில் வைத்து குண்டு வைத்து தகர்த்தி பிறகு பிடிபட்ட நிலையில் சிறையில் அடைத்த துன்பப்படுவார்.

செவ்வாய் பகவான் குறைந்த அளவு சுபத்துவ நிலையில் காய்கறி வியாபாரம், சமையல்காரர்,பேக்கரி வியாபாரம் செய்யக் கூடியவராக இருப்பார்.

திருமண ஸ்தானமான லக்னம் என்ற ஒன்றாமிடம், குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம், களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் மற்றும் அதன் அதிபதி உடன் செவ்வாய் பார்வை எனது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள கால தாமத திருமணத்தை கொடுப்பார்.

லக்னத்தில் செவ்வாய் இருந்தால் களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடத்தை பார்வை செய்வார் .ஏழாம் இடத்தில் செவ்வாய் இருக்கும் பொழுது ஏழாம் இடத்தை பாதிப்பதோடு தனது சம சப்தம பார்வையால் லக்னத்தையும் மற்றும் இரண்டாம் இடத்தையும் அதாவது குடும்ப ஸ்தானத்தையும் பார்வை செய்வார். இரண்டு அல்லது எட்டாம் இடத்தில் இருக்கும் போது செவ்வாய் பகவான் குடும்ப ஸ்தானத்தையும் மற்றும் மாங்கல்ய ஸ்தானத்தையும் பாதிப்படையச் செய்வார்.

செவ்வாய் பகலுடன் சுக்கிரன் இணைந்து சுப தன்மை அடைந்த நிலையில் இருந்தால் ஜாதகருக்கு காதல் உணர்வு உருவாகும். இதனை சுப கிரகங்கள் பார்த்த நிலையில் நல்ல முறையான மற்றவர் ஏற்றுக்கொள்ளக்கூடிய காதலாக அமையும். அதே நேரத்தில் இந்த செவ்வாய் பகவான் உடன் ராகு இணைந்து சனி பார்த்த நிலையில் காமம் திரிகோண ஸ்தானமான 3,7, 12 ஆம் இடங்களில் தொடர்பு கொள்ள காமம் மிகுதியால் தவறு செய்யும் தன்மை பெற்ற நபராக மாறுவர். இந்த அமைப்பிற்கு இயற்கை சுப கிரகங்களுடைய பார்வை அல்லது சேர்க்கையை பெற கூடிய நிலையில் அவை அப்படியே மாறி நல்ல தன்மை படைத்த மனிதராக ஆகி விடுவார்.

செவ்வாய் லக்னத்துடன் தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில் முரட்டு தன்மை உடையவராக காணப்படுவார். செவ்வாய் பாவ கிரக தொடர்பு பெற்ற நிலையில் இலக்கணத்துடன் தொடர்பு கொள்ளும் பொழுது மற்றவர் வெட்டுவதற்கு முன்பு யோசிப்பார்கள். இவர்கள் வெட்டிய பிறகுதான் யோசிப்பார்கள்.

செவ்வாய் பகவான் சுப தன்மையடைந்து தொழிற் ஸ்தானத்தில் தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில் விளையாட்டுப் போட்டிகள் மூலமாக ஒரு உயரிய நிலையை அடையக்கூடிய தன்மை இருக்கும்.

நன்றி.

FOR ONLINE APPOINTMENT

CELL & WHATSAPP & GPAY
097151 89647

ANOTHER CELL NO
7402570899

(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

0 - 0

Astro Ravichandran
Posted 3 months ago

புதிய கோணத்தில் புதன் பகவான் தரும் பலன்கள்.

செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

ஜாதக கட்டத்தில் புதன் பகவான் தனித்து நின்றாலோ அல்லது இயற்கை சுப கிரகமான குரு , வளர்பிறை சந்திரன், மற்றும் சுக்கிரன் போன்றவற்றின் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பை பெறும் பொழுது அவை இயற்கை சுபக்கிரகமாக செயல்படுகிறார் .

அதே நேரத்தில் சனி, செவ்வாய், ராகு கேது , தேய்பிறைச்சந்திரன் போன்ற இயற்கைப் பாவக் கிரகங்களுடைய பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் புதன் பகவான் இயற்கை பவராகவே செயல்படுகிறார். எனவே புதன் பகவான் ஒரு பச்சோந்தி கிரகம் ஆகும். சேரக்கூடிய அதாவது தொடர்பு கொள்ளக்கூடிய சுப அல்லது பாவ கிரகத்தைப் பொறுத்து அதனுடைய சுபத் தன்மை அல்லது பாவத்தன்மை அமைகிறது.

புதன் பகவான் மிதுனம் கன்னி ஆகிய இரண்டு வீடுகளுக்கு அதிபதியாக செயல்படுகிறார். புதன் பகவான் பாவ கிரகமான செவ்வாய் அல்லது சனியுடன் நெருக்கமாக இணையும் போது அல்லது பார்வை செய்யும் போது மிகுதியான பாவத்தன்மையை அடைகிறார்..

புதன் பகவான் லக்னத்தில் திக் பலம் பெறுகிறார். லக்னத்திற்கு பன்னிரெண்டாம் இடத்தில் இருந்தாலும் அதை பெரிய மறைவாக எடுத்துக் கொள்ள தேவையில்லை
அவை திக் பலத்திற்கு அருகில் இருக்கிறார் என்று வகையில் பலம் பெற்ற கிரகமாகவே கருதப்படுகிறது.

புதன் பகவானுக்கு சனி சுக்கிரன் ஆகியவை நட்பு கிரகமாக செயல்படுகிறது . புதன் பகவானுக்கு குரு மற்றும் செவ்வாய் பகவான் பகைக்கிரகமாக கருதப்படுகிறது.
புதன் பகவான் ஆயில்யம் ,கேட்டை மற்றும் ரேவதி ஆகிய மூன்று நட்சத்திர நாதனாக திகழ்கிறார் .புதன் பகவான் ஒரு ராசியில் ஒரு மாத காலம் வாசம் செய்வார் .புதன் பகவான் சூரியனுடன் சேர்ந்தோ அல்லது சூரியனுக்கு முன்பின் ஒரு ராசியிலே சுற்றி வருவார் எனவே தான் புதன் பகவானை உள்வட்ட கிரகமாக கருதப்படுகிறது.

புதன் பகவான் தரும் யோக விவரங்கள்.

புதன் பகவான் சூரியனுக்கு அருகில் வரும் பொழுது அஸ்தங்க
தோஷத்தை பெரும்பாலும் அடைவது கிடையாது. புதன் சூரியனுடன் இணையும் பொழுது " புத ஆதித்ய யோகம் " என்னும் பல பட்டங்களை பெறக்கூடிய யோகம் ஆகும்.

புதன் பகவான் சூரியனுடன் இணைந்து ஒன்று, நாலு எட்டாமிடங்களில் இருந்தால் அந்த காலத்தில் ராஜா ஆனால் இந்த காலத்தில் அரசாங்கத்தில் உயரிய பதவிகளில் இருக்க கூடிய யோகத்தை தருகிறார்..

புதன் பகவான் கேந்திர ஸ்தலமான ஒன்று, நான்கு, ஏழு எட்டாம் இடங்களில் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று இருந்தால் "பத்திர யோகம்" என்னும் மிகப்பெரிய பஞ்சமுக புருஷ யோகத்தை தருகிறார்.

பத்ர யோகத்தை பெற்றவர் மதியுகி மந்திரியாக, மிகுந்த அறிவாளியாகவும், கணித, சோதிட துறைகளில் வல்லவராகவும் திகழ்வார். கதை ,கவிதை கட்டுரை ,இலக்கண இலக்கியங்கள் போன்றவற்றை படைக்க கூடிய ஆற்றல் பெற்றவராக திகழ்வார்.

வளர்பிறை சந்திர கேந்தரத்தில் புதன் பகவான் இருக்கும் பொழுது ஒருவர் புகழ்பெற்ற சோதிடராக திகழ்கிறார் இவருக்கு ஜோதிட ஞானம் சிறப்பாக வந்து ஒரு நல்ல ஒரு தொழில் முறை ஜோதிடராக வலம் வருவார்.

உங்க ஜாதகத்தில் புதன் பகவான் அதிக சுபத்துவமான நிலையில் இருந்து ராசி மற்றும் லக்கினத்திற்கு தன ஸ்தானமான இரண்டாம் இடம் மற்றும் தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்துடன் தொடர்பு கொள்ள கூடிய நிலையில் ஜாதகர் புதன் சார்ந்த தொழில்களை நடத்துவார்கள்.

புதன் பகவான் கணிதம் கம்யூட்டர் துறை, தகவல் தொழில்நுட்ப தொடர்பு, இசையில் நாட்டம், எழுதுவதில் ஆர்வம், படைப்பாற்றல் மிக்கவர், இலக்கண இலக்கியங்களை படைப்பவர், கண்டுபிடிப்பாளர் ,புள்ளி விவரங்களை சேகரிப்பவர், செய்திகளை சேகரிப்பவர், ஆலோசனை வழங்குவதில் மந்திரியாக திகழ்வார்.

மற்றவருடைய சிந்தனையில் இருந்து மாறுபட்டு சிந்திக்க கூடியவர் . வேறுவகையில் கூறின் இவரது சிந்தனை சரியான நிலையில் இருக்கும்.
கதை கவிதை கட்டுரை பாடல்கள் தலையங்கம் வசனம் போன்றவற்றை படைப்பதில் வல்லவராக திகழ்வார்கள்.

சிறந்த கண்டுபிடிப்பாளர் ஆக ,விஞ்ஞாணியாகவும் திகழ கூடியவர். பிரச்சனைகளை தீர்க்கக் கூடியவர். நிதி மற்றும் வங்கி துறைகளில் வேலை பார்க்கக்கூடியவர்.

புதன் பகவானுடன் சனி அல்லது ராகு சேர்ந்திருந்தாலும் அல்லது புதன் பகவானை சனி பகவான் பார்வை செய்தாலும் புதன் பகவான் பாவ தன்மையை அடைந்து விடுகிறார். இதுபோன்ற அமைப்பு பெற்ற சாதகர் தான் பெற்ற திறமையை தவறான வழிகளில் பயன்படுத்தி பொருள் ஈட்டக் கூடிய தன்மை படைத்தவராக இருப்பார்.

புதன் பகவானுடன் நிழல் கிரகமான செம் பாம்பு என்று அழைக்கக்கூடிய கேது பகவான் இணைவது ஜாதகருக்கு புதன் பகவான் தரக்கூடிய பலனை அதிகரிக்க செய்வார்.மதியுகி மந்திரியாக அறிவுத்திறன் மிகுந்தவராக மற்றும் ஞான உடையவராக திகழ வைப்பார்.

புதன் பகவான் பலம் பெற்ற நிலையில் நல்ல மேடைப் பேச்சாளராக எவ்வளவு கூட்டம் இருந்தாலும் அவ்வளவு பேரையும் கட்டி போட்டு பேச்சை கவனிக்க கூடிய அதாவது கவனிக்க வைக்கக்கூடிய பேச்சாளராக திகழ்வார்.

புதன் பகவான் வலிமை பெற்றவர்கள் படிக்காமல் நல்ல மேதையாக திகழ வைப்பார். இவர்கள் குறைவாக படித்திருந்தாலும் மெத்தப் படித்த மேதாவிகளை விட மிகுந்த அறிவு படைத்த படைப்பாளியாக திகழ்வார்கள்..

ஒருவர் ஜாதகத்தில் புதன் பகவான் பலம் பெற்று சந்திர கேந்திரத்தில் நின்று குரு பகவானால் பார்க்கப்பட்ட நிலையில் நல்ல எழுத்தாளராக, பாடல் எழுதக் கூடியவராக, ஒரு கவிஞராக ,கதை வசனம் எழுத கூடியவராக திகழ்வார். சுருக்கமாக சொல்லப்போனால்
இவர் ஒரு பல்கலை வித்தகராக திகழ்வார் .

மனதை என்றும் இளமையாகவும் மற்றும் புதுமையாகவும் வைத்திருக்க உங்கள் ஜாதகத்தில் முதலில் பகவான் வலிமையடைந்த நிலையில் இருக்க வேண்டும்.
புதன் பகவான் வலிமை பெற்று சுப தன்மை அடைந்த நிலையில்
இலக்கண இலக்கியங்களை படைப்பவராக ,அதன் மீது நாட்டம் உடையவராக, அதை விரும்பி படிப்பவராகவும் இருப்பார் .இவ்வாறு படைப்பாற்றல் மிக்கவர் மனதை என்றும் இளமையாக வைத்துக் கொள்ளக் கூடியவராகவும் இருப்பார்.

நன்றி

ONLINE APPOINTMENT
CELL & WHATSAPP AND GPAY
097151 89647
ANOTHER CELL NO 7402570899

(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

2 - 1

Astro Ravichandran
Posted 3 months ago

12-லக்கனங்களுக்கும் குரு பார்வை தரும் நன்மைகள்.

செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

12 ராசி கட்டங்களில் உள்ள நவகிரகங்கள் அனைத்திற்கும் குரு பகவானுடைய பார்வை தரக்கூடிய பலன்
மிகவும் சிறப்பானதாகும்.

குரு பகவான் தான் இருக்கும் இடத்தை விட தன்னால் பார்க்கப்படும் கிரகங்களும் அல்லது ஸ்தானங்களும் பன்மடங்கு வலிமை பெற்று ஜாதகருக்கு நல்ல பலனை தரக்கூடிய அமைப்பாக மாறிவிடுகிறது.

நிழல் கிரகங்களான ராகு கேது தவிர எல்லா கிரகங்களுக்கும் ஏழாமிடப் பார்வை உண்டு என்றாலும் குரு பகவான் சனி பகவான் மற்றும் செவ்வாய் பகவான் ஆகிய மூன்று கிரகங்களுக்கு மட்டும் சிறப்பு பார்வைகள் உண்டு.

குரு பகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து ஐந்தாம் இடத்தையும், ஒன்பதாம் இடத்தையும் சிறப்பு பார்வை செய்கிறது.

குரு பகவான் உடைய சிறப்பு பார்வையுடன் தனது சம சப்தம பார்வை 100% சுபத் தன்மையை அடைய செய்கிறது.

குரு பகவான் லக்னத்தில் இருக்கும் பொழுது ஆட்சி மற்றும் திக்பலம் ஆகிய இரண்டு வலிமையைப் பெற்று இருப்பதால் லக்னத்தில் இருந்து தான் பார்க்கக்கூடிய பூர்வ புண்ணியம் அல்லது புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தை பலமடைய செய்து தான் பெற்ற பிள்ளைகளாலும் , பூர்வ புண்ணியத்தாலும் நல்ல புகழ் அடையச் செய்கிறது. நல்ல புத்தியைத் தந்து அதன் மூலம் பொருள் ஈட்ட வைக்கிறது.

சில நேரங்களில் ஐந்தாமிடத்தில் பாவக் கிரகங்கள் ஆன ராகு அல்லது சனி அல்லது தேய்பிறை சந்திரன் இருந்தாலும் குருபகவனுடைய பார்வையால் அவை தனது பாவத்தன்மை இழந்து சுபத் தன்னை அடைய வைத்து விடுகிறது.

குரு பகவான் உடைய பார்வையைப் பெற்ற சனி பகவான் தனது தீய சக்தி வடிகட்டப்பட்டு அதே நேரத்தில் அது தனது பார்வையால் கெட்ட பற்றும் நல்ல பலன் இரண்டையும் தராத நிலைக்கு ஆட்பட்டு விடுகிறது.

இயற்கை பாவ கிரகமான சனி பகவானை குருபகவான் ஐந்து மற்றும் ஒன்பதாம் பார்வையால் பார்க்கப்படும் பொழுது அவை சுபத்தன்மை அடைகிறது. ஆனால் குரு பகவான் எந்த விதத்திலும் பாதிக்கப்படுவதில்லை. மாறாக தனது ஏழாம் பார்வையால் குரு பகவான் சனி பகவானை பார்க்க குரு பகவான் சனியை சுபத்துவப்படுத்தி அதே நேரத்தில் தான் பாவத்துவமடைகிறார் என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.


குரு பகவான் லக்னத்தில் ஸ்தான பலம் மற்றும் திக்பலம் இரண்டையும் பெற்று சம சப்த்தமாக களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தை பார்வை செய்யும் பொழுது நல்ல மனைவி ,கற்ற மனைவி மற்றும் குணமுள்ள மனைவி அமைவாள். மனைவி வழியில் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே தாம்பத்திய உறவு நிலை சிறப்பாக இருக்கும் .நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.

பாக்ய ஸ்தானம் ,பிதுர் ஸ்தானம் மற்றும் தர்ம ஸ்தானம் என்று அழைக்கப்படும் ஒன்பதாம் இடத்தை பார்வை செய்யும் பொழுது தான தர்ம குணம் மிக்கவராகவும் ,கல்வி கேள்வி கேள்விகளில் வல்லவராகவும் ,தீர்த்த யாத்திரைகள் செய்யக்கூடியவராகவும், நல்ல குருமார்களை பெற்றவராகவும் மற்றும் தந்தை வழி ஆதரவை பெற்றவராகவும் இருப்பார்.

குரு பார்வை நன்மை தர வேண்டுமென்றால் அந்த குரு பகவான் சனி, ராகு போன்ற பாவ கிரகங்களுடைய பார்வை அல்லது சேர்க்கை பெறாமல் இருக்க வேண்டும். குருபகவான் நீசம் பெற்றிருந்தாலும் அதனுடைய பார்வை ஓரளவு நலம் பெறக்கூடியதாக இருக்கும். ஆனால் பாவத்துவமான குரு பகவானுடைய பார்வை ஜாதகருக்கு கோடி நன்மையை தருவதில்லை.

குரு பகவான் மற்றும் சுக்கிர பகவான் ஆகிய இரண்டு கிரகங்களும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டாலும் நல்ல பலனை ஜாதகருக்கு கொடுப்பதில்லை மாறாக தாம்பத்திய சுகம் பெறுவதில் தாமதத்தை உண்டு பண்ணும்

ரிஷபம் ,துலா லக்கனங்களுக்கு குரு பகவான் லக்கன அவ யோகராக இருப்பதால் அதன் பார்வை பெரிய அளவுக்கு நன்மை தந்து விடுவதில்லை.
குரு அணியை சேர்ந்த மேஷம், விருச்சிகம் ,தனுசு ,மீனம் ,கடக மற்றும் சிம்மம் ஆகிய ஆறு லக்கனங்களுக்கு குருவின் பார்வை மற்றும் சேர்க்கை தொடர்பு மிகுந்த நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கும்.

குருபகவான் சூரியனைப் பார்க்கும் பொழுது சிவராஜ யோகத்தை கொடுக்கிறது . நல்ல ஆளுமை தன்மை உடையவராக, அரசருக்கு நிகரான புகழுடையவராக அல்லது அரசு வேலையில் உயரிய பதவியில் அமரக்கூடியவராக திகழ்வார்.

குரு பகவான் சந்திரனை பார்வை செய்யும் பொழுது அந்த சந்திரன் குருச்சந்திர யோகத்தை கொடுக்கும்.

குரு பகவான் செவ்வாயை பார்வை செய்யும் போது குரு மங்கள யோகத்தை ஜாதகருக்கு கொடுக்கும். இதனால் மணவாழ்க்கையில் மற்றும் புத்திரம் பேரு முதலியவை மிகவும் சிறப்பாக அமையும்.

குரு பகவான் ராகுவை பார்வை செய்யும் பொழுது ராகுவின் கெடுபலன் நீக்கப்பட்டு நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கும்.

குரு பகவான் கேதுவை பார்வை செய்தால் ஆன்மீகத்தில் உயரிய நிலையை அடையக்கூடிய யோகத்தை கொடுக்கும்.

குரு பகவான் புதனை புதன் பகவானை பார்வை செய்தால் வித்தையில் சாதுரியம் உடையவராகவும், கணிப்பொறி ,படைப்பாற்றல் கலை போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் உடையவராக திகழ்வார்.

இதே போல குரு பகவான் லக்னத்தை பார்த்தால் நீதி, நியாயம், நேர்மை உடையவராக, நீண்ட நெடிய ஆர்ப்பாட்டிய உடையவராக திகழ்வார்.

குருபகவான் வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தை பார்வை செய்வதால் கல்வி ,வாக்கு ,குடும்ப வாழ்க்கை போன்றவற்றில் சிறந்து விளங்குவார்.

குருபகவான் கீர்த்தி புகழ் அடையக்கூடிய மூன்றாம் இடத்தை பார்வை செய்யும் போது நல்ல புகழ் உடைய மைந்தராக திகழ்வார் இளைய சகோதரத்தால் ஆதரவு உண்டாகும். நல்ல காம வீர்யம் உடையவராக படைப்பாற்றல் மிக்கவராக திகழ்வார்.

குரு பகவான் நான்காம் இடத்தை பார்வை செய்யும் போது தன் சுகம் ,தாய் சுகம் ,கல்வியால் சுகம் மற்றும் வண்டி வாகன சுகம் போண்டாற்றால் நன்மை உண்டாகும்.

குரு பகவான் ஐந்தாம் இடத்தை பார்வை செய்யும் போது பூர்வ புண்ணிய சொத்துகளால் நல்ல ஆதரவு கிடைக்கும், மாமன் வர்க்கத்தால் நன்மைகள் உண்டாகும், நல்ல புத்திரங்களை பெற்றெடுப்பீர்கள்.

சத்ரு ஸ்தானமான ஆறாம் இடத்தை பார்வை செய்வதால் சுப கடன்கள் உருவாகும். நோயே உருவானாலும் அவற்றிலிருந்து பிழைத்துக் கொள்வார்.

குரு பகவான் களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தை பார்வை செய்யும் போது நல்ல கற்ற அழகான , அன்பான மனைவி அல்லது அமைவாள்.

குரு பகவான் எட்டாம் இடத்தை பார்வை செய்யும் போது ஆயுள் நீடிக்கும்.

பாக்கிஸ்தானமான ஒன்பதாம் இடத்தை குரு பகவான் பார்வை செய்யும் போது தான தர்ம குணங்கள், சத்திரங்களில் அன்னதானம், தீர்த்த யாத்திரைகள் செய்தல், மேல்நிலைக் கல்வி, அப்பாவழி உறவுகளால் ஆதரவு போன்றவை கிடைக்கும்.

ஜீவனஸ்தானம் ஆன பத்தாம் இடத்தை பார்வை செய்வதால் நல்ல நேர்மையான ஒயிட் கலர் ஜாப் கிடைக்கும்.

லாப ஸ்தானமான பதினோராம் இடத்தை பார்வை செய்யும் பொழுது மூத்த சகோதரர் தான் ஆதரவு எல்லாவற்றிலும் லாபத்தை தரக்கூடிய நிலை போன்றவை உருவாகும்.

விரய ஸ்தானமான பனிரெண்டாம் இடத்தை குரு பகவான் பார்வை செய்யும் பொழுது வெளிநாடு செல்லுதல், சுப செலவுகள் செய்தல் ,நித்திரை சுகம், படுக்கை சுகம் நேரிய வழியில் பொருள் கட்டுதல்.ஒருவனுக்கு ஒருத்தியான வாழுதல் போன்ற அமைப்புகள் உருவாகும்.

குரு பகவான் ஒரு ராசியில் ஓராண்டு வீதம் 12 ராசிகளை சுற்றி வர பன்னிரெண்டு எடுத்துக் கொள்வார்.

நன்றி.

For online appointments

வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே
‌ 097151 89647

மற்றொரு செல்: 7402570899

(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,aM.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

1 - 0

Astro Ravichandran
Posted 3 months ago

வாழ்க்கை ஒரு போராட்டமா ? பூந்தோட்டமா?

செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

ஒருவன் தன் வாழ்வில் ஏதோ ஒன்றை தேடி எதற்காகவோ அழைந்து கடைசியில் ஏதோ ஒன்றை பெற்று வாழ்க்கையை நகர்த்திச் செல்வது நடுத்தர வர்க்க மனிதனின் நடைமுறைச் செயலாகும்.

ஒரு மனிதன் அறிவும் திறமையும் இருந்தாலும் அதற்குரிய கால நேரம் ஒத்துழைப்பு இல்லை என்றால் அவன் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாதாரண துறும்பைப் போல் ஆகி விடுகிறான். சில நேரங்களில் சாதாரண அறிவைப் படைத்தவன் நல்ல உகந்த தசை புத்திகள் தொடர்ந்து அவனுக்கு வந்து அவனை வாழ்வில் உச்சாணி கொம்புக்கு ஏற்றி அழகு பார்த்து விடுகிறது.

ஒருவரை எந்த இடத்தில் வைப்பது என்பதை அவனது லக்னம் அதன் அதிபதி ,தொடர்ந்து நடக்கக்கூடிய தசா புத்திகள் மற்றும் ஜாதக கட்டத்தில் உள்ள கிரக அமைப்புகள் இவை அனைத்துமே முடிவு செய்கிறது.

ஒருவருக்கு நல்ல யோக தசா அமைப்புகள் தொடர்ந்து வரக்கூடிய நிலையில் அவர் குப்பையில் கிடந்தாலும் கோபுர கலசமாக திகழ்வார்.

அதே நேரத்தில் கோபுரத்தின் உச்சியில் இருந்த வரையும் உகந்த தசா அமைப்புகள் வராத நிலையில் அல்லது தொடர்ந்து அவயோக தசைகள் வரக்கூடிய நிலையில் கீழ் மட்ட நிலைக்கு வந்து விடுவது உண்டு.

ஒருவருக்கு தொடர்ந்து லக்கன யோக தசைகள் அல்லது சுப கிரக பார்வை பெற்ற தசைகள் தொடர்ந்து வரக்கூடிய நிலையில் லக்கனாதிபதியும் வலிமையை பெற்ற நிலையில் அவர் அந்த யோகத்தை முழுமையாக அனுபவித்து நல்ல முறையில் சொகுசான வாழ்வை வாழக்கூடிய நிலையை அடைவார்.

ஒருவருக்கு ஆறு மற்றும் எட்டுக்குரிய தசைகள் அல்லது அவயோக தசைகள் அல்லது பவர் சேர்க்கை மற்றும் பார்வையை பெற்ற தசைகள் நடப்பில் வரக்கூடிய காலங்களில் கடுமையான கஷ்டங்களையும் மற்றும் நஷ்டங்களையும் அனுபவிக்க கூடிய நிலையில் தள்ளப்படுவார். இத்தகைய சூழ்நிலையில் அவருக்கு லக்கனாதிபதி வலிமை அடைந்து இருக்குமாயின் அவர் அந்த கஷ்டங்களில் போராடி எதிர்நீச்சல் போட்டு பிறகு நல்ல தசை அமைப்புகள் வரக்கூடிய காலங்களில் வெற்றி பெற்று விடுவார்.

ஆனால் அதே நேரத்தில் மேற்கண்ட வகையிலான தசா புத்திகள் நடக்கக்கூடிய காலங்களில் லக்கனாதிபதியும் வலிமை இழந்த நிலையில் அவர் போராட திராணியற்று மிகுந்த கஷ்டங்களுக்கு உட்பட்டு மிகவும் தாழ்வான நிலையை அடைந்து வாழ்வில் தாழ்ந்து விடுவார்.

ஒருவருக்கு வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டங்களை எதிர்கொண்டு திறம்பட போராடி வெற்றி பெற்று சமூகத்தில் ஒரு உயரிய நிலையை அடைவதற்கு அவருடைய ஜாதகத்தில் உள்ள லக்கனாதிபதியின் வலிமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு மனிதன் வாழ்வில் பிறப்பிலிருந்து இறப்பு வரை யோகத்தை அனுபவிப்பதற்கும், ஒரு சிலர் பிறந்தவுடன் கஷ்டங்களை அனுபவித்து ஒரு மத்திம வயதில் போராடி ஒரு உயிரிய நிலையை அடைவதற்கும் மற்றும் ஒரு சிலர் பிறப்பிலிருந்து இறப்பு வரை கஷ்டமான சூழ்நிலை கஷ்டத்திலே வாழ்ந்து மறைவதற்கும் அவருடைய ஜாதக கட்டத்தில் உள்ள கிரகங்களுடைய சேர்க்கை ,பார்வை, இருக்கும் இடம் மற்றும் நடக்கும் தசா புத்திகள் இவற்றைச் சார்ந்தே அமைகிறது.

ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி வலிமை அடைந்து
தனம்- பாக்கியம்_ லாபம் என்று சொல்லக்கூடிய மகா தன யோகத்தை தரக்கூடிய இந்த ஸ்தானங்களும் அதன் அதிபதிகள் நல்ல முறையில் தனகாரகன் குருவுடன் பார்வை மற்றும் சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டு தன-பாக்கிய-லாப அதிபதி திசையில் ஏதோ ஒன்று சரியான நேரத்தில் வரும் பட்சத்தில் கோடிக்கணக்கான பணங்களை சம்பாதித்து வாழ்வில் உயர்ந்த கோடீஸ்வரன் நிலையை அடைய இயல்கிறது.

லக்கனாதிபதி வலிமை அடைந்து பௌர்ணமி யோகத்தில் ஒருவர் பிறந்து சிம்மமும் வலுப்பெற்ற நிலையில் ஆட்சி மற்றும் அரசியலில் உயரிய பதவியில் அமரக்கூடிய யோகத்தை ஜாதகருக்கு கொடுக்கிறது.

ஒரு மனிதன் பிறப்பிலிருந்து குரு பகவான் பார்த்த தசா தொடர்ந்து வரக்கூடிய நிலையில் அவர் பிறப்பிலிருந்து யோகத்தை அனுபவிக்க கூடிய நிலையில் இருப்பார் ‌ லக்கனாதிபதியும் வலிமை அடைந்து சுபத்துவ தன்மையை பெற்றிருக்க வேண்டும்.

ஒரு மனிதனுக்கு லக்கனாதிபதி வலிமையடைந்த நிலையில் பிறப்பிலிருந்து மத்திய வயது வரை உகந்த தச அமைப்புகள் நடக்காமல் மத்திம வயதுக்கு பிறகு யோக தசைகள் நடப்பில் வரக்கூடிய காலங்களில் மனிதன் கஷ்டப்பட்டு போராடி தான் பெற்ற மற்றும் கற்ற துறை மூலமாக வாழ்வில் உயரிய நிலையை அடைந்து விடுகிறான்.

ஒருவர் ஜாதகத்தில் லக்கனாதிபதி பாவத்தன்மை அடைந்து தொடர்ந்து பிறப்பிலிருந்து இறப்பு வரை சனியின் பார்வை பெற்ற தசை ,அவ யோக தசைகள் மற்றும் ஆறு மற்றும் எட்டு தசைகள் தொடர்ந்து நடப்பில் வரக்கூடிய மனிதனாக இருந்து அவன் பிறப்பிலிருந்து இறப்பு வரை கஷ்டப்பட்டு கஷ்டத்தோடு தன் வாழ்வை முடித்துக் கொள்வான்.

ஒருவன் எவ்வளவு தான் கஷ்டம் வந்தாலும் எதிர்ப்புகள் வந்தாலும் அவற்றையெல்லாம் இன் முகத்தோடு வரவேற்று கஷ்டங்களை அனுபவித்து அதிலிருந்து மீண்டு ஒரு நல்ல இடத்தை அடைந்து விடுவோம் என்கிற நம்பிக்கையோடு போராடி அதேபோல ஒரு உதாரண புருசராக உயர்ந்த நிற்க கூடிய நபர்களை நம்ம பார்க்கிறோம். நிச்சயமாக அவருடைய ஜாதகத்துல லக்கனம் மற்றும் லக்கனாதிபதி வலிமை அடைந்து சுப தன்மை உடன் நின்று ஆரம்ப காலத்திலிருந்து அவயோகத்தை தரக்கூடிய தசைகள் நடந்து பின்பு அந்த சாதிக்கக்கூடிய நேரத்தில் நல்ல தசா புத்திகள் வந்து ஒரு ஒத்துழைப்பு தந்து அவரை அந்த உயரிய இடத்துல அமர வைத்து அழகு பார்க்கும்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஐயா அப்துல் கலாம் அவர்கள் சொன்ன ஒரு கவிதையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உள்ளேன் .

"வானம் என்றும் நீல நிறமாக இருக்கும் என்றோ ? .பாதை முழுவதும் பூக்களே நிரம்பி இருக்கும் என்றோ? இறைவன் வாக்கு தரவில்லை "

உங்கள் ஜாதக கட்டத்தில் 12 ராசிகளில் 27 நட்சத்திர சாரத்தை பெற்று கிரகங்கள் எங்கு எந்த இடத்தில் எப்படிப்பட்ட பார்வை ,சேர்க்கையில் இடம்பெற்று தசா புத்திகளை லக்னாதிபதி வலிமையை கொண்டு நடத்திச் செல்கிறதோ அவற்றைப் பொறுத்தே நம் வாழ்வில் நிலை அமைகிறது என்பதை விளக்கவே இந்த பதிவை முழுவதும் பயன்படுத்திக் கொண்டேன்.

நன்றி

For online appointment

வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே
097151 89647

மற்றொரு செல்: 7402570899

(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி.

0 - 0

Astro Ravichandran
Posted 3 months ago

கிரகம் தரும் பலன்களை கண்டறிய தேவையான விதிமுறைகள்.

செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் தரும் பலன்களை நிர்ணயிப்பதில் முதன்மையான இடம் லக்கனாதிபதி உடைய வலிமையாகும். இதனை தொடர்ந்து ஒரு கிரகம் இருக்கக்கூடிய வீட்டின் அதிபதி, அந்த கிரகத்துடன் சேர்ந்திருக்கக்கூடிய கிரகங்கள் அல்லது பார்வை செய்யக்கூடிய கிரகங்கள் ஆகியவற்றை பொறுத்து அமைகிறது.

பார்வை அல்லது சேர்க்கையானது
சுப கிரகங்களா ? அல்லது பாவ கிரகங்களா ? என்பதை பொறுத்தும் பலன் தருவதில் மாற்றம் ஏற்படுகிறது.

சேர்க்கை மற்றும் பார்வையானது
சுப கிரகங்களால் நிகழ்ந்தால் சுப பலனையும் மற்றும் பாவ கிரகங்கள் உடன் தொடர்பு பட்டால் பாவத்துவமான பலனையும் ஜாதகருக்கு தருகிறது.

ஒரு கிரகம் ஆனது பாவருடைய வீட்டில் அமர்ந்து ,பாவ கிரகங்களின் சேர்க்கை மற்றும் பார்வையினை பெற்றிருந்தால் மிகவும் கெடுப்பலன்களைதானே ஜாதகருக்கு கொடுக்கிறது.

ஒரு கிரகம் ஆனது சுபர் வீட்டில் அமர்ந்து மற்றும் சுப கிரகங்களுடைய பார்வை மற்றும் சேர்க்கை நிலையை பெற்று இருந்தால் மிகவும் நல்ல பலனை ஜாதகருக்கு அதன் தசையில் கொடுக்கிறது.

ஒரு கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் அடைந்து இருப்பின் அதன் தசையில் மிகவும் நல்ல பலனை அந்த கிரக தன்மைக்கு ஏற்றவாறு ஜாதகருக்கு கொடுக்கும்.

ஒரு கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி நீச்சம் அடைந்திருந்தால் அந்த கிரக தசையில் ஜாதகருக்கு நல்ல பலனை தருவது கிடையாது.

ஒரு சுப கிரகம் நீசம் அடைந்த வீட்டில் இருந்து தசை நடத்தும் போது அந்த சுப கிரகம் தரக்கூடிய நல்ல பலனை அந்த தசையும் கொடுப்பதில்லை. இதே போல பாவ கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி நீச்சமடைந்திருந்தால் மிகவும் கடுமையான கெடுபலனை சாதகருக்கு கொடுக்கிறது.

ஒரு சுப கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி பாவ கிரகமாக இருந்து உச்சமடைந்து இருந்தாலும் அந்த சுப கிரகம் அந்த தசையில் நல்ல பலனை தருகிறது. உதாரணமாக குரு பகவான் மகரா அல்லது கும்பம் வீட்டில் நின்று அதன் அதிபதியான சனி பகவான் துலாத்தில் உச்சம் பெற்று இருந்தால் குரு பகவான் தசையில் மிகுந்த யோகத்தை ஜாதகருக்கு கொடுக்கிறார்.

ஒரு கிரகம் நீசம் அடைந்திருந்தாலும் அதன் தசையில் நல்ல பலனை தருவார். ஆனால் அந்த நீசம் அடைந்த கிரகத்துடன் பாவ கிரகம் சேர்க்கை அல்லது பார்வை முறையில் தொடர்பு கொள்ளும் பொழுது அது அதன் தசையில் மிகவும் கெடுப்பலனை ஜாதகருக்கு கொடுக்கும்.

பாவ கிரகமான சனி மற்றும் செவ்வாய் உச்சம் அடைந்து இருந்தால் அவை அதன் தசையில் நன்மையை தராமல் அதன் தன்மையை ஜாதகருக்கு கொடுப்பார் .

எப்பொழுதும் ஒரு கிரகம் பலவீனம் (நீசம், பகை ,வக்கிரம் மற்றும் அஸ்தமனம்) அடைந்திருந்தால் மிகுந்த அளவு கெடுபலனை அதன் தசையில் தர மாட்டார். ஆனால் அதே நேரத்தில் பாவத்தன்மை அடைந்திருந்தால் அதன் தசையில் கடுமையான கெடுபலனை ஜாதகருக்கு கொடுப்பார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு கிரகம் ராசியில் பலவீனம் அடைந்திருந்தாலும் அம்சத்தில் சுப வர்க்கம் ஏறி இருந்தால் அதன் தசையில் நல்ல பலனை ஜாதகம் இருக்க கொடுப்பார். அதே நேரத்தில் ஒரு கிரகம் ராசியில் நல்ல நிலையில் அமர்ந்து அம்சத்தில் பாபவர்க்கம் ஏறி இருந்தால் அதன் திசையில் மிகுந்த நல்ல பலனை ஜாதகர் அடைவதில்லை.

மேற்கண்ட இந்த பல விதிகளை மனதில் கொண்டு ஒரு குறைந்த நேரத்தில் ஜாதகர் தரக்கூடிய சாதகத்தை கணித்து பலன் சொல்லும் பொழுது அவ்வாறு தரக்கூடிய பலன் ஆனது நிச்சயமாக துல்லியமாக 100% இருக்கும் . மனித வாழ்வியல் சம்பவங்களை முடிவு செய்வது தசா புத்திகளே அந்த தசா புத்திகளுடைய பலனை மேற்கூறிய விதிமுறைகளை மனதில் கொண்டு சோதிடர்கள் ஆய்வு செய்து சாதகர்களுக்கு பலம் சொல்ல வேண்டும்.

நன்றி.

வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே
097151 89647

மற்றொரு செல்: 7402570899

(ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

2 - 0

Astro Ravichandran
Posted 3 months ago

கேது பகவான் தரும் சிறப்பு பலன்கள்.

செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

ராகு மற்றும் கேது நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படுகிறது. இதில்
செம் பாம்பு என்றும் மற்றும்
ஞான காரகன் என்றும் அழைக்கப்படக்கூடிய கேது பகவான் தரக்கூடிய சிறப்பு பலன்களை பற்றி இந்த சோதிட பதிவில் விரிவாக பார்ப்போம்.

கேது பகவான் தன்னுடன் இணைந்த கிரகங்களின் பலனை நன்மை தரக்கூடிய வகையில் உயர்த்தி தரக்கூடிய நிலையில் இருக்கும்.எனவே நிழல் கிரகங்கள் பொதுவாக பாவ கிரகங்கள் என்றாலும் கேது பகவானை மட்டும் சுப கிரகம் தருவதற்கு சமமான பலனை தரும் என்பதால் இதனை சுப கிரகமாகவே எடுத்துக் கொண்டு பலன் ஜாதகருக்கு அளிக்கலாம்.

கேது பகவான் பாவ கிரகங்களாக இருந்தாலும் சனி மற்றும் செவ்வாயுடன் தனித்தனியாக இணையும் பொழுது சூட்சும பலத்தினை ஜாதகருக்கு தருகிறது . கேது பகவான் உடன் இணைந்த சனி‌ பகவான் தனது தசையில் நல்ல பலனை தரக்கூடிய நிலைக்கு மாறுகிறது. கேது உடன் இணைந்த சனி பகவானுடைய பார்வை பெரிய அளவுக்கு பாதிப்பை தருவதில்லை.

இதே போல கேது பகவான் செவ்வாயுடன் இணையும் பொழுது சூட்சும பலத்தை ஜாதகருக்கு கொடுக்கிறது. கேது உடன் இணைந்த செவ்வாய் பகவான் கூட தனது தசையில் நல்ல பலனை தருகிறது. மேலும் அதன் பார்வையும் பெரிய அளவுக்கு சாதகரை பாதிப்பதில்லை.

இங்கு விதிவிலக்காக கேது செவ்வாயுடன் இணைந்து சனி பகவான் பார்வை செய்தாலும், சனி பகவான் கேது பகவான் உடன் இணைந்து செவ்வாய் பகவான் பார்வை செய்தாலும் மற்றும் சனி ,செவ்வாய் ஆகிய இருவரும் கேது பகவான் உடன் இணைந்து இருந்தாலும் மேற்கண்ட வகையிலான சூட்சும பலத்தை ஜாதகருக்கு கொடுப்பதில்லை அவற்றை இயல்பான பாவ கிரகமாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

கேது பகவான் ஜாதக கட்டத்தில் சிம்மம், விருச்சகம் மற்றும் கும்பம் ஐயம் மூன்று இடங்களில் இருக்கும் பொழுது மிகுதியான யோக பலனை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.

கேது பகவானை ஞான காரகன் என்று அழைக்கப்படுகிறது ஒரு ஜாதகத்தில் கேது பகவான் லக்னத்தில் இருக்கும் பொழுது உள்ளுணர்வு (intuition ) தன்மை ஜாதகரிடம் மிகுதியாக காணப்படும்.
இரண்டாம் இடத்தில் இருக்கும் போது வாக்கு வன்மை மிக்கவராக இருப்பார்.

கேது பகவான் ஒரு ஜாதகத்தில் ஐந்து , ஒன்பது மற்றும் பன்னிரண்டாம் இடங்களில் இருக்கும் பொழுது ஆன்மீகத் தன்மை மிகுதியாக காணப்படும். அதிலும் குறிப்பாக சனி கேது உடன் இணைந்து குரு பகவானால் பார்க்கக்கூடிய நிலையில் இருந்தால் நிச்சயமாக முழுமையான மற்றும் நேர்மையான ஆன்மீக வாதியாக ஜாதகர் திகழ்வார்.

பன்னிரெண்டாம் இடம் ஒரு நாளின் இறுதி நிலை,ஒரு வாழ்வின் இறுதி போன்றவற்றைக் குறிக்கும் இடமாகும். ஒரு மனித வாழ்வின் இறுதி நிலை முக்தி நிலை என்பதால் அந்த இடத்தில் கேது பகவான் இருக்கும் பொழுது முக்தி நிலை அடையக்கூடிய தன்மை ஜாதகருக்கு உண்டாகும்.

கேது பகவான் ஏழாம் இடத்தில் இருக்கும் போது ராகு பகவான் போல திருமணத்தடையை தருவதில்லை. ஆனா அதே நேரத்தில் ஏழாம் இடத்தில் கேது இருக்கும் பொழுது லக்னத்தில் ராகு இருப்பார் என்ற வகையிலும் இரண்டாம் இடத்தில் கேது மகான் இருக்கும் பொழுது எட்டாம் இடத்தில் ராகு பகவான் இருக்கும் என்ற வகையிலும் அவை நாக தோஷத்தை தந்து ஜாதகருக்கு திருமண வாழ்வில் தடை உண்டாக்குகிறது.

புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் கேது பகவான் இருக்கும் பொழுது புத்திர தோஷத்தை ராகு பகவான் அளவிற்கு மிகுதியாக தருவதில்லை.
.
ஒளி கிரகமான சூரிய பகவானுடன் கேது பகவான் இணையும் பொழுது ஒரு ஆன்மீக சபைக்கு தலைமையேற்று நடத்தக் கூடிய அளவிற்கு ஒரு வித தலைமை பண்பை ஜாதகருக்கு கொடுக்கும்.

மற்றொரு ஒளிக்கிரகமான சந்திர பகவான் உடன் கேது பகவான் இணையும் பொழுது ஒருவருக்கு முன்னுணர்வு தன்மை உருவாகும்.

புதன் பகவானுடன் கேது இணையும் போது வித்தையில் சாதுரியத்தை தரும். சுக்கிரனும் கேது பகவான் இணையும் பொழுது மிகப்பெரிய அளவுக்கு திருமணத்தடையை சாதகருக்கு கொடுப்பதில்லை..

குரு பகவான் ஆனவர் ஞான காரகன் கேது பகவான் உடன் இணையும் போது "கேள யோகம்" என்ற ஒரு வகை கோடீஸ்வர யோகத்தை ஜாதகத்தை கொடுக்கிறது.

ராகு பகவான் அளவிற்கு கேது பகவான் சூரியனுடன் அல்லது சந்திரனுடன் பௌர்ணமி மற்றும் அமாவாசை காலங்களில் இணையும்போது மிகப்பெரிய கிரகண தோஷத்தை ஜாதகருக்கு தந்து விடுவதில்லை.

கேது பகவானால் தரக்கூடிய தொல்லைகளைப் போக்க மயிலாடுதுறை அருகில் உள்ள #கீழப்பெரும்பள்ளம் என்ற கேது ஸ்தலத்தையும் மற்றும் ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள #காளகஸ்தி என்ற இடத்திலும் உள்ள நாகநாத சுவாமிக்கு வெள்ளியால் செய்யப்பட்ட நாக படம் அடித்து வைத்து எமகண்ட நேரத்தில் பரிகாரம் செய்ய இதனால் உண்டாகும் கெட்ட பலன்கள் நீங்கும்.

நன்றி.
Online appointment

வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே & போன் பே

097151 89647

மற்றுமொரு செல்: 7402570899

(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

3 - 0

Astro Ravichandran
Posted 3 months ago

கிரகப் பார்வை மற்றும் சேர்க்கை தரும் பலன்களை துல்லியமாக கண்டறிவது எப்படி?

செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

ஜாதக கட்டத்தில் ஒரு ஸ்தானத்தை அல்லது கிரகத்தை இயற்கை பாவ கிரகங்கள் ( சனி ,செவ்வாய், ராகு, கேது தேய்பிறை சந்திரன் மற்றும் பாவியுடன் சேர்ந்த புதன்) பார்த்தாலோ அல்லது சேர்ந்து நின்றாலோ அந்த கிரகம் பாவத்தன்மை அடைந்து அதன் தசையில் நல்ல பலனை தர இயலாமல் போய் விடுகிறது. பார்க்கப்படும் அந்த ஸ்தானமும் தனது ஸ்தான பலனை இழந்து நிற்கிறது.

இதே போல இயற்கை சுப கிரகங்கள் ( குரு, வளர்பிறை சந்திரன் , தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ) பார்த்தாலும் அல்லது சேர்ந்து நின்றாலும் மிகுந்த யோகத்தை ஜாதகருக்கு சுபத்தன்மை என்ற அடிப்படையில் நல்ல பலனை தருகிறது.

ஒரு இயற்கை சுப கிரகம் பாவருடன் இணைந்து தனது பலத்தை இழந்த நிலையில் இயற்கை சுப கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளும் பொழுது அவை அதன் தசையில் நல்ல பலனை தரக்கூடிய நிலைக்கு மாறுகிறது.

உதாரணமாக சுக்கிரன் பகவான் ராகு உடன் இணைந்து தனது பலத்தை சுக்கிரன் இழந்த நிலையில் குரு பகவான் என்ற சுபர் பார்வை சுக்கிரன் இழந்த வலிமையை மீண்டும் பெற்று அதன் தசையில் நல்ல பலனை தரக்கூடிய நிலைக்கு மாறுகிறது.

ஒரு இயற்கை பாவ கிரகம் மற்றொரு பாவ கிரகத்துடன் இணைந்து பாவரால் பார்க்கப்படும் பொழுது அந்த கிரகம் கூடுதலான பாவத்தன்மை அடைந்து அதன் தசையில் கடுமையான வேதனையை ஜாதகருக்கு கொடுக்கும்.

உதாரணமாக சனி பகவான் ராகுவுடன் இணைந்து கடுமையான பாவத்தன்மை அடைந்த நிலையில் செவ்வாய் பகவானுடைய பார்வையை பெற்றால் "கொடுமை கொடுமை என்று கோயிலுக்கு போனால் அங்கு ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிக்கான்னு ஆடுது" என்பார்களே அந்த நிலையில் கூடுதலான கெடுபலனை ஜாதகருக்கு கொடுக்கும்.

சிலரது சாதகங்களில் பாவத்தன்மை மற்றும் சுபத் தன்மை ஆகிய இரண்டும் கலந்த நிலையில் அவை எவ்வாறு பலனைத் தரும் என்பதை கண்டறிவதற்கு மிகுந்த ஜோதிட ஞானம் தேவைப்படுகிறது.

இது போன்ற நிலையில் சுப மற்றும் பாவத்தன்மை கண்டறிந்து அந்த கிரக தசை எப்படி நல்ல பலனை தருமா ? அல்லது கெட்ட பலனை தருமா ? என்பதை நிர்ணயிக்க அந்த கிரகங்களுக்கு இடையே ஏற்பட்ட டிகிரியை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இரு. கிரகங்களுக்கு இடையே எட்டு பாகை அளவில் நெருக்கமாக இருந்தால் அவை தன்னோடு இணைந்த கிரகத்தினை முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது என்று பொருள் .

13 பாகை அளவில் இருந்தால் தன்னோடு இணைந்த கிரகத்தை 50% பாதிக்கிறது என்று பொருள்.

22 பாகைக்கு மேல் இருந்தால் ஒரு வீட்டில் இருந்தாலும் ஒன்றாக இல்லை என்று பொருள் .எனவே தன்னோடு இணைந்த கிரகத்தை எந்த விதத்திலும் பாதிக்காமல் இருக்கும்.

இந்த அடிப்படையில் ஒரு வீட்டில் இரண்டு மூன்று பாவ மற்றும் சுப கிரகங்கள் இணைந்து இருக்கும் பொழுது மேற்கூறிய வகையில் கணக்கில் எடுத்துக் கொண்டு பிறகு அவை சுபர் பார்வையை பெறுகிறதா? அல்லது பாவர் பார்வையை பெறுகிறதா? அல்லது எவ்வித பார்வையும் பெறவில்லையா? என்பதை பொறுத்து அதன் பலனை நிர்ணயிக்க வேண்டும்.

சில நேரங்களில் பார்வையை கணிக்கும் பொழுதும் டிகிரி அடிப்படையில் கட்டாயம் பார்க்க வேண்டும்.

உதாரணமாக மீன வீட்டில் உள்ள குரு பகவான் கடக வீட்டில் உள்ள ராகு பகவானை நாம் மேலோட்டமாக பார்க்கும் பொழுது கடகத்தில் உள்ள ராகு பகவானை குரு பகவான் தனது ஐந்தாவது பார்வையால் பார்வை செய்து சுப தன்மையை அடைய வைத்து விட்டது எனவே ராகு தசை மிகுந்த நல்ல பலனை தரும் என்று நாம் பலன் சொன்னால் சில நேரங்களில் அவ்வாறு நல்ல பலனை தராமல் போய்விடுவது உண்டு. ஏன் என்று நன்றாக ஆராய்ந்து பார்த்தால் மீன வீட்டில் உள்ள குரு பகவான் 29 பாகையில் இருக்க கடக வீட்டில் ராகு பகவான் தொடக்க இரண்டு பாகை இருக்கும்பொழுது குருபகவானின் பார்வை ராகு மீது விழுவது இல்லை.

இதே போல சேர்க்கை அடிப்படையிலும் ஒரு கிரகத்தின் சுபத் தன்மை மற்றும் பாவத்தன்மை கணக்கிட டிகிரி அடிப்படையில் கட்டாயம் கணிக்க வேண்டும்.

சில நேரங்களில் ஒரு சுப கிரகம் ஒரு வீட்டில் இருக்க அடுத்த வீட்டில் பாவ கிரகம் இருக்க நாம் அந்த சுப கிரகம் தனது ஆதிபத்தியம் மற்றும் காரக பலனை நல்ல முறையில் தரும் என்று கூறுவோம். .ஆனால் அவை நல்ல பலனை தன் தசையில் தராமல் போய்விடுகிறது.ஏன் இவ்வாறு தரவில்லை என்று நன்றாக உற்று ஆராய்ந்து பார்க்கும் பொழுது தான் உண்மை புலனாகும்.உதாரணமாக மேஷ வீட்டில் குரு பகவான் இருந்து, ரிஷப வீட்டில் சனி பகவான் இருப்பதாக வைத்துக் கொள்வோம் .

மேஷ வீட்டில் குரு பகவான் 28 பாகையிலும் மற்றும் ரிஷப வீட்டில் சனிபகவான் இரண்டு பாகையில் இருக்க இந்த குருவுக்கும், சனிக்கும் இடையே நான்கு பாகை வித்தியாசம் இருப்பதால் இரண்டு கிரகங்களும் அடுத்தடுத்த வீட்டில் இருந்தாலும் குரு பகவானை அந்த சனி பகவான் பாவத்தன்மைக்கு உட்படுத்தி விடுகிறது எனவே குரு தசை நல்ல பலனை தராமல் போய்விடுகிறது.

உதாரணமாக மேஷ லக்னத்திற்கு எட்டாம் வீட்டில் சூரியன், சந்திரன் குரு புதன் சுக்கிரன், ராகு ஆகியவை சேர்ந்து நின்று கும்பம். வீட்டில் இருந்து சனி பகவான் தனது பத்தாம் பார்வையாய் அந்த இடத்தை பார்க்கும் போது எவ்வாறு பலன் எடுப்பது என்பதையும் மற்றும் அதே லக்கினத்திற்கு எட்டாம் இடத்தில் மேற்கூறியவாறு கிரகங்கள் என்று குரு பகவான் மீன வீட்டில் இருந்து ஒன்பதாவது பார்வையாக பார்வை செய்யும் பொழுது அப்பொழுது பலன் எடுப்பதற்கும் நிறைய சோதிட ஞானம் அல்லது அனுபவம் தேவைப்படுகிறது.

ஒற்றைச் சனியின் பார்வை அந்த ஒட்டுமொத்த அமைப்பை பாவத்தன்மை அடைய வைத்து மிகவும் மோசமான நிலைக்கு அந்த ஜாதகரை கொண்டு சேர்க்கும். எட்டாம் இடத்தில் ஒற்றை குருவின் பார்வை அந்த ஒட்டுமொத்த ஜாதக அமைப்பையும் சுபத் தன்மை அடைய வைத்து சாதகரை நல்ல நிலையில் நகர வைக்கும்.

இவ்வாறு சுபர் மற்றும் பாவர் பார்வைக்கு ஏற்பவும் அந்த கிரகங்களுக்கு இடையே உள்ள பாவர் மற்றும் சுபர் சேர்க்கைகளுக்கு ஏற்பவும் பலனை எடுப்பதற்கு மிகுந்த அனுபவம் தேவைப்படுகிறது.

ஒரு இயற்கை சுப கிரகத்தை சனி மற்றும் செவ்வாய் பகவான் தனித்தனியாக பார்வை செய்து குரு பகவானும் பார்வை செய்கிறார் என்ற நிலையில் அந்த கிரகம் பாவத்தன்மை அடைகிறதா ? சுபத் தன்மை அடைந்துள்ளதா ? என்பதை கண்டறிவதற்கும் மிகுந்த அனுபவம் தேவைப்படுகிறது.

உதாரணமாக மீனம் லக்கினத்தில்
மீன வீட்டில் குரு பகவான் மிதுன வீட்டில் செவ்வாய் பகவான் கடக வீட்டில் சனி பகவான் கன்னி வீட்டில் புதன் பகவான்.

இங்கு புதன் பகவானுக்கு சனி மற்றும் செவ்வாய் தனது மூன்றாம் மற்றும் நான்காம் பார்வையால் புதனைப் பார்வை செய்கிறது. குருபகவான் லக்னத்தில் ஆட்சி பெற்ற நிலையில் சம சப்தமாக பார்வை செய்கிறது.

லக்கனத்தில் உள்ள குருபகவான் தனது ஐந்தாம் பார்வையால் சனி பகவானை பார்வை செய்வதால் குரு பார்த்த சனியின் பார்வை புதனுக்கு நல்ல மற்றும் கெட்ட பலனை தருவதில்லை. செவ்வாயின் பார்வை புதனை பாதிக்கும் என்றாலும் அவை லக்கன யோகர் என்ற வகையிலும் மேலும் லக்னத்தில் ஆட்சி மற்றும் திக்பலம் பெற்ற குருபகவான் சமசப்தமாக புதனை பார்வை செய்வதால் ஏழாம் பார்வைக்கு அதிக வலிமை என்ற வகையில் இந்த புதன் பகவான் அதிக சுபத் தன்மை அடைந்துள்ளது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறாக ஒரு கிரக பலனை கணிப்பதற்கு பலவாறு ஆராய்ந்து ஒரு குறிப்பிட்ட நிமிடத்திற்குள் பலனை சாதகருக்கு கொடுக்க வேண்டும். அந்த கிரக பலன் அல்லது அந்த கிரக தசை பலனை முடிவு செய்யும் பொழுது லக்கனாதிபதியின் வலிமையையும் கணக்கெடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் அந்த கிரகம் அம்சத்தில் சுப வர்க்கம் ஏறி உள்ளதா? பாவர் வர்க்கம் ஏறி உள்ளதா ? சுபருடன் சேர்ந்துள்ளதா? பாவருடன் சேர்ந்துள்ளதா ? என்பதையும் கவனிக்கப்பட வேண்டும் .

குரு மற்றும் சுக்கிரன் மனை ஏறுவது சுப வர்க்கம் என்றும் ,சனி மற்றும் செவ்வாய் வீடுகள் ஏறுவது பாவர் வர்க்கம் என்று கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அம்சத்திற்கு எண்கள் கிடையாது .உச்சம் ஆட்சி போன்ற ஸ்தான வலிமை கிடையாது .திருக்பலம் என்ற பார்வை பலம் மற்றும் திக்பலம் போன்றவை கிடையாது.கிரக சேர்க்கை பலனை மட்டுமே எடுத்து கொள்கிறது.

நன்றி

Online Astro Consultation

Cell & WhatsApp & gpay & phone 📱 pay
All in one mophile

097151 89647

My other cell no
7402570899

(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

0 - 0